Showing posts with label புத்தக விமர்சனங்கள். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனங்கள். Show all posts

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...

மார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று மைதிலி சிவராமன் தன பாட்டி எழுதிய டயரி  மற்றும் பல குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய "வாழ்க்கையின் துகள்கள்'என்ற புத்தக வெளியீடு நடை பெற்றது,அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உமா சக்கரவர்த்தி என்ற வரலாற்று ஆய்வாளர் எடுத்த ஒரு குறும்படமும் திரை இடப்பட்டது.சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி தன மன உணர்வுகளை ஒரு இரண்டு வருட காலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுதி வந்திருக்கிறார்.தன மகள் பங்கஜத்தை சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகவில்லை.ஏற்கனவே தன இரண்டு மகன்களைப் பரி கொடுத்த துயாம் தாங்காமல் அவர் வலிப்பு நோயாளி ஆக இருப்பவர்.அவரின் கணவர் கோபாலக்ருஷ்ணன் பிரிட்டிஷ் அரசின் சால்ட் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தவர்.எனவே அவர் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓர ஊர்கள்.பெரிய வீடு.ஆனால் கணவர்,மனைவியும் மகளும் ஆக மூன்றே பேர்தான்.கணவர் வேலை நிமித்தம் நீண்ட தூரப் பயணங்களில் மாதக்கணக்கில் போய் விடும் நேரங்களில் சுப்பலக்ஷ்மி மகளுடன் தனிமையில் உசன்று கொண்டிருப்பார்.மகளின் படிப்புக்காக சென்னை வரும் அவர் எழுதிய குறிப்புகளின் ஊடே ஒரு துயரமிக்க பெண்ணின் கதை உருக்கொள்கிறது.வெண்ணிலாவின் பால் ஒளியில் மனம் பரி கொடுக்கிறார்.பறவைகளின் குரல்களில் ,செடிகொடிகளின் அழகில் இரவு வானின் மாயத் தோற்றங்களில் மனம் தொய்கிறார்.அவரின் ஒரே நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதும் கடிதங்கள் மட்டுமே அவருக்கு ஆறுதல்.அப்போது நடந்த விடுதலைப் போராட்டங்களில்,சென்னைக் கடற்கரைக் கூட்டங்களில்,பாரதி கவிதைகளில் அவரின் ஈடுபாடு தன கூண்டில் இருந்து விடுபட்டு வெளியே வர அவராக உருவாகிய வெளியாக இருக்கிறது.அந்த வாழ்க்கையின் துகள்கள்தான் எத்தனை வீறு கொண்டவையை இருக்கின்றன?புத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்?ஆனால் அது உண்மை.அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடலுடனும் உயிருடனும் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது குறும்படம்.யுரைந்து போக வாய்த்த நிகழ்வு...................!

Thursday, December 24, 2009

sila puthiya velikalum,oru naavalum....!

இன்று புதிய இடங்களையும், வெவ்வேறு விதமான வாழ்க்கை  முறைகளையும் பாடு  பொருள் ஆகக் கொண்ட நாவல்கள் பல புதிய எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.இதுவரை நாம் அறியாத மனிதர்களை, வாழ்க்கைகளை,நகரம் அல்லது கிராமப் பகுதிகளை,அங்கு வாழ்கிற அவர்களின் உணர்வுகளை,அவர்களின் கலாச்சாரங்களை இந்த நாவல்கள் பதிவு செய்கின்றன.இவ்வகையில் நான் போன வாரம் படித்த நாவல் கரன் கார்க்கி எழுதிய ஒரு நாவல். சென்னைநகரின் தென் பகுதி பற்றி ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.ஆனால் அதன் எதிர் துருவமாய் இருக்கும் பகுதி பற்றி ஓரிரு படைப்புகளே இருக்கின்றன.கரன் கார்கி இப்போது அந்தக் குறையைத் தீர்க்கத் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.சென்னை நகரின் ஒரு பகுதியில் கடும் சூழல்களில் வாழ்கிற உழைப்பாளி மக்களையும்,அவர்கள் நடுவே நிலவும் போட்டி பொறாமைகளையும்,குடி,விபச்சாரம்,சண்டை,துரோகம், நட்பு,இந்த மக்களின் பூர்வீக கிராமங்களில் நடைபெறும் மூதாதைகள் வாழ்க்கைகளையும் அங்கு நிலவும் சாதீயக் கொடுமைகளையும் இப்படி எண்ணற்ற விசயங்களை மையமாகக் கொண்டு ஒரு கனமான நாவலைத் தந்திருக்கிறார். சாராயம் விற்கிற குயிலம்மா,கோபால்.சங்கரன்,சின்னப்பொண்ணு, அஞ்சலை விஜயா,சுலோச்சனா,முனியன் என்று பல பாத்திரங்கள்.குடியின் கொடுமை பற்றி அந்தப் பழக்கத்தால் உயிரையே இழக்கும் முனியன்,கோபால் மூலம் பதிவு செய்கிறார்.குயிலம்மவுக்கும், கோபாலுக்கும் ஏற்ப்படுகிற நட்பு ஒரு புதிய வகைப் பதிவு.நாம் காண விரும்பாத சில பகுதிகளில் இப்படி மிக மென்மையான ஒரு பரிமாணம் மறைந்து கிடப்பதை நாவலின் பல இடங்களில் காண்கிறோம்.மழை வந்து கொட்டும் வேளைகளில் ஏழை மக்கள் படும் அவஸ்தையும்,குடிசைகளில் மழை செய்யும் கொடுமைகளையும் பற்றி நாவலின் முன்பகுதியில் மிக விரிவான ஒரு பதிவு இருக்கிறது.மரணங்கள்  தவிர்க்க முடியாதவை,முக்கியமானபல பாத்திரங்கள் நாவலில் மிகவும் கொடூரமான மரணங்களைச் சந்திக்கின்றன.சால்ட் க்வார்ட்டேர்ஸ்,வடசென்னைப் பகுதிகள் பலவற்றைப் பற்றி முதன்முறையாக நாம் இதில் படிக்க முடிகிறது.குற்றங்களும்,வெக்கையும்,சாராயமும்,கொலைகளும் மலிந்த பகுதியாகவே ஊடகங்களில் பதிவு செய்யப்படும் வடசென்னைப் பகுதியின் மானுட ஆன்மாவைப் படம் பிட்ட்டிதுக்க் காட்டும் ஒரு நல்ல படைப்பு.ஆசிரியர் இதில் தானே நேரடியாகப் பேசாமல் சொல்ல நினைப்பதை கதையின் மூலமே சொல்லி இருந்தால் மபக நல்ல கலைப் படைப்பாக இது வந்திருக்கும்.......!

Thursday, October 15, 2009

புலம் வழங்கும் புத்தகங்கள்

புலம்
லால்கர் ஒரு மூன்றாவது பார்வை என்ற புத்தகமும் அரசு,இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள் என்ற புத்தகமும் மார்க்ஸ்-எழுதிய புதிய நூல்கள். சமீப நாட்களில் ஊடகங்களில் மிகவும் அடிபட்ட விஷயங்கள் குறித்து மிக ஆழமான முறையில் மார்க்ஸ் எழுதி இருக்கிறார்.வன்முறை என்பது இன்றுள்ள சூழ்லில் அரசு பயங்கர வாதத்திற்கு மட்டும் பயன்படுகிற ஒரு ஆயுதமே தவிர சமூக மாற்றம் வேண்டிப் போராடும் இயக்கங்கள் தமது இலட்சிய நிறைவேற்றத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதமாக இல்லை என்ற வாதத்தை மார்க்ஸ் முன் வைக்கிறார்.நடைமுறை அனுபவங்களில் இருந்து இன்னும் நக்சல் இயக்கங்களும் மாவோயிஸ்ட் இயக்கங்களும் பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே நம் ஆதங்கமயிருக்கிறது.

அரசு எப்போது வன்முறையைக் கையில் எடுக்கிறது? மக்களிடம் தனது பிடி தளர்கிறது என்று உணர்கிறதோ அப்போதுதான்,அதுவரை அரசு மக்களின் ஒப்புதலுடன் தன் அதிகாரத்துறை ஆளுகையை மக்கள் மீது செலுத்திக் கொண்டு இருக்கிறது.எனவே அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான ஒரு இயக்கம் வெற்றி அடைய வேண்டுமானால் அந்த முடிவுகளுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்கக் கூடாது.அந்த வகையில் சமூக மற்றத்ர்க்கான இயக்கங்கள் எதிர் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இரக்க வேண்டும்.ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதே சோகம்.மார்க்ஸ் இந்த உண்மையை மிகக் கூர்மையாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கிறார்.

சிறிய இரு நூல்களும் மிகச் செறிவான முறையில் எழுதப்பட்டு இருக்கின்றன.இந்த உண்மைகள் ஏன் போராளிகளுக்குப் புரியவில்லை என்ற கேள்வி நமக்கு எழும்.அதற்கும் மார்க்ஸ் பதில் சொல்லி இருக்கிறார்.இன்றைய போராளிகள் தீவிரமாக் எதயும் படித்து மக்களின் நிகழ கால வாழ்வு பாதிக்காமல் எதிர் கால லட்சியங்களின் வெற்றிக்குப் போராடுவது கிடையாது என்பதே மார்க்ஸ்ன் அவதானிப்பு. இன்றுள்ள நிலையில் மிகக் கவலையுடன் யோசிக்க வேண்டிய பல செய்திகளை மார்க்ஸ் எழுதி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே ஒரு பிரச்சினை என்ன என்றால் இந்த இரு நூல்களிலும் இழையோடும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு என்பதுதான். இது பற்றி விரிவாகப் பார்கத்தான் வேண்டும்.   

Sunday, October 11, 2009

ஒரு இடைவெளிக்குப்பின்.

அக்டோபர் 5 ஆம் நாளுக்குப்  பிறகு, இந்தப்பகுதியில் எதையும் எழுத முடியவில்லை. என்ன காரணம் என்றே தெரியாமல் ஒரு சோர்வு. நம் சிந்தனைகளில் ஓடுகிற அனைத்தையும் எழுதுவதால் என்ன விளைவு ஏற்படப்போகிறது? இலக்கியம் ஒரு கருவியாக நம் சிந்தனைகளைப் பிறர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது.பிறர் சிந்தனைகளை நம் கவனத்தில் பதியக் கொண்டு வந்து சேர்க்கிறது.யாரோ எதிலோ எழுதும் விசயங்களில் நல்ல அம்சங்கள் இருப்பின் அது பற்றி நம் மனதில் ஓடும் எண்ணங்களை எழுதியவருடன் பகிர உதவுகிறது.அந்த வகையில் இந்த மாத புதிய ஆசிரியன் இதழில் தோழர் எஸ்.வி.வி. எழுதிய "பஞ்சமும் நோயும் மெய்யடியார்க்கோ" என்ற கட்டுரை படித்ததும் அது பற்றி அவருக்கு மெயில் மூலம் என் கருத்தைக் கொண்டு சென்றேன். அவரும் படித்து விட்டு தனது மகிழ்ச்சியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.இலக்கியம் என்பது இப்படி ஒரு அசைவை நிகழ்த்துகிறது.படித்து நீண்ட காலம் ஆகியும் நம் மனதில் அதிர்வுகளை ஏற்ப்படுத்தும் படைப்புகள் பல உண்டு.அவற்றின் தாக்கம் நீண்ட நாட்கள் ஆகிய பின்னும் ஒரு சிறிதும் மங்குவதில்லை.நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல் ஒரு உதாரணம். கன்னட மொழியில் நிரஞ்சனா எழுதிய சிரச்மரனே என்ற நாவலின் தமிழ மொழி பெயர்ப்பு இது.தமிழில் மொழி பெயர்த்தவர்   ப.ர.பரமேஸ்வரன் அவர்கள்.இந்த நாவலின் களம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்.விவசாய சங்கம் அமைத்த இளம் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தங்களின் நிலம் பிடுங்கப்பட்ட பின் அடைந்த வேதனையை சொல்கிறது.அவர்களும் அந்த கிராமத்தின் பிற விவசாய மக்களும் நடத்துகிற இயக்கம்,அதை நசுக்க பிரிடிஷ் ஆட்சி எடுக்கும் நடவடிக்கை,அதில் ஏற்ப்படும் ஒரு துரதிர்ஷ்ட வசமான சம்பவம்,அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலிஸ் எடுக்கும் கொடூரமான அடக்குமுறை,இறுதியில் அந்த நான்கு வீர இளைங்கர்களும் தூக்கு மேடை செல்லும் முடிவும்தான் நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல்.இதை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று சொல்ல என்னாலேயே முடியாது.அத்தனை முறை படித்தும் புதிதாகப் படிப்பது போலத்ததான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது.நாவலை எழுதிய நிரஞ்சனா,அதை ஒரு கம்யூனிஸ்ட் பிரசார நாவல் என்று சிலராவது சொல்லவாய்ப்பு இருக்கிறது என்றும்,அனால் அதை எழுதிய போதும் சரி,அந்த உண்மை நிகழ்வை அருகில் இருந்து பார்த்த போதும் சரி,தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்றே சொல்கிறார்.தான் கண்ட ஒரு உண்மை நிகழ்வை தன மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்,அவ்வளவுதான்.அந்த நிகழ்வில் கண்ட அந்த மக்களின் துயரம் அவர் மனதைப் பாதிக்கிறது.சார்பு எதுவும் இல்லாமலே அவரின் நாவல் உண்மைகளை அந்தரங்க சுத்தியுடன் சொல்கிறது.இந்த நாவலில் இறுதிக்கட்டம் படிக்கிற யாரையும் உலுக்கி விடும்.தேஜஸ்வினி என்கிற நதி இந்த நாவலில் வெறும் ஒரு நதியாக மட்டும் இன்றி ஒரு பாத்திரமாகவே மாறி விடுகிறது.நாவலாசிரியரின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்திருக்கிறார் என்றால் அந்த நதியும் நதிக்கரை மக்களும் எவ்வளவு தூரம் அவரைப் பாதித்திருக்க வேண்டும்?தேஜஸ்வினி இன்று நன்கு அறியப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர்.நிரந்ஜனாவின் நாவலை அவர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார்."நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன"என்பது ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்பு.நாவலின் இறுதியில் தூக்கில் இடப்பட்ட சிருகண்டனின் மனைவி தன குழ்ந்தையிடம் வானில் தெரிகிற நட்சத்திரங்களைக் காட்டி "அதோ தெரிக்றார் பார் உன் அப்பா.அருகில் தெரிகிறவர்கள் அவரின் நண்பர்கள்" என்று சொல்லுவாள்.நம் கண்கள் குளமாகி விடும்.நெஞ்சமெல்லாம் வலிக்கும்.வரலாறு நெடுக உழைக்கும் மக்கள் தமது நியாயமான உரிமைகளைக் கூட தமது உயிரைக் கொடுத்த பிறகுதான் அடைகிறார்கள்;அல்லது உயிரைக் கொடுத்த பிறகும் கூட உரிமைகளை அடைய முடியாமலே இருக்கிறார்கள் என்பதை நாவல் மெளனமாக உணர்த்துகிறது.இலக்கியம் செய்கிற மாயம் இது.எழுத்து என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என்று நாம் உணர்கிறோம்.என்னை இடைவிடாமல் யோசிக்க வைக்கும் ஒரு சில் புத்தகங்களில் இதுவும் ஒன்று.இப்படி எழுத முடிந்தால் அந்த வகை எழுதுக்களை எழுதுவது பற்றி நாமும் யோசிக்கலாம்.இன்று காலையில் ஒரு கூட்டத்தில் வகுப்பு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்த போது இந்த நாவலின் பாத்திரங்கள் பற்றியும்,என் வாழ்வில் நான் சந்தித்த சில முக்கியமான தலைவர்கள் பற்றியும் அவர்களின் தன்னலம் அற்ற போது வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உத்வேகம் தருகிற புத்தகங்களில் இந்த நாவலும் தூக்கு மேடைக் குறிப்பு என்ற நினைவுக் குறிப்பு நூலும் முக்கியமானவை.இந்த நூல்கள் பற்றி நினைத்த உடனே வேறு சிந்தனைகளே எழாத வகையில் மனம் நிரம்பி விடுகிறது.............நினைவுகள் அழிவதில்லை நாவலின் முன்னுரையில் ஆசிரியர் வாசகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புவார்:"இந்த வீர நினைவுகள் உங்களுக்குத் தரும் உணர்வுகள் என்ன? நீர் நிரம்பிய கண்கள் மட்டும்தானa? ஓங்கி உயர்த்திய கரங்களும் கூடத்தான்"என்று வரும் வரிகள் நம் மனதில் பிரளயம் போல் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கின்றன.நாவலின் இன்னொரு இடத்தில இப்படி வரும்:"நாம் சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரு போதும் சொல்ல முடிவதில்லை;நாம் கண்ணீர் வடிக்க வேஅண்டும் என்று நினைத்த போதெல்லாம் அழுதிருந்தால் தேஜஸ்வினி நதியில் வெள்ளம் பிரளய கால் வெள்ளமாயிப் பெருகியோடி இருக்கும்.அனால் நாம் செய்ய நினைப்பதை எல்லாம் செய்து விடுவதும் இல்லை" இப்படி வரும் வரிகள் நிறைய்ய....!                     

Friday, October 2, 2009

ஆ.சு வின் கவி உலகம்..

ஆ.சுப்ரமணியன் ஆசு என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். துவரை இவரின் ஆறு தொகுப்புகள் வந்து இருக்கின்றன.
ஆறாவது பூதம்,  அன்றொரு மௌனம், ஈரவாடை, குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன் ஆகியவை ஏற்கனவே வந்தவை. இப்போது 'நேசித்தவனின் வாழ்வுரை' வந்திருக்கிறது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. த.அறிவழகன் இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

"வாழ்வின் சிக்கல்கள் எதிர்பாராத நெருக்கடிகளாகிற போது ஓரளவிற்கு எழுதி வந்த பலரும், தங்கள் அடையாளங்களை மீட்டு எடுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றனர். வெகுசிலரே நெருக்கடிகளையும் படைப்புகள் ஆக்கி மகிழும் சாமர்த்தியம் கைவரப் பெற்றவர்கள் ஆகமாறுகின்றனர். அவ்வகையில் தமிழ்க் கவிதைச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் ஆகவும் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் சாமர்த்தியமாக இயங்குபவர் ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் ஆசு".

கவிஞரின் எண்ணங்கள் ஓடும் திசை பற்றி அவரே சொல்கிறார்: "மொழியின் சாதுர்யத்திற்குள் குரலையும் கருதுக்களையும் ஒளிக்காமல், அதன் தேவைக்கு ஏற்ப கவிதையினை முன் நகர்த்த வேண்டிய பயன்பாட்டுக் கருவியாகவும் படைப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தையும் கவனத்தில் கொள்கிறேன்."   

ஆசுவின் இந்தக்குரல் முக்கியமான ஒன்று. "சின்னஞ்சிறிய குருவி நான், என் கூட்டை அழகாகக் கட்டிக் கொள்வேன்; யாவரின் துயரும் எனக்கானதாய் அகற்றுவேன். புன்னகைகளால் பூமி முழுவதும் நிறைப்பேன், மழை பகிர்ந்து காடுகளை விதைப்பேன்" என்கிறார் ஆசு.

"நிரம்பி வழியும் ஒவ்வொரு வின்மீணிலும் கடவுளின் கண்களில் ஒழி யுமில்கின்றன, ஒரே அன்பின் நீர்மை அந்த விண்மீனில் வழிவதை உணர்கிறேன்". இவ்வாறு ஆசுவின் கவி உலகம் விரிந்து கொண்டே போகிறது. நம் நெஞ்சில் இடம் பெறுகிறது.

Thursday, October 1, 2009

இன்னும் சில சிந்தனைகள்

கடைசியாக  என் சிந்தனைகளில் மீனாக்ஷி முகர்ஜியின் மறைவு மற்றும் நரேன் என்ற சமூக சேவகர் பற்றிய கட்டுரைகள் குறித்து எழுதி இருந்தேன். கடந்த சில நாட்களாக ப்ளாக்-இல பதிவு எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டது.  நேற்றும் இன்றும் படித்த சில விஷயங்கள் பற்றி இன்று பார்க்கலாம். கூகி வா தியன்கூவின் 'இடையில் ஓடும் நதி' நாவல் படித்தேன். தமிழில் இரா. நடராசன் மொழி பெயர்த்து இருக்கிறார். மிக அருமையான நாவல் இது. ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்கள் இப்போது நிறைய தமிழில் வருகின்றன. இந்த நாவலின் களம் மிக வித்தியாசமானது. ஆப்பிரிக்க மக்களின் மரபு ரீதியான சடங்குகள் - வழிபாட்டு  முறைகள் பற்றியும், அவர்கள் நடுவே கல்வியின் விதைகள் விழுந்த பிறகு புதிய மனிதர்கள் உருவாகி வரும் விதம் பற்றியும் இது பேசுகிறது. அந்த மக்களின் ஆன்ம பலம் வெள்ளைக்கார மனிதர்களை எதிர் கொண்ட விதம் பற்றி நெஞ்சம் நெகிழும் வகையில் பதிவு செய்துள்ளது.  

கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் நாவல்படிதேன்.அவரின் முந்தைய நாவல்கள் போலவே இதுவும் வர்க்கப் பார்வை கொண்ட நாவல்தான். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.  Indian literature இதழில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. மிக முக்கியமான கோணங்களில் அலசி ஆராய்கிற கட்டுரைகள் இவை. மதம், மொழி இனம் கடந்து அன்று இந்திய மக்கள் போராடிய விதமும் அவர்கள் பட்ட துயரங்களும்  நம் நெஞ்சங்களில் இருந்து மறைந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது.