Showing posts with label எனது புத்தகங்களில் இருந்து... Show all posts
Showing posts with label எனது புத்தகங்களில் இருந்து... Show all posts
Friday, November 6, 2009
இன்றும் வல்சனின் சிந்தனைகள்...
நவம்பர் இரண்டாம் தேதி அன்று சிற்பி வல்சன் கொலேரியின் சிந்தனைகள் சிலவற்றை இட்டிருந்தேன். பலரின் கவனத்தில் அது பதிந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.அவரது சிந்தனைகள் மிகவும் யோசிக்க வைக்கின்றன ஒரு கலைஞன் சமூகப் பிரஞ்கை உடையவன் ஆக இருந்தால் அவனது கலையில் அது எந்த அளவுக்குச் சமூக நிகழ்வுகள் பிரதிபலிக்கும் என்பது நமக்குப் புரிகிறது அவரின் சிந்தனைகளில் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம் .: "ஓவியம், சிற்பம் இவை மெத்தப் படித்த, கலையுணர்வு மிக்க மேல் தட்டு மனிதர்களுக்கானவை என்று பொதுவான நினைப்பு இருக்கிறது; அது சரியல்ல.. நம்மெல்லோருக்குள்ளும் இருக்கும் கலைஞனை பலரும் இறுதி வரை உணராமலே ஆகி விடுவதுதான் பெரிய சோகம்" என்பது இவர் கருத்து ஆர்வமும், ஈடுபாடும் உள்ள எந்த ஒரு மனிதனும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் அற்புதமான கலைஞனாக முடியும். பார்வையற்ற மனிதர்களால் கூடச் சிற்பங்களை ரசிக்க முடியும் என்று இவர் சொல்லும் போது நமக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. அவரே சொல்கிறார்: "சிற்பம்-பார்க்கப் படுகிற ஒன்று மட்டும் அல்ல; விசுவல் ஆர்ட் மட்டும் அல்ல அது. எனது கண்காட்சி ஒன்றில் வாய்த்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிற்பங்களை கண் பார்வை அற்ற இருபது-முப்பது மாணவர்கள் வந்திருந்து "பார்த்தார்கள்". அவர்களாக ஒவ்வொன்றையும் தொட்டுப் 'பார்த்து' அனுபவித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவகாரங்களை பார்வையுள்ளவர்கள் கூடச் செய்ய முடிந்தது இல்லை. முழு உலகையுமே 'பார்க்க' அவர்களால் முடிகிறது. நமக்குத்தான் பார்வை தீட்சண்யமாக இல்லை. முட்டுச் சந்துகளில் நின்று விடுகிறது நம் பார்வை. ஆனால் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் உணர்த்த முடிகிற மாதிரி ஒரு தகவல் தொடர்பு இருக்கிறது- பறவைக் கூட்டத்தில் ஒரு பறவை தவறி விட்டாலோ அடிபட்டு விழுந்து விட்டாலோ கூட்டம் முழுவதும் உடனே அதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்து விடுகிற மாதிரி...." ....உண்மைதான்! 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நகரங்களிலும், பாரீஸ் உட்பட சர்வதேச நகரங்களிலும் ஏராளமான கண்காட்சிகளை நடத்திப் புகழ் பெற்றவரான வல்சன் கொலேரி, அனுபவப் பூர்வமாக ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் சொல்லுகிற இம்மாதிரி உண்மைகளை எப்படி மறுக்க முடியும்?
Sunday, November 1, 2009
ammy kothavum sirpi thevaithaan........
நேற்று என் வலைப் பதிவில் சிற்பி வல்சன் கொலேரியின் அனுபவப் பதிவுகளை அவரின் நேர்காணல் ஒன்றில் இருந்து இட்டிருந்தேன்.என் கட்டுரை தொகுப்பில் அது இடம் பெற்று இருக்கிறது.இன்றும் அவரது கருத்துக்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.:"உடைந்த அம்மிக் கல்லில்,தன தாயார் நீண்ட காலம் வீட்டில் புழங்கிய பழைய வெண்கலப் பாத்திரத்தில் உயிர்த் துடிப்பு மிக்க சிற்பங்களை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் : ".....பழைய அம்மிக்கல்-அர்த்தம் நிறைந்த ஒன்று.அது உடைந்து துண்டுகளாக ரோட்டில் கிடக்கும் போது பல நூற்றாண்டுகளாக இந்திய உழவர்களின் வரலாற்றைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடப்பது போல் தோன்றுகிறது எனக்கு,அந்த மாற்றிக் கிடக்கிற கல்லின் அழகினை உளி கொண்டு சிதைக்க எனக்கு மனமில்லை.எந்தக் கல்லிலும்,எந்த மரத்த துண்டிலும் எஅதோ ஒரு சொவ்ந்தர்யம் இருக்கத்தான் செய்கிறது.அதை என் கெடுக்க வேண்டும்? எந்தச் சிற்பம்,எதனால் செய்யப் பட்டு இருக்கிறது என்று பார்பவருக்குத் தெரிய வேண்டும்.எந்தப் பக்கம் திருப்பினாலும் ஒரு சொவ்ந்தர்யம் இருக்க வேண்டும்....மெடீரியல் வங்கக் காசு இல்லாத போது-உடைந்த செங்கற்களை எடுத்து மணிக் கணக்கில் உரசி கிரைந்து பண்ணி நூற்றுக் கணக்கான kkyubuகளை உருவாகுவதற்குப் பயன்படுத்தினேன்.நல்ல கலைக்கு பற்றாக் குறைதான் உந்துதலாகக் கூட இருக்கிறது,மிக்கேல்-அஞ்சலோவின் 'டேவிட்' உருவானது கூட இதுபோல்தான்..." வல்சனின் சிற்பங்கள் ஏதோ வெறும் ஆத்மா திருப்திக்காக வடிவமைக்கப் படுகிறவை அல்ல........திறவுகோலே என்று ஒரு சிற்பம்.புது டில்லி lalitha கலா அகாடமியின் முகாமிற்குச் சென்ற வல்சனின் கண்களில் கட்டி முடிக்கப் பட்டுப் பல ஆண்டுகளாகியும் பயன்படுத்தப் படாமல் மூடிக் கிடந்த "ஜவகர்லால் நேரு கலாகேந்திரா "கட்டிடம் பட்டிருக்கிறது."அதைத் திறந்து பயன்படுத்துங்கள் "என்று மொவுனமாக வலியுறுத்துகிற ஒரு சிற்பம்தான் திறவுகோலே ஆக வடிவு எடுத்துநின்றது...."சாலைகளை அகலப் படுதுவதர்க்காகப் பல ஆண்டுகளாக நிழாலும் கனிகளும் தந்து வந்திருக்கிற நெடிய மரங்களை வேருடன் தோண்டிப் போடுகிறோம்.அந்த மரங்களின் கதறலை நாம் ஒரு கணமேனும் கேட்டிருப்போமா?ஒரு பத்து நிமிடம் நம்மால் சேர்ந்தார்ப் போல் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டே நின்றிருக்க முடிகிறதா?....ஆனால் சாலை ஓரங்களில் அய்ம்பது,அறுபது ஆண்டுகளாகத் தனது கிளைகளை நீட்டியபடியே நிzaலையும், கனிகளையும் நமக்குத் தந்து கொண்டே அயராமல் இருந்து வந்த மரங்களின் கதரல்களைச் சட்டையே பண்ணாமல் அவற்றை வட்டிப் போட்டு விட்டு சாலை அமைப்பதில் சந்தோசப் படுகிறோம்.கொச்சின் அருகே ஒரு முகாமில் பங்கேற்ற போது -அருகில் இருந்த சாலையை அகலப் படுத்துவthaற்காக ஒரு பிரமாண்டமான மரத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள்.இருபது,முப்பது பேரை அழைத்துக்கொண்டு சென்று தோண்டி போடப்பட்டிருந்த மரத்தின் வேர்களைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தேன்.முகாமில் இயல்பாய் வளர்ந்து இருந்த சிருகொடிகள்,வேரடி மண்ணோடு சாய்ந்திருக்கும் மரச் சரிவில் முளை விடுவது போன்ற சிற்பமாக வடிவமைத்தேன்.-அதைப் பார்க்கிற எந்த மனித மனதிற்கும்,எதிர்காலத்தில் எந்த இடத்திலும் இம்மாத்ரி மரங்களை வெட்டும்போது கொஞ்சமேனும் உறுத்தல்,தயக்கம் ஏற்படாமல் இருக்காது,...."என்கிறார் வல்சன் கொலேரி.அம்மி koத்த சிற்பி எதற்கு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதி இருந்தார்.சினிமாப் பாடல் எழுதுவதற்கு தன போன்ற கவிஞர்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் அப்போது அக்கருத்தினை எழுதியிருந்தார்.ஆனால் சிற்பியான வல்சன் கொலேரியின் அனுபவத்தில் அம்மி கொத்தவும் சிற்பி தேவைதான் என்று நிரூபணம் ஆகி இருக்கிறதே?
Saturday, October 31, 2009
நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி...
சிற்பம்,சிற்பக்கலை என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே,பொதுவாக நமக்கு பாரம்பரியச்சிறப்பு மிக்க கோவில்களில்,தூண்களிலும்,கோபுரங்களிலும்,பிராகாரச் சுவர்களிலும் நிறைந்திருக்கிற கர்ச்சிலைகளே நினைவுக்கு வருகின்றன.அவற்றைப் பற்றி சிர்ப்பக்களை வல்லுனர்கலால்தான் பேச முடியும்;அவற்றை ரசிக்க முடியும்-என்ற உணர்வுதான் நமக்கு இருக்கிறது.
உண்மையில் அது அப்படித்தானா?நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த நுண்கலைகள் பற்றி அறிவதர்க்கோ,உணர்ந்து அனுபவிப்பதற்கோ ஒன்றுமே கிடையாதா?
"அப்படி இல்லை!நம் எல்லோரிடத்திலும் ஒரு சங்கீதக் காரன் இருக்கிறான். சிற்பியும், ஓவியனும் கூட.அதனால்தான் நம்மால் இசையை ரசிக்க முடிகிறது.நாம் போடுகிற சட்டை,பண்ட்டுகளுக்கு கலர்கோம்பிநேடின்,மாட்சிங் பார்க்கச் செய்வது நம்முள் இருக்கும் ஓவியந்தான்...."என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சிற்பி வல்சன் கொலேரி.
பல புகழ் பெற்ற சிற்பிகளையும்,ஓவியர்களையும் உருவாக்கிய சென்னை கலை-கைத் தொழில் கல்லூரியில் பயின்றவர்தான் இவரும்.சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு,சத்தச் சீரழிவு போன்று இன்றைய நவீன யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன்,இந்திய சிற்பக்கலை மரபின் நீண்ட செழுமையான பாரம்பரிய அம்சங்களை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருப்பது வல்சனின் பாணி ஆகும்.
"மலபாரில் பாத்தியம் என்ற ஊரில் பிறந்து வளந்தேன். சென்னைக்கு வந்தேன்.போவிருந்தவல்லி ஹை ரோடில் கலை-கைத் தொழில் கல்லுரி வாழ்க்கை.சென்னை நகரில் இடைவிடாத சத்தச் சீரழிவு தாங்க முடியாத சோகமாக இருந்தது.உள்ளூர ஓயாமல் அலறிய ச்ய்றேன்.இந்த ஓயாத சத்த அதிர்வில் இருந்து தப்பிக்க உள்முகமாகப் பயணமானேன்.என்னுடைய முதல் சிற்பத்தை இந்த உளைச்சலை வெளிப்படுத்த உதவிய ஒரு சங்கீதமாகவே பார்க்கிறேன்..."
சிற்பி ஆகத் தன்னை உருவாகிய கல்லுரி அனுபவங்கள் குறித்து மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவராய் கண்களை மூடியபடி பேசிக் கொண்டே போகிறார் வல்சன். "மனித உடம்புக்கும்,அதனுடைய இருத்தலில் அவனறியாமலே பிரதான பங்கு வகிக்கும் புவியீர்ப்பு விசைக்குமிடையே உள்ள உறவைப் பற்றி ஆழ்ந்து கவனித்து வந்திருக்கிறேன்....இந்த இரண்டுக்கும் இடையேயான சீரான உறவு மனித உடலுக்கு அழகைத் தருகிறது.இந்த அழகினை நமக்குக் கிடைக்கும் எந்தப் பொருளிலும்,எந்த வடிவிலும் மறு உருவாக்கம் செய்ய முடியும்...!"என்று சொல்லுகிற வல்சன்,வெண்கலம்,கிரானைட் கற்களிலும் தன் சிற்பங்களுக்கான மூலப் பொருளைத் தேர்வு செய்கிறார்.
உண்மையில் அது அப்படித்தானா?நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த நுண்கலைகள் பற்றி அறிவதர்க்கோ,உணர்ந்து அனுபவிப்பதற்கோ ஒன்றுமே கிடையாதா?
"அப்படி இல்லை!நம் எல்லோரிடத்திலும் ஒரு சங்கீதக் காரன் இருக்கிறான். சிற்பியும், ஓவியனும் கூட.அதனால்தான் நம்மால் இசையை ரசிக்க முடிகிறது.நாம் போடுகிற சட்டை,பண்ட்டுகளுக்கு கலர்கோம்பிநேடின்,மாட்சிங் பார்க்கச் செய்வது நம்முள் இருக்கும் ஓவியந்தான்...."என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சிற்பி வல்சன் கொலேரி.
பல புகழ் பெற்ற சிற்பிகளையும்,ஓவியர்களையும் உருவாக்கிய சென்னை கலை-கைத் தொழில் கல்லூரியில் பயின்றவர்தான் இவரும்.சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு,சத்தச் சீரழிவு போன்று இன்றைய நவீன யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன்,இந்திய சிற்பக்கலை மரபின் நீண்ட செழுமையான பாரம்பரிய அம்சங்களை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருப்பது வல்சனின் பாணி ஆகும்.
"மலபாரில் பாத்தியம் என்ற ஊரில் பிறந்து வளந்தேன். சென்னைக்கு வந்தேன்.போவிருந்தவல்லி ஹை ரோடில் கலை-கைத் தொழில் கல்லுரி வாழ்க்கை.சென்னை நகரில் இடைவிடாத சத்தச் சீரழிவு தாங்க முடியாத சோகமாக இருந்தது.உள்ளூர ஓயாமல் அலறிய ச்ய்றேன்.இந்த ஓயாத சத்த அதிர்வில் இருந்து தப்பிக்க உள்முகமாகப் பயணமானேன்.என்னுடைய முதல் சிற்பத்தை இந்த உளைச்சலை வெளிப்படுத்த உதவிய ஒரு சங்கீதமாகவே பார்க்கிறேன்..."
சிற்பி ஆகத் தன்னை உருவாகிய கல்லுரி அனுபவங்கள் குறித்து மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவராய் கண்களை மூடியபடி பேசிக் கொண்டே போகிறார் வல்சன். "மனித உடம்புக்கும்,அதனுடைய இருத்தலில் அவனறியாமலே பிரதான பங்கு வகிக்கும் புவியீர்ப்பு விசைக்குமிடையே உள்ள உறவைப் பற்றி ஆழ்ந்து கவனித்து வந்திருக்கிறேன்....இந்த இரண்டுக்கும் இடையேயான சீரான உறவு மனித உடலுக்கு அழகைத் தருகிறது.இந்த அழகினை நமக்குக் கிடைக்கும் எந்தப் பொருளிலும்,எந்த வடிவிலும் மறு உருவாக்கம் செய்ய முடியும்...!"என்று சொல்லுகிற வல்சன்,வெண்கலம்,கிரானைட் கற்களிலும் தன் சிற்பங்களுக்கான மூலப் பொருளைத் தேர்வு செய்கிறார்.
Friday, September 25, 2009
நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி
என் கட்டுரைத் தொகுப்பு. பல மாநில படைப்பாளர்கள் தங்கள் சிந்தனைகளை ஆசிரியரைச் சந்தியுங்கள் என்ற சாகித்ய அகடமி நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் நடுவே பகிர்ந்து கொள்வார்கள்.அந்தக் கட்டுரைகள் Indian literature -இல் வெளியாவது உண்டு. நான் அந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பது வழக்கம். அதில் இருந்து சில பகுதிகளைத் தர விரும்புகிறேன்.
ஆங்கிலத்தில் எழுதுகிற சஷி தேஷ்பாண்டே, மராட்டிய மாநில தலித் எழுத்தாளர் நாராயண் கார்வே ,தெலுங்கு நாவல் ஆசிரியர் வாசிரெட்டி சீதாதேவி, மலையாள நாவல் ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், வங்காள நாவல் ஆசிரியர் மஹா ஸ்வேதாதேவி ஆகிய படைப்பாளர்களின் நேர்காணல்களைத் தமிழ மொழியில் நான் கட்டுரைகள் ஆக தந்திருக்கிறேன்.
முதலில் சஷி இன் 'பெண்-வாய்ப்பும் அங்கீகாரமும்' என்ற கட்டுரையில் இருந்து: "எனது பால்ய காலத்தில் இருந்தே மூன்று விஷயங்கள் என்னை எழுதுகிறவள் ஆக வடிவமைத்தன.அவை - என் தந்தை ஒரு படைப்பாளி. நான் கல்வி முழுவதையும் ஆங்கில மொழியில் படித்து முடிக்க நேர்ந்தது. நான் ஒரு பெண் ஆக பிறந்து இருந்தேன்..என் தந்தை ஒரு எழுத்தாளர் என்பது என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்கிற போது, மரபணு சார்ந்த அம்சங்களைப்பற்றி குறிப்பிடவில்லை. மரபணுக்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய பங்காற்றி இருக்க முடியும்? என்னை எழுத்தாளர் ஆக்க அவை எந்த அளவிற்கு உதவி இருக்க முடியும்?-எனக்குத் தெரியாது".
"நடன இசைக் கலைஞ்கர்களுக்கு அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து எடுப்பது போல என் தந்தை என்னை மிகுந்த நுண் கவனத்தோடு ஒரு எழுத்தாளர் ஆக வடிவமைத்தார் என்று நான் கூறுவதாகவும் அர்த்தம் இல்லை".
"இந்தத் தாக்கம் மறைமுகமானது; மிக நுண்மையானது. உதாரணத்திற்கு வீட்டில் இருந்த எண்ணற்ற வெவ்வேறு விதமான புத்தகங்களும் அவற்றை வாசிக்க முடிந்ததும்.
விரைவில்லையே, படிப்பது என்பது சுவாசிப்பதையும், சாப்பிடுவதையும் போலவே ஒரு அடிப்படைத் தேவை ஆயிற்று. இன்று வரை நான் புத்தகங்களுக்கு அடிமையாகவே இருக்கிறேன் என்பதையும் நினைவு கூர்கிறேன்".
சஷி தேஷ்பாண்டேயின் சிந்தனைகள் இப்படித் தொடங்கி மேலும் விரிவாக வளர்ந்து செல்கின்றன. தனது அப்பா தங்களுக்கு - அவரின் அன்பு பிள்ளைகளுக்கு -கருத்துச்சுதந்திரம், அறிவுச் சுதந்திரம் தந்தது பற்றிச் சொல்கிறார். எழுத்து இவருக்கு வெறுமனே ஒரு தொழில் அல்ல.அது ஒரு விதமான வாழ்க்கைப்பாதை. சசிக்கு எழுதுவதென்பது ஒரு தீவிரமான பணி, அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. தனது எழுத்துபோக்கின் வளர்ச்சிபோக்கைத் திசை திருப்பிய ஒன்று - ஒரு சிறுகதை.
நமது எழுத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி மிக்க திருப்பங்கள் நமக்காகக் காத்திருக்கும் என்கிறார் சசி. எழுத்து மூளையைத் தாக்குகிற நிகழ்வனுபவம் அது என்கிறார். அறிவின் உள்ளார்ந்த வலிமையினை அறிய முடிந்தது என்கிறார். இந்த உலகம் ஆணின் உலகம். ஆகவே ஒரு பெண் ஆணைப்போல் பார்க்கப் படுவது இல்லை. அவளது எழுத்தும் ஆணினுடைதைப்போல் அல்ல.
தான் ஒருபெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப் படாவிட்டாலும் அங்கீகாரம் மறுக்கப் படுகிறது என்றே தான் கருதுவதாக சசி கூறுகிறார். இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார் - "மானுட வாழ்வின் பிரச்னைகளை கையாள்கிற ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எனக்கான இடமும் கௌரவமும் மறுக்கப் படுகின்றன. மானுடத்தின் மீதான எனது அக்கறை நிராகரிக்கப் படுகிறது". சசியின் குரலில் நம் பெண் எழுத்தாளர்கள் அனைவரின் குரலையும் கேட்க முடியும்.
Subscribe to:
Posts (Atom)
