Tuesday, March 16, 2010
வாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...
மார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று மைதிலி சிவராமன் தன பாட்டி எழுதிய டயரி மற்றும் பல குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய "வாழ்க்கையின் துகள்கள்'என்ற புத்தக வெளியீடு நடை பெற்றது,அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உமா சக்கரவர்த்தி என்ற வரலாற்று ஆய்வாளர் எடுத்த ஒரு குறும்படமும் திரை இடப்பட்டது.சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி தன மன உணர்வுகளை ஒரு இரண்டு வருட காலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுதி வந்திருக்கிறார்.தன மகள் பங்கஜத்தை சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகவில்லை.ஏற்கனவே தன இரண்டு மகன்களைப் பரி கொடுத்த துயாம் தாங்காமல் அவர் வலிப்பு நோயாளி ஆக இருப்பவர்.அவரின் கணவர் கோபாலக்ருஷ்ணன் பிரிட்டிஷ் அரசின் சால்ட் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தவர்.எனவே அவர் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓர ஊர்கள்.பெரிய வீடு.ஆனால் கணவர்,மனைவியும் மகளும் ஆக மூன்றே பேர்தான்.கணவர் வேலை நிமித்தம் நீண்ட தூரப் பயணங்களில் மாதக்கணக்கில் போய் விடும் நேரங்களில் சுப்பலக்ஷ்மி மகளுடன் தனிமையில் உசன்று கொண்டிருப்பார்.மகளின் படிப்புக்காக சென்னை வரும் அவர் எழுதிய குறிப்புகளின் ஊடே ஒரு துயரமிக்க பெண்ணின் கதை உருக்கொள்கிறது.வெண்ணிலாவின் பால் ஒளியில் மனம் பரி கொடுக்கிறார்.பறவைகளின் குரல்களில் ,செடிகொடிகளின் அழகில் இரவு வானின் மாயத் தோற்றங்களில் மனம் தொய்கிறார்.அவரின் ஒரே நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதும் கடிதங்கள் மட்டுமே அவருக்கு ஆறுதல்.அப்போது நடந்த விடுதலைப் போராட்டங்களில்,சென்னைக் கடற்கரைக் கூட்டங்களில்,பாரதி கவிதைகளில் அவரின் ஈடுபாடு தன கூண்டில் இருந்து விடுபட்டு வெளியே வர அவராக உருவாகிய வெளியாக இருக்கிறது.அந்த வாழ்க்கையின் துகள்கள்தான் எத்தனை வீறு கொண்டவையை இருக்கின்றன?புத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்?ஆனால் அது உண்மை.அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடலுடனும் உயிருடனும் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது குறும்படம்.யுரைந்து போக வாய்த்த நிகழ்வு...................!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment