Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Monday, March 12, 2012

sudaamani raagavanum raamakrishna madamum...

சூடாமணி ராகவனும் ராமகிருஷ்ண மடமும்..என்ற இந்தப் பதிவு மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி பற்றியது.தமிழின் ஆகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூடாமணி,தனது மறைவிற்குப் பின்தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவரின் பங்கு மார்கெட் வருமானம் சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,ராமகிருஷ்ண மட    தர்ம ஆஸ்பத்திரி,  வாலண்டரி ஹெழ்த் செர்விசெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.இது இப்போதைய நன்கொடை.ஏற்கெனவே ஒரு நாலரை கோடி சூடாமணியின் வீட்டை விற்று வந்த பணத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் பெற்றுள்ளன.அவரின் எழுத்துகளில் மனம் பரி கொடுத்தவர்கள் பலருள் நானும் ஒருவன்.ஒரே ஒரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டவர்களுக்காக அவருடைய சிறுகதை ஒன்றை சிறு நூலாக்க அனுமதி கேடு அவருடன் பேசினேன்."என்னோட கதைல அப்படி எதுவும் இதுக்குப் பொருத்தமா இருக்கிற மாதிரித் தெரியலை.ஆனா,உங்களுக்கு அப்படி எதானு கிடைச்சு பயன்ப ட்டா  ரொம்ப சந்தோசம்.அவ்வளவுதானே?"இதுதான் அவரின் பதில்.அவரின் நாவல்"இரவுச் சுடர்",நாடகம் "இருவர் கண்டனர்"இன்னும் நூற்றுக் கணக்கான அவரின் மணி மணியான சிறு கதைகள் எல்லாம் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்புகள் என்றால் நாம் மேலே கண்ட அவரின் நன்கொடைகள் இந்த சமூகம் கொண்டாட வேண்டிய பங்களிப்புகள்.எதனை நாம் பெரிதாகக் கருதுவது?பத்தி காண்பது சிரமம்தான்!

Friday, September 30, 2011

அண்மைக்கால நாவல்கள்

 தமிழ் நாவலுக்கு நூறு வயதுக்கு மேல் ஆகி விட்ட பின்பும்,இன்னமும் தமிழில் நாவல் என்று ஒன்று அதன் உண்மையான அர்த்தத்தில் வரவில்லை என்று சாதிப்போர் உள்ளனர்.இந்த மாதிரியான அபிப்ராயங்கள் ஒரு புறம் இருந்த போதும் இதுவரை இல்லாத வகையில் புதிய வடிவங்கள்,புதிய வண்ணங்கள் கொண்டு பல நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.வாசிப்பு அனுபவத்தில் மட்டும் இன்றி அதன் பாடுபொருள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் இவை வலிமை மிகுந்தவையே.சமீப கால நாவல்களின் விகசிப்பு மலைப்பை உண்டாக்குவது.பக்காளவு என்று பார்த்தாலும் மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளன.ஆயிரம் பக்க நாவல் என்பது சர்வ சாதாரணம். விரிந்த ஒரு கான்வாஸில் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை இந்த நாவல்கள் உயிரோவியமாகத் தீட்டுகின்றன.மொழி,சொல்,பொருள் எல்லாம் புதிது.எழுதக்கூடாதவை என்று பலகாலம் விலக்கப்பட்ட பாடுபொருள்கள் இவற்றில் மிக இயல்பாக இடம் பெறுகின்றன.இன்னொரு விசேசம் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை இடம்பெறாத விளிம்புநிலை மாந்தர்கள் இவற்றில் இடம்பெறுவது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை,அவற்றின் போராட்டங்கள்,உணர்சிக் கொந்தளிப்புகள்,அவர்கள் அடைந்த அவமானங்கள்,வெற்றிகள்,தோல்விகள்,பட்ட பாடுகள் எல்லாம் இடம்பெறுகின்ற விதம் புதியது.போரும்,அமைதியும் வெறும் செய்திகள் என்ற நிலை மாறி அவை இந்த விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வை எப்படிஎல்லாம் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்குகின்றன என்ற விசயத்தைப் பேசுகின்றன."அமைதி திரும்பிவிட்ட" போர்ப்  பிரதேசங்களில்இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை லட்சணங்கள் என்னவாக இருந்தன,இருக்கின்றன என்று உரக்கப் பேசுகின்றன.வாசிக்கவே மிகுந்த மனோதிடம் தேவைப்படும் விதத்தில் இவற்றின் விவரணங்கள் இருக்கின்றன.இவற்றில் சில நாவல்களை வாசித்த அனுபவம் இங்கு பதிவு செய்வதற்குரியது... 

Tuesday, February 8, 2011

படைப்பு நெறிகள்....பின்பற்ற வேண்டாமா?

படைப்புத் தொழில் மட்டும் இன்றி எந்த ஒரு பணிக்கும் சில நெறிகள் உண்டு.ஆனால் படைப்பாளிகளிடம் இந்த நெறிகளை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.காரணம் உலகின் நெறிகெட்ட செயல்களை எல்லாம் சாடுகிரவர்கள் படைப்பாளிகள் என்பதுதான்.இன்று வாசிக்க நேர்ந்த ஒரு கட்டுரை,ஒரே ஒரு எழுத்துக் கூட மற்றம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு இதழ்களில் வந்துள்ளது.எழுதியவர் ஒன்றும் சாதாரணமான ஊர் பெயர் தெரியாத எழுத்தாளரும் அல்ல.இன்று சமகாலத் தில் எழுத்தாளர்கள் நன்கு அறிந்த ஒருவர்.ந.முருகேச பாண்டியன் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதிய கட்டுரை அது.உயிர் எழுத்து பத்திரிகையிலும் புதிய புத்தகம் பேசுது வெளியிட்டுள்ள தமிழ் தொகுப்பு நூல் வரலாறு சிறப்பு மலரிலும் ஜனவரி இதழ்களில் அந்தக் கட்டுரை ஒரே சமயத்தில் வெளி வந்துள்ளது.இது எப்படி நேர்ந்திருக்கும்?ஒரு இதழுக்கு அனுப்பிய கட்டுரை வெளி வருகிறதா இல்லையா என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லை என்றால் முதலில் அனுப்பிய இதழுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து விட்டு வேறு இதழுக்கு அதே கட்டுரையை அனுப்பலாம்.அது எழுதியவரின் உரிமை.ஆனால் இப்படி இரண்டிலும் ஒரே கட்டுரை ஒரே நேரத்தில் வெளிவரும் வகையில் முருகேச பாண்டியன் செயல் அமைந்து இருப்பது வருத்தம் தரும்விதத்தில் இருக்கிறது.                                                            இது எந்த வகையில் படைப்பு நெறி சார்ந்த செயல் என்று எழுதியவர்தான் சொல்ல வேண்டும்.....!

Saturday, January 15, 2011

படைப்பும் பயணமும்

மனித வாழ்க்கையில் ஒரு புதிய உயிர் ஜனிப்பது என்பது எத்தனை அற்புதமான விஷயம் என்பது அருகில் இருந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.கருவில் இருந்து வெளியில் வரும் வரை அந்த உயிரைச் சுமக்கும் தாயின் வேதனை என்ன,அது எப்படி ஒரு சுமையாய் அந்தப் பெண்ணின் உடலில் பத்து மாதங்கள் வரை தங்கி இருந்து பிரசவம் ஆகும்வரை படுத்தி எடுக்கிறது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள்.மானுடப் படைப்பின் இந்த அதிசயம்,வாழ்க்கை பயணத்தில் ஒரு காவியத் தன்மை வாய்ந்த ஒன்றுதான்.பயணம் தொடரும்...........!

Wednesday, August 25, 2010

தலைநகரில் சில தினங்கள்..........!

இந்த மாதம் பதினேழாம் தேதி டெல்லி செல்ல நேர்ந்தது.இருபதாம் தேதி அங்கு அலுவலக முறையிலான கூட்டம் ஒன்று இருந்தது.அதை முடித்த பின் திரும்பும் தேதி இருபத்தி இரண்டு என்று அமைந்தது.டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட நன்மை அல்லது தீமை என்று சொல்லலாம்.நன்மை---அங்கு ஓரிரண்டு தினங்கள் இருக்க முடிந்தது.தீமை?அதைப் பிறகு பார்ப்போம்.இதற்கு முன்பும் நான்கு முறை டெல்லி போய் இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அந்த நகரம் எனக்கு வியப்பையும்,மகிழ்ச்சியையும்,துயரத்தையும்,ஆர்வத்தையும் இன்ன பிற உணர்வுகளையும் தருவது ஆகவே இருந்து வருகிறது.நேரில் டெல்லி அறிமுகம் ஆவதற்கு மிகவும் முன்னதாகவே அந்த நகரின் சில பதிவுகளை ஆதவனின் "காகித மலர்கள்",இந்திரா பார்த்தசாரதியின் "தந்திர பூமி","சுதந்திர பூமி"போன்ற நாவல்கள் வாயிலாக அறிந்து வைத்திருந்தேன்.ஆனால் நேரில் பார்ப்பது,அறிவது என்பது முற்றிலும் வேறு.யமுனை என்னும் நதியின் அழகும்'தாஜ்மகாலின் சௌந்தர்யமும்,செங்கோட்டையின் கம்பீரமும்'ஆக்ரா கோட்டையின் துயரம் பொதிந்த மௌனமும்,லோதி கார்தேனின் பசுமைதொய்ந்த உயிர்த் தாவரங்களும் பார்லிமென்ட், ராஷ்ட்ரபதி பவன் போன்ற பிரம்மாண்டங்களின் அச்சுறுத்தும அதிகாரத் தொனியும் எல்லாமும் ஒரு சாதாரண மனிதனின் மனதில்  தாழ்வு மனப்பான்மையையும், இழப்புணர்வையும்,ஏக்கத்தையுமே  தரக் கூடியவை.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்நடத்துவதற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அங்கு நடைபெறும் பணிகளும்,அவட்ருக்கானசெலவுகளும் பற்றிய அவலக் கதைகளை ஊடகம்களின் வாயிலாக தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம்.நேரில் பார்கையில் அதன் அவலம் நெஞ்சை பிளந்தது.நவீன,புதிய தாராளமயம்,உலகமயம்,தனியார்மயம் என்ற தாரக மந்திரங்களின் அக்டோபஸ் பிடியில் இன்று நம்மை ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள்.ஆகவே,நாமும்!                யமுனை நதியைப் பற்றிய என் கற்பனைகள் முதல் முறை டெல்லி போனசமயம் சுக்கு நூறாகி இருந்தன.அந்த நதியின் ஒரு ஓரம் சாக்கடை ஒன்று ஓடுவதுதான் அன்று நான் கண்ட யமுனை.ஆனால் இந்த ஒரு வாரமும் ஏன்,அதற்கு முன்பிருந்தே பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மழையின் விளைவாக அங்கு இப்போது அதன் இரு கரைகளும் கொள்ளாமல்,அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.அங்கு மட்டும் இன்றி வரும் வழிஎல்லாம் அணைத்து மாநிலங்களிலும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் இப்போது நீரில் மூழ்கி கிடக்கின்றன.பெய்தும் கெடுக்கும்,காய்ந்தும் கெடுக்கும் என்று மக்கள் நோகிற சொலவடை எவ்வளவு உண்மை?                          எண்ணங்களின் வெள்ளமும் அதே அளவுக்குப் பிரவாகம் எடுத்துப் பெருகித்தான் பாய்ந்தது.ஆனால் அவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வரத்தான் முடியவில்லை...................!

Sunday, April 18, 2010

அறிவியல் கட்டுரைகள் உலகப் பொதுவானவை...!

அறிவியல் உலகம் இன்று விரிவும் ஆழமும் பெற்று வருகிற காலம்.புதிய புதிய ஆராய்சிகள் நடைபெறுகின்றன.புதிய முடிவுகளுக்கு விஞ்ஞானிகள் தம் ஆய்வின் முடிவில் செல்கின்றனர்.அந்த ஆய்வின் முடிவுகள் உலகம் முழுவதும் உள்ள சக விஞ்ஞானிகளின் கவனத்திற்குப் போக வேண்டும் என்று விரும்புகின்றனர்.வெளிநாட்டு அறிவியல் இதழ்கள் எதிலாவது அந்த ஆய்வின் முடிவுகள் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் அம்மாத்ரி இதழ்களின் சந்தா மிகவும் அதிகம்.தனி நபர்களால் அந்த இதழ்களை வாங்க முடியாது.பெரும்நிருவனங்கள் கூட வாங்க முடியாத நிலை. இந்த நிலை பற்றி முது.மதன் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.திறந்த வெளி அணுகுமுறையின் மூலம் நாமே அம்மாதிரியான இதழ்கள் நடத்தவும்,அவற்றில் நம் ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிடும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முத்து.மதன்.இந்தியா போன்ற நாடுகளின் ஆராய்சியாலர்களுக்கு வேறு என்ன மாற்று?

Sunday, April 11, 2010

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்....

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்.......மார்ச் மாதம் பதிவுக்குப் பின் வேறு ஒரு பதிவும் செய்ய முடியாமல் வெளியில் அலைந்து கொண்டிருந்தேன்.இன்று படித்த சில வாக்கியங்கள் இப்படி உட்கார வைத்தன."உங்கள் எழுத்தின் ஊடே நீங்கள் மூச்சு விட்டுக்கொள்ள தவறினால்,உங்கள் எழுத்தில் நீங்கள் கதறிக் குரல் எழுப்பவில்லை என்றால்,உங்கல் எழுத்தின்  இடையே நீங்கள் பாடவில்லை என்றால் பிறகு நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்கள்.நமது கலாச்சாரத்திற்கு உங்கள் எழுதினால் ஒரு பயனும் கிடையாது...!"      மிக ஆழமான சிந்தனைகளை எழுப்பும் கருத்து இது.ஒவ்வொரு எழுத்தாளனும் தன அனுபவத்தில் உணர்கிற ஒன்றினை இந்த வரிகள் சொல்லுகின்றன.நாம் உணர்கிரவற்றை உணர்ந்தபடி முழுமையாகக் கொண்டு வர முடியாவிட்டாலும்,பெரும் அளவுக்கு படிக்கிறவர்கள் உணரும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் எழுதும் ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் கதறிக் குரல் எழுப்பித்தான் ஆக வேண்டும்.ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் நம் ஆத்மா இசைக்கும் பாடல் ஒன்றின் சாயலையாகிலும் கோடிட்டுக் காட்டி இருக்கவேண்டும்.வெளியில் வரத் தவித்துக் கொண்டு அலை மோதும் மூச்சு நம் e ழுத்தில் சுதந்திர உணர்வுடன் பீரிட்டு வந்திருக்க வேண்டும்.இப்படி உணர்ந்து எழுதினால் எழுத்தின் ஜீவனை வாசிப்பவர்கள் நன்றாக உணர முடியும்.இது நம் ஆசை.நிறைவேற வேண்டும் அல்லவா?

Friday, December 11, 2009

bhaarathi pirantha naal...............!

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்.தமிழ் மொழிக்குப் புது ரத் தம் பாய்ச்சிய சில பெரியோருள் பாரதி ஒரு சிகரம்.அவரின் பாடல்களை இன்று வானொலியும் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தி கொண்டிருந்தன.அமரத்துவம் வாய்ந்த கவிதை மலர்களைப் பூக்கச் செய்த குறிஞ்சி மலர்ச் செடி அவர்.வசன கவிதையும்,சிறுகதை வடிவ முயற்சிகளும்,கார்ட்டூன்களும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த புதிய வடிவங்களில் சில.                                எத்தனை விதமாய் யோசித்தாலும் அந்தக் கவி உள்ளம் முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.இன்றைய வாழ்க்கைச் சூழல்களை மனதில் கொண்டு அவரை ஏதாவது ஒரு முத்திரை குத்தி சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எதிலும் அடங்காமல் அந்தக் கவி உள்ளம் நிற்பதிலும்,நடப்பதிலும்,பறப்பதிலும் லயித்துக் கிடந்திருக்கிறது.காற்று சற்று வேகமாய் வீசினால் கூட காற்றே,மெதுவாய் வீசு என்று வேண்டிக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது.                                                                                                                                                  மனிதர்கள் எருமைகளைப் போல் ஈரத்தில் உழன்று கிடக்கிறார்கள் என்று நொந்து கொள்கிற உள்ளம் அந்த உள்ளம்.நமது கரங்களில், கண்களில் சொற்களில் சிந்தனைகளில்,எல்லாவற்றிலும் மின்னல் சொடுக்குக என்று வேண்டிய கவி மின்னல் அது.சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காத மனிதர்களைச் சாடும் சவுக்கு அது.படிக்கும் போதே மனப் பரப்பில் அமுத மழை போல் பொழியும் கவி மழை அது.நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று உணர்த்திய வழிகாட்டி அவர்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும்  சீர்மிகு சிந்தனைகளின் களஞ்சியம் அது.வேறென்ன சொல்ல?

Wednesday, December 2, 2009

ithu varaiyilaana pathivukal.............!

எனது சிந்தனைகளை இப்படி வலைப்பூவில் பதிவு செய்யத் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன.நான் படித்த விசயங்களை,என் படைப்புகளில் இருந்து சில பதிவுகளை,என் கவனத்திற்கு வந்த நிகழ்வுகள் மீதான என் கருத்துக்களை,பிற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றி,இப்படி அவ்வப்போது தோன்றிய கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்து வருகிறேன்.அவற்றில் ஒரு நான்கு பதிவுகள் தமிளிஷ் மூலம் பிரபலமான இடுகைகள் ஆக தேர்வாகவும் செய்தன.எங்கெங்கோ இருந்து இப்பதிவுகளைப் படிக்கவும்,பாராட்டவும்,புறக்கணிக்கவும்,பார்த்து விட்டு எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் இருந்து விடவுமாக நாட்கள் ஓடுகின்றன.மற்ற ஊடகங்களை விட இங்கு உடனே எதிர்வினைகள் என்ன என்று தெரிந்து விடுகின்றன.                                                                         தூங்கும் நினைவுகள் என்ற நா.பா.வின் குறுநாவல் இப்போது என் மனப் பரப்பில் ஓடுகிறது. அவரின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த சிலவற்றில் இதுவும் ஒன்று.ஒரு மலைகாடு சார்ந்த கிராமம் ஒன்றில் ஆசிரியர் பணி செய்யும் கதை சொல்லி,தன அடிமனதில்  மறைந்து கிடந்த சோகக்கதை ஒன்றை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிறார்.நா.பாவுக்கே உரிய மேன்மை கொஞ்சும் தமிழில் இந்தக் குறுநாவல் எழுதப் பட்டிருக்கும்.நினைவுகளின் சுமையைப் போல் கனமான வேறொன்று கிடையாது.இதை படிக்கும் அனைவர் மனதிலும் அந்த சுமை பாறாங்கல் போல் இறங்கும்.நமது பதிவுகளின் சுமையை நாமே சுமக்க முடியாமல் திணறிப் போவோம்.............!

Sunday, November 29, 2009

sol ondru vendum...........!

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்பார் பாரதி.சொல்லாட்சி என்பதன் உச்சத்தை பாரதியிடம் பல வரிகளில் காண முடியும்."கால நடையினிலே நின்றன் காதல் தெரியுதடீ' என்பது ஒரு உதாரணம்.காதலியின் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போது காலம் மெல்ல நகரும் உணர்வு இருக்கும்.அந்த நகர்வை நடை என்று உருவகப் படுத்துகிறார் பாரதி.சொற்களின் வலிமை இலட்சியவாதிகளின் பேச்சுக்களில் ஸ்தூலமாக வெளிப்படுவதைக் காண முடியும்.புகழ் பெற்ற சில பேச்சுக்களில் இந்த வலிமை நம் கண்ணெதிரே  பொருந்தித் தெரிவதைக் காணலாம்."செயல்,அதுவே சிறந்த சொல்" என்கிறார் ஹோசே மார்த்தி.சொல்வதில் இன்பம் காண்கிற பலர் செயல் என்று வரும் போது பதுங்கிக் கொள்வதைக் காண்கிறோம்.                                       சொற்களை பூக்களைத் தொ டுப்பது போலத் தொடுத்து படிப்பவர் நெஞ்சில் நீண்ட காலம் வரை நிலைத்து இருக்கும் படிச் சொன்னவர் தீபம் நா.பா.அவரது ஆழ்ந்த தமிழ்மொழிப் புலமை அதற்கு நல்ல சாதனமாக அமைந்தது.அவரளவுக்கு மென்மையான முறையில் மொழியைக் கையாண்டவர்கள் தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைவு.குறிப்பாக அவரின் 'மணிபல்லவம்","குறிஞ்சி மலர்""தூங்கும் நினைவுகள்","பொன் விளங்கு""ஆத்மாவின் ராகங்கள்","மலைச் சிகரம்", போன்ற நாவல்களிலும் நவநீத கவி என்ற அவரின் கவிஞர் பாத்திரம் ஒன்று எழுதியதாக நா. பா. எழுதிய சில கவிதை வரிகளிலும் இந்தச் சொல்லின்பதைக் காண முடியும்.ஒரு உதாரணம்: அவரின் பொன்விலங்கு நாவலில் நவநீத கவியின் கவிதை வரிகள்............"எண்ணத் தறியில் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய்,முற்றும் கற்பனையா....."என்று வரும் பகுதி.அவரின் எல்லாப் படைப்புகளிலும் கவித்துவமும்,சொல்லாட்சியும் இனிமை நிறைந்த ஒரு இசைக்காவியம் போல் நம் நெஞ்சில் பதியும் வல்லமை padaiத்தவை. வாசிக்க வாசிக்க மனப் பரப்பில் அமுதமழை போல் ப்ய்யக்கூடியவை...!

Friday, November 27, 2009

intha mannin vaasanai.....................!

இந்த மண்ணின் வாசனை, இதற்கு ஏது ஈடு இணை? என்றொரு பாடல் உண்டு.நாம் வாழ்கிற மண் குறித்த பெருமிதம் இந்தப் பாடலின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.தமிழ் மண்ணில் பிறந்த யாரும் இந்தப் பெருமிதத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க இயலாது.யாதும்   ஊரே யாவரும் கேளிர்என்று ஒலித்த குரல் நம் தமிழ்க் கவிஞர் ஒருவருடையது.நாடாய் இருந்தால் என்ன,காடாய் இருந்தால் என்ன,எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்கள் ஆக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் என்று மண்ணைப் போற்றிப் பாடுகிறார்  ஔவையார். இன்று நாம் வாழும் வாழ்க்கையில் இந்தப் பெருமிதத்திற்கு இடம் இருக்கிறதா?                                                                                                                                                              அரசியலின் பண்புகளும் சாதீயத்தின் கூறுகளும் இன்று இப்படிப் பெருமிதங்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டன.மானுட மேன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு இயங்க வேண்டிய எழுத்தாளர்கள் கூட இன்று சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கிய உலகில் உழன்று கொண்டிருக்கும் எனக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தான் இப்படி சாதி அட்டை மாட்டிக் கொண்டுதிரியும் எழுத்தாளர்களை இனம் காண முடிகிறது.இதனை ஆண்டுகள் நாம் எழதியும்,படித்தும் தெரிந்து கொண்டது உண்மையில் என்ன என்ற கேள்வி குடைகிறது மனதில்.நந்தனின் கதையும்,கீழ வெண்மணியும்,திண்ணியமும்,உத்தப்புரமும் இன்று நம் சமூகத்தின்   மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.எங்கே வேர், எங்கே நீர் என்று தெரியாமல் இந்த அசுர  விருக்ஷம் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மண்ணில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.தந்தை பெரியாரும்,மணியம்மையும்,மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரும் இன்னும் எவ்வளவோ பெரியவர்களும் போராடிய இந்த மண்ணில் இன்று சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நண்பர்களின் வெளிப்பாடுகள் நாம் பெருமிதப் படும் வகையில் இல்லை.என்ன செய்யலாம்? 

Tuesday, November 24, 2009

கார்பன் பூட்ப்ரின்ட்-குளோபல் வார்மிங்-சில சிந்தனைகள்......

கடற்கரை மணலில் நடக்கையில் நம் காலடிச் சுவடுகள் பதியும் அழகில் மனம் லயிக்காதவரகள் உண்டா?கடற்கரை  மணலில் இப்படிப் பதியும் சுவடுகளும்,சின்னகுழந்தைகள் கட்டும் மணல்வீடுகளும் அழகின் வெளிப்பாடுகள்.இன்று எழுதும் கவிஞர் முதல் பண்டைய இலக்கியவாதிகள் வரை இந்தக் கடற்கரைக் காட்சிகள் பற்றி எழுதத் தவறியது இல்லை.ஆனால் இன்று சுற்றுச் சூழல் பற்றி ஆராய்கிறவர்கள் கார்பன் காலடிச் சுவடுகள் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்கள்."புவி  வெப்பம் அடைதல்" என்கிற விஷயம் இன்று மிகவும் பரபரப்பான ஒரு அம்சமாக மாறி இருக்கிறது.மனித இனம் இன்று தன அமைதியான வாழ்க்கையைத் தானே அவலம் மிக்கதாக மாற்றிக் கண்டு வருகிறது.அந்தமாதிரி அவலங்களில் ஒன்றுதான் இந்த கார்பன் வெளியிடும்  சாதனங்களும்,அதன் விளைவாகப் பூமி வெப்பம் உயர்ந்து கொண்டே போவதும்.ஒவ்வொரு மனிதரும் வெளி உலகில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வாகனங்களும்,வீடுகள்,கடைகள்,தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்திருக்கும் குளிர்சாதன இயந்திரங்களும் வெளியிடும் கார்பன் வாயுவினால்  பூமிப் பரப்பிற்கு மேல் உள்ள ஓசோன் படலம் ஓட்டையாகி அது பெரிதாகிக் கொண்டே போவதும்,இந்த வாயு பூமிக்கு மேல் ஒரு கனத்த போர்வையாகி வெப்பம் குறைய விடாமல் மூடிக் கொண்டு இருப்பதும் பூமி வெப்பம் அடையும் அவலத்திற்குக் காரணங்கள்.இதைக் குறைக்க என்ன செய்யலாம்?முடிந்த வரை கார்பன் வெளியிடும் சாதனங்களின் உபயோகத்தைக் குறைக்கலாம்;கார்பன் வாயுவை உள்ளே ஈர்க்கும் மரங்களை உலகெங்கும் எவ்வளவு அதிகம் வளர்க்க முடியுமோ அவ்வளவு அதிகம் வளர்க்கலாம்.கார்களில்     போகாமல் சைக்கிள் அல்லது நடந்து போகலாம்.இல்லை என்றால் என்ன ஆகி விடும்?பூமியின் வெப்பம் உயர உயர துர்வப் பிரதேசப் பனிப் படலங்கள் உருகும்.கடல் மட்டம் உயரும்.பூமியின் வெப்பம் தாங்க முடியாத அளவு உயர்ந்து கொண்டே போவதால் மனித இனமும் பிற உயிரினங்களும் வாழ்வதே பெரும் பிரச்னை ஆகி விடும்.என்ன செய்யப் போகிறாய்?............!

Saturday, November 21, 2009

annal ambethkarum kalviyum..........!

இந்தியா விடுதலை பெற்ற பின் அதன் அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பியான அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்த ஒருவர்.தன ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன் மொழிகிறார்.அவை:  "பொதுக் கல்வித் துறையிலும், சட்டக் கல்வித்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அறிவியல்,பொறியியல் துறைகளில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.வெளிநாடுகளின் பல்கலைககழகங்களில் உயர் தரக்கல்வி கற்பதென்பது எட்டாக் கனியாக உள்ளது.அறிவியலிலும்,தொழில் நுட்பத்திலும் உயர் தரக்கல்வி கற்பதுதான் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு உதவும்;ஆனால் சர்க்காரின் உதவி இல்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா.....!"என்கிறார் அம்பேத்கர்.இந்தக் குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும்?நம் மகா கவி பாரதி தரும் பதில் இதுதான்.:"உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள்.அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அதனை ஸ்தாபனம் செய்யுங்கள்.."என்பது பாரதி காட்டும் வழி.உனக்கு நீயே விளக்கு என்றவர் புத்தர்.அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விசயங்களைக் குறிப்பிடுகிறார்.:"ஒன்று,கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று,மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்..."இது போல் இந்தியாவின் கல்வி வரலாற்றில் மாபெரும் மனிதர்களின் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன...........!

Friday, November 20, 2009

valaippoovum vaasakarkalum....................!

வலைப்பூ என்பது இன்று ஒரு சக்தி மிக்க வெளிப்பாட்டு ஊடகம் ஆகி இருக்கிறது.இதில் இடுகைகள் பதிவு செய்யும் நண்பர்கள் தம் மனதில் தோன்றும் எண்ணங்களை வண்ணங்கள் நிறைந்த வானவில் போலத் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஊடகத்தையும் எழுத்துலகத்தையும் ஒப்பிட்டு பதிவர் ஆதிமூல கிருஷ்ணன் எழுதியிருக்கும் இடுகை சுவையான் சில உண்மைகளை நம் முன் வைக்கிறது.ஒரு இடுகையை பலரும் விரும்பிப் படிக்க வைக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று அவர்சொல்லும்  டிப்ஸ் பயனுள்ள ஒன்று.அவரின் நீண்ட அனுபவம் இதில் தெரிகிறது.ஆனால் அச்சு ஊடகத்தில் எழுதும் எழுத்தாளர்கள் தம் எண்ணங்களுக்கு எதிர்வினைகளை உடனே பெற முடிகிறது என்று அவர் கூறுவது விவாதத்திற்குரிய ஒரு கருத்து.என் முப்பத்தைந்து ஆண்டு கால அனுபவத்தில் அச்சில் வரும் நமது படைப்புகள் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கடைசி வரை தெரியாமலே போகிற நிலைதான் பெரும்பாலும்.இன்றைய சூழலில் திரையுலகம் சார்ந்து  இயங்கும் எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் பாபுலாரிட்டியின் விளைவாக அவர்களின் படைப்புகள் உடனுக்குடன் நூல் வடிவம் பெறவும்,அவை உடனே வாசகர்கள் கைகளில் சென்று சேரவும்,அவர்கள் அந்தப் படைப்புகள் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் வாயிப்பு இருக்கலாம்.ஒரு காலம் இருந்தது.அப்போது அகிலன்,கல்கி,தீபம்.நா.பார்த்தசாரதி,சாண்டில்யன்....இப்படிப் பல எழுத்தாளர்கள் மிகப் பிரபலங்கள் ஆக தமிழ்ச் சூழலில் இருந்தார்கள்.எழுதுபவர்கள் மிகக் குறைவு;வாசகர்கள் அதிகம். இப்போது போல தொலைக்காட்சியோ,இண்டர்நேட்டோ இல்லாத காலம் அது.எனவே மேற்கண்ட எழுத்தாளர்கள் எழுத்து படைப்புகளில் மனம் பறிகொடுத்து நாங்கள் எல்லாம் பைத்தியங்கள் போலத் திரிந்தோம்.தமிழ்வாணன் எழதிய  சங்கர்லால் துப்பறியும் கதைகளை வரும் சங்கர்லாளையும்,இந்திராவையும்,கத்தரிக்காயையும் உண்மையான மனிதர்கள் ஆகவே   நினைத்துக் கொண்டு கடிதம் எழுதுவோம்.தமிழ்வாணன் தானேதுப்பறியும் நிபுணராக வரும் கதைகள் படித்த பின் அவர் போலவே கற்பனையில் திரிந்து வந்திருந்த காலங்கள் நினைவிலாடுகின்றன.நா.பா.வின் குறிஞ்சி  மலரும்,பிறந்த மண்ணும், poன்விலங்கும் இன்னும் பல நாவல்களும் படித்த பின் அவரின் கதாநாயகர்கள் அரவிந்தன்,சத்யமூர்த்தி,நவீனன்,போலவும் பெண்களில் பூரணியையும்,மோகினியையும்,சுரமஞ்சரியையும் போலவும் வாசகர்கள் கற்பனை செய்து கொள்வது மிக சாதாரணம்.இன்று எழுதும் யாருக்கும் அப்படி ஒரு வாசகப் பரப்பு இல்லை.வலைப் பதிவுகள் இன்று வீட்டில் இருந்து கொண்டே யாருடைய தயவும் இன்றி அவரவர் எண்ணங்களை உடனுக்குடன் உலகம் எங்கும் சென்று சேரும் வகையில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யக் கூடிய ஒருஅற்புதமாக இருக்கின்றன.ஆயிரமாயிரம் வலைப் பூக்கள் மலரட்டும்............!

Thursday, November 19, 2009

kalviyin karaikalil......................!

நேற்று என் இடுகையில் கவிஞர் யுகபாரதியும் நானும் உரையாடிய ஒரு அனுபவம் ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். படிக்காத மனிதர்களுக்கு கல்வி போய்ச் சேர வேண்டும் என்று பாடுபடும் பலர் ஒன்றும் பெரும் அதிகாரம் படைத்தவர்கள் ஆகவோ,பெரும் செல்வந்தர்கள் ஆகவோ இருப்பவர்கள் அல்ல என்ற உண்மையை அவர் சொன்ன ஒரு நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.இந்தக் கருத்து என் சொந்த அனுபவத்தில் பல அற்புதமான மனிதர்களைப் பார்த்தும் பழகியும் நேரடியாக உணர்ந்த ஒன்று.இந்தியா விடுதலை பெற்ற பின் நாம் அமைத்த முதல் கல்விக்குழு கோதாரி குழு ஆகும்.அதன் முதல் செயலாளர் ஆக இருந்தவர் திரு.ஜே.பி.நாயக்.உநேச்கோ அமைப்பினால் உலகின் சிறந்த கல்வியாளர்களின் பட்டியலில் குறிப்பிடப் பெற்றவர் இவர்.இவர் எழுதிய "கல்விக்குழுவும்,அதன் பிறகும்"என்ற நூலில் இந்தியக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று கோத்தாரி குழு எதிர்பார்த்ததோ அந்த மாற்றங்கள் நடந்ததா என்று திறந்த மனதுடன் நேர்மையாக ஆராய்கிறார்.தான் தயாரித்ததுதான் என்றாலும் அந்தக் குழு அறிக்கையைக் கூட விமர்சன பூர்வமாக அணுகி,அதன் பலவீனங்களை,விடுபடல்களை,-ஏன்,அதன் போதாமையைக் கூட வெளிப்படையாக எழுதி இருக்கிறார்.அதன் முன்னுரையை எழுதி இருப்பவர் மொல்கம்  எஸ்.அதிசெசய்யா.அவர் தன முன்னுரையில்,"எந்த ஒரு நாட்டிலும் அதனுடைய கல்வி வாழ்க்கை என்பது படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் போன்றது;அது கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்ரைச் செழுமையான உள்ளேடு ஆகக் கொண்டு உயிர்ப்புள்ள நீர்ப் பெருக்காயிப் பாயும்"என்கிறார்.நமது இந்தியக் கல்வித்துறையின் வரலாற்றைத்  திரும்பிப் பார்த்தல் அவசியம்.அவ்வாறு பார்க்கும் பொது அது மேற்க்கண்டவாறு தொடர் நீரோட்டம் ஆக இருப்பதை உணர முடியும்.ஆனால் படிப்படியாக அது மாறிக் கொண்டே வந்திருக்கிறதா,கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்றைச் செழுமையான உள்ளீடாக அது தன்னுள் உள்வாங்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இன்றும் நம் நாட்டுப் பெண்களில் கிட்டத் தட்ட நாற்பது சதவீதம் பேர் படிக்காதவர்கள் என்பதை நினைக்கும் வேளையில் மனம் மிகவும் கனமாகி விடுகிறது.இந்தச் சூழலில்தான் பிறரைப் படிக்க வைக்க பஸ் நிலையத்தில் படுத்துத் தூங்கிக் கூட சேவை செய்யும் அசாதாரணமான சேவையாளர்களை நன்றியுடன் வணங்க வேண்டிஇருக்கிறது................!

Monday, November 2, 2009

nava naveenak kuralkal............

இன்று தமிழ எழுத்தாளர்கள் நடுவே நிகழ்ந்து வரும் சில விவாதங்கள் படிக்கப் படிக்க வேதனை அளிப்பதாக உள்ளன.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சாதி குறிப்பிட்டுத் திட்டிக் கொண்டு இருப்பதுதான் அது.நவீன,நவ நவீன,அதி நவீனக் குரல்களாகத் தமது குரல்களைத் தாங்களே குறிப்பிடுவது இன்னொரு கொடுமை.நமது சமூகத்தின் அழிக்க முடியாத அநீதியாக நீடித்து இருந்து வரும் சாதி சார்ந்த பார்வைகளை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இன்று தூக்கிப் பிடிப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.மிகப் புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளர்கள் கூட இதற்குஅப்பர்ப்பட்டவர்கள்  அல்ல என்பது வேதனை.படைப்புக்களில் எங்கேனும் அவரவர் சாதி அம்சங்கள் அவர்களை அறியாமலேயே பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.அவரவர் குடும்ப,கலாசார,பழக்க வழ்க்கங்கள் இம்மாத்ரிப் பிரதிபலிக்கும் போது அவர்கள் சாதி உணர்வுடன்தான் இந்த இடத்தில இன்ன மாத்ரி எழுதி இருக்கிறார்கள் என்று முத்திரை குத்துவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் இன்று  மிக அதிகம் ஆகி விட்டன.இதன் மூலம் சமூகப் பரப்பில் இருந்தே துடைத்து எறியப் பட வேண்டிய ஒரு அவலத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்து மீண்டும் ஒரு பெரும் அழிவுச் சக்தியாக வளர்க்கிறார்கள்.ஏற்கனவே பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகள் இந்த சாதி வெறிக்கு நீர் ஊற்றி உரம் இட்டுப் பேரு மரமாக வளர்த்து விட்டாயிற்று.மானுட மேன்மைக்குப் பாடுபட வேண்டிய இலக்கியத்திலும் இந்த அவலமா?

Wednesday, October 28, 2009

மண்ணில் நல்ல வண்ணம்

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்கிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல்."எந்த மார்க்கமும் தோன்றி இலது;என் செய்கேன்,ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே?" என்று பாரதி பாடுகிறார்.காரணம்?

"மாந்தர் பால் பொருள் நோக்கிப்பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை"என்பது பாரதியின் பதில்.விடுதலை வேள்வியில் தன வாழ்வை ஆகுதியாகிய கவிஞன் பாரதிக்கே இப்படி ஒரு விரக்தி ஏற்ப்பட்டது என்றால் சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

"நான் பிறந்தது இந்த நாட்டில்;இந்த மண்ணை நான் நேசிக்கிறேன்.இங்கிருந்து என்னை வெளியேறுமாறு சொல்கிறீர்களே,நான் எங்கே போவேன்?" இந்தக் கேள்வியை லண்டன் பி.பி.சி. நிகழ்ச்சியில் ஒரு நண்பர் இக கேள்வியை எழுப்பி இருக்கிறார்."மண்ணின் மைந்தர்களுக்கே அந்தந்த மண்ணில் வேலை, வாழ்க்கை,இருப்பிடம்-"--என்று ஒரு முழ்க்கம் இப்போது உலகு எங்கும் பரவி வருகிறது.அயலவர் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைதமது   மண்ணில் இருந்து வெளியேறுமாறு கூறுவதே இந்த முழக்கங்களின்அடி நாதமாக இருக்கிறது.

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"என்று வாழ்வின் இலக்கணம் கண்ட மண் நம் தமிழ்  மண்.எனவே இந்த மண்ணின் மைந்தர் என்ற முழ்க்கம் நமக்கு உடன்பாடானதாக இருக்காது.நமக்கு மட்டும் இன்றி உலகில் சக மனிதர்களை நேசிக்கும் எந்த ஒருவருக்கும் ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்தாக இருக்காது.ஆனால் இன்று உலகின் பல பகுதிகளிலும் இப்படியான மனித விரோதக் கருத்துக்கள் விசிறி விடப் படுவதை நாம் பார்க்கிறோம். இது அறிந்தும் அறியாமலும் பரப்பப் படுகிற போது சக மனிதர்களை விரோதியாகப் பார்க்கும் போக்கு பரவுவதை நாம் காண்கின்றோம்.

உலகின் எந்த மூலையிலும் யாரும் சென்று உழைக்கவும்,பிழைக்கவும்,பகிர்ந்து உண்ணவும்,ஒன்றி நேசித்து வாழ்வும்,அன்பு செய்யவும்,அன்பினால் நனைக்கப் படவும் கூடிய ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும்.ஆனால் நடைமுறையில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப் படுவதும்,அதை உலகமே வேடிக்கை பார்த்துக் "கவலை" தெரிவிப்பதையும், கண்டனம் தெரிவிப்பதையும் செய்வது அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

நாம் படித்த எல்லா நீதிகளும்,போர் நெறிகளும்,சர்வதேச நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்படுவதை கையறு நிலையில் நின்று பரிதவிப்புடன் காண்கிறோம்,ஒரு காலத்தில் உலகப் பொதுமைக்கு சான்றுகள் என்று நாம் நினைத்த நாடுகள் கூட மனித குல விரோதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு மானுடப் படுகொலைகள் நிகழ்த்தியதை காணும் அவலம் நமக்கு நேர்ந்தது,அவரவர் நிலைக்கு நியாயம் கற்ப்பிக்க அவரவர் தரப்பு வாதங்கள் இன்று மயிர் பிளக்கும் "நுண்மான் நுழை புல"நுணுக்கங்களுடன் புவிப் பரப்பெங்கும் பரப்பப் பட்டு வருகிற நேரம் இது.

எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இதயம் பதற இந்த மானுடப் படுகொலைகள் பற்றி யோசிக்கும் ஒருவனின் குற்ற உணர்வுக்கு எது வடிகால்?அரசியல் விர்ப்பன்னர்கள் இந்த நிலைமை பற்றி ஆயிரம் விளக்கங்கள் தரலாம்.அனால் துயரமும் குருதியும் தோய்ந்த இந்தக்கதரல்களை யார் கேட்கப் போகிறார்கள்?இந்த அவல இசையின் சுருதி பிசகிய குறிப்புக்களை எந்தக்கலைஞனால் சரி செய்ய முடியும்?என்றைக்குச் சாத்தியமாகும் அது?

Monday, October 26, 2009

இன்று ஒரு உணர்வு..

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும் என்று நான் பதிவு செய்த இடுகை பலரின் கவனத்தில் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி.ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் இசை என்பது அணைத்து உய்ரினங்களிலும் இருக்கிறது என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.இசையால் வசமாகா இதயம் எது என்ற பாடல் வரி நாம் அறிந்த ஒன்றுதானே?   

பாட்டு என்கிற அற்புதம் பற்றி எத்தனை விதமாய்ச் சொன்னாலும் தீராது.மகாகவி பாரத்யின் வார்த்தைகளில் சொன்னால் "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லை"தானே?வானம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான இசைத் தோற்றங்களைத் தருகிறது.இரவின் அமைதியில் நாம் கேட்க நேரும் ஒவ்வொரு ஓசையும் ஒரு இசைக்கோலம் காட்டுவதை உணராமல் எப்படி இருக்க முடியும்?

மலைகள்,நதிகள், வனங்கள்,நீரோடைகள்,பறவைகள்,மிதிபடும் சருகுகள்,தொலைவில் ஒளிரும் வெடியின் ஒளியும் ஓசையும்,யாரோ ஒரு தாயின் மடியில் பசிக்கு அழும் குழ்ந்தையின் அழுகையில்,பசி தீர்ந்ததும் அது உதிர்க்கும் சொற்களில்,இப்படி எங்கும் நிறை நாத பிரும்மம் நமது நெஞ்சை நிறைக்கிறது.கண் தெரியாத இசைஞன் நாவலில் பார்வை அற்ற இளைஞனின் உலகம் தாயின் கூர்த்த மதியால் இசைப்பெரலைகள் நிறைந்த ஒரு அற்புத உலகமாக மாறும் விந்தையை விளாடிமிர் கொரலென்கோ மிக நுண்ணிய இசைக் குறிப்புகள் நிரம்பி வழியும் எழுத்து வடிவில் தந்திருப்பார்.

எத்தனை முறை படித்தாலும் அந்த நாவலின்இசை   வெள்ளம் நம் மனப் பரப்பில் பாயும் போது மூச்சுத் திணறுவது தவிர வேறு என்ன செய்ய முடிகிறது? மனம் எதோ ஒரு உணர்வில் கனத்துப் பிரமை பிடிதார்ப் போல் ஆகி விடுகிறது.இந்த உணர்வுகளை எந்த மொழியில்,எந்த வார்த்தைகளில் சொல்ல முடியும்/பேசா மடந்தையே நாம் என்று ஆகி விடுகிறோம் இல்லையா? 

Friday, October 23, 2009

தமிழில் சில புதிய களங்கள்...

தமிழின் களங்கள் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்தவை. இன்றைய நவீன வாழ்வின் சில அம்சங்களை இந்த மொழியில் சொல்வதற்கு முயலும் போது இது நமக்கு உகந்த முறையில் வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி நம் முன் வந்து நிற்கவே செய்யும். இந்த மொழியில் நவீன வாழ்வின் சாத்தியங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும் என நிருபிதவர்களில் சுஜாதாவும் ஒருவர். வேறு பலரும் இந்த வகையில் முயன்று பார்த்து உள்ளனர். ஆனால் சுஜாதாவின் வெற்றி மிக வசீகரமான ஒன்று. அவரை நகல் எடுத்த பலரும் தோற்றுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.



இந்த நவீன அம்சங்களில் அறிவியலின் பல கூறுகள் அடங்கி உள்ளன. முன்பு ஒரு எழுத்தாளர் கூட்டம் இந்த முறையில் முயன்று வந்தது. அவர்களில் பே.நா. அப்புசாம்யும், தி.ஜானகிராமன்,ஸ்ரீனிவாசன், எ.என்.சிவராமன் போன்றவர்கள் வருவர். இன்றைய தலைமுறையில் இரா.முருகன், ராமானுஜம், இரா.நடராசன், வெங்கடேஸ்வரன், ஆதனூர் சோழன் இப்படிப் பலர் இருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் பொது மக்கள் திரளை சென்று சேர்ந்ததா என்பது தனிக் கதை.



ஸ்டீபன் காவ்கிங் இன்று தமிழ வாசகர்கள் அறிந்த ஒரு பெயர்.இதற்கு அவரின் 'காலம்-ஒரு சுருக்கமான வரலாறு' என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூல் ஒரு காரணம். ராஜாஜி கூட அறிவியல் அம்சங்களைத் தமிழில் தர முயன்றவர்தான். ஆனால் அவரின் நடை இன்று பொருந்தி வரக் கூடிய ஒன்றல்ல. தி.ஜானகிராமனின் நடை இன்றும் வாசிக்க சுகமான நடையாக இருப்பதை காணலாம். இந்த விஷயம் பற்றி மேலும் ஆராய்ந்தால் பல சுவையும், பயனும் மிக்க தகவல்கள் கிடைக்கக் கூடும்.

Wednesday, October 21, 2009

மாநகர நினைவுகள்...

சென்னை மாநகர நினைவுகள் பற்றி தமிழ்நாட்டின் பல முக்கியமான பிரமுகர்கள் தமது மலரும் நினைவுகள் பலவற்றை ஹிந்து இதழில் எழுதிக் கொண்டு வருகிறார்கள்.இன்று ச.வைதீஸ்வரன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அகில இந்திய வானொலியின் செய்திச் சேவையை மெரீனா கடற்கரையில் லௌட்ச்பீகர்கள் மூலம் கேட்ட அனுபவம் பற்றி, தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகம் பற்றி, ச.வி. சகஸ்ரநாமம் பற்றி கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரம் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.சென்னை அன்று ஏரிகளும் குளங்களும் நிறைந்த நகரமாக இருந்த கதையை சொல்கிறார்.




நகரச் சுவர்கள்,விரல்மீட்டிய  மழை, உதய நிழல் போன்ற தொகுப்புக்கள் இவரின் கவிதை படைப்புக்கள் ஆகும்.வேறு பலரும் இவர் போலவே தங்கள் மனச் சுரங்கத்தில் இருந்து அன்றைய சென்னை பற்றி பதிவுகளை எழுதி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே பெரிய பிரமுகர்கள் மட்டுமே. சாதரணமான மனிதர்களின் மனதில் இந்த நகரம் என்ன விதமாகப் பதிவாகி இருக்கிறது? எப்போதாகிலும் அந்த மாதரியான பதிவுகளை நாம் படிக்கக் கிடைக்குமா?

இந்த நகரம் நான் முதன் முதலில் ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்த இடம்.இங்குதான் அம்பதூரில் ஒருகம்பெனியில்வேலை செய்தேன்.ஆறு மாத காலம் கழித்து வேலூர் சென்று அங்கு பணியில் சேர்ந்தேன். மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்து சேர வேண்டியதாகியது. இப்போது பத்தொன்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இந்த நகரம் என் கதைகளில் பதிவாகி இருக்கிறது.குறிப்பாக 'பிணங்களும் விலை போகும்' கதையில்.என் இலக்கிய வாழ்வின் முக்கியப் பகுதிகள் நிகழ்ந்த இடம் இதுதான். நினைவுகள் அழிவதில்லை அல்லவா?