Showing posts with label என்னை பற்றி... Show all posts
Showing posts with label என்னை பற்றி... Show all posts
Saturday, December 5, 2009
pirantha mannil oru naal..........!
இந்த வெள்ளிக்கழமை அன்று நான் திண்டுக்கல் போயிருந்தேன்.அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்;படித்தேன்;அங்கிருந்து வெளியேறி இப்போது சுமார் நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போது பார்க்கையில் ஊரே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பதை உணர முடிந்தது.நெடுஞ்சாலைகள் பெரிய பாலங்களின் இணைப்பில் பிரமாண்டமாய் ஆகி விட்டிருந்தன.அங்கு ஒரு நிகழ்வில் கிராம நூலகங்களின் பயன்பாடு பற்றி ஒரு வகுப்பு நடத்த வேண்டியிருந்தது.நன்றாக அமைந்தது.அதல்ல என் மனம் சொல்ல விரும்புவது.எனது மூத்த சகோதரர் ஆக நான் மதிக்கும் எழுத்தாளர்,நல்லாசிரியர் விருது பெற்று இப்போது பணி ஒய்வு பெற்றுள்ள அண்ணா திரு கமலவேலன் அவர்களைக் கண்டு பேச முடிந்ததும்,அவரும் நிகழ்வில் என்னோடு பண்கேற்றதும்தான்.அவரை நான் சந்தித்ததே ஒரு விந்தையான முறையில்தான்.அப்போது நான் பள்ளி மாணவன்."கண்ணன்"என்ற அக்கால சிறுவர் இதழில் கமலவேலன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன்.அதில் டிண்டுகல்லின் கடைவீதியும்,பழனி ரோடும் இன்னும் சில இடங்களும் இடம் பெற்று இருந்தன.அடடே,நம் ஊரில் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா என்ற வியப்புடன் அவரைப் பற்றி அந்த ஊர்ப் பத்திரிகை விற்பனைக் கடைகளில் எல்லாம் விசாரித்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தேன்.அவரை ஒருமழை நாளில் பதிரிகைக்கடை எதிரில் சந்தித்தேன்.அன்று தொடங்கிய நட்புமஅன்பும் இன்றளவும் நீடித்து இருக்கிறது.நடுவே சில காலம் தொடர்பு அறுந்து இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் தொடர்பு கிடைத்து விடுகிறது.அவர் ஏராளமான நூல்களின் ஆசிரியர்.அந்தக்கால பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,மற்று கல்கி,குமுதம் விகடன் உட்படப் பிரபல,சிற்றிதழ்கள் எல்லாவற்றிலும் எழதி இருப்பவர்.ஆனால்போதிய அளவு இன்னும் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்குப் போல் இருப்பவர்.அவர் தீபம் இதழில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"சிறுகதை மறக்க முடியாத சிறுகதைகளில் ஒன்று.சிறந்த நாடக் ஆசிரியரும் கூட.பல மேடை நாடகங்களை அவர் தன சொந்த முயற்சியில் அரங்கேற்றியவர்.குறிப்பாக பிரஞ்சு நாடக ஆசிரியர் மொழியர் எழுதிய "கஞ்சன்"நாடக அரங்கேற்றத்தின் போது சே.ராமானுஜம் வந்து பார்த்துப் பாராட்டினார்.அந்த நினைவுகளும் அவருடன் சேர்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் ,மலை அடிவார வள்ளலார் கோவிலில்,அபிராமி ஆலயத்தில் இப்படிப் பல இடங்களில் பேசிக் கொண்டே திரிந்த நாட்களின் நினைவுகளும் அலை மோதிக்கொண்டு இருந்தன.வாழ்க்கை நம் முன் நிறுத்துகிற மனிதர்களின் பெருமைகள் முழுவதையும் நாம் உணர்ந்து முடிப்பதற்குள் நமது வாழ்க்கை முடிந்து விடுமோ? யாரறிவார்!
Sunday, September 20, 2009
என்னை பற்றி..
கமலாலயன்
அப்பா: நாராயணசாமி வேலுசாமி
அம்மா: தாயாரம்மாள்
மனைவி: ஜெயந்தி
மகன்: பிரசன்னகுமார்
மகள்: பிரதிபா
பிறந்து வளர்ந்தது திண்டுக்கல். படிப்பு Tool and die டிசைன்.
1989 வரை அத்துறையில் பணி செய்த பிறகு, 1990 முதல் இன்று வரை எழுத்தறிவுப் பணி (அறிவொளி இயக்கம், திருவள்ளூர் மாவட்டம்).
என் படைப்புகளில் நூல் வடிவம் பெற்றவை:
1.பார்வைகள் மாறும் - அன்னம் வெளியீடு. சிறு கதை தொகுப்பு.
2.நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி - மொழியாக்கக் கட்டுரைகள்
3.நூலகங்களுக்குள் ஒரு பயணம் - பாரதி புத்தகாலயம்
4. மார்க்சியமும் கலாச்சாரமும்
5.சிகரம் சிற்றிதழ் தொகுப்பு
6.புவி முழுமைக்குமான நீதி - சேகுவேராவின் Global Justice- மொழிபெயர்ப்பு - பாரதி புத்தகாலயம்
7.மனிதர்கள் விழிப்படையும் போது.. Athivasis Revolt மொழிபெயர்ப்பு- கோதாவரி பருலேகர்-சவுத் விஷன்
8.மானுட வீதி - கவிஞர் யுக பாரதியின் இயற்கை வெளியீடு.
பிறகு பல்வேறு தொகுப்பு நூல்களில் கட்டுரைகள் நிறைய பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து புத்தக அறிமுக கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன.
தீபம், கணையாழி,உயிர்மை,தீரா நதி,கல்கி,குங்குமம்,தாமரை,செம்மலர்,புத்தகம் பேசுது..போன்ற பல இதழ்களில் எழுதி வருகிறேன்.

இன்று முதல..
என்று நாமே ஒரு வலை பூவை ஆரம்பிக்க போகிறோம் என்று இருந்த நேரத்தில் பிரசன்னா கொஞ்ச நேரத்தில் இதை உருவாகிக் கொடுத்தான்.பிள்ளைகள் நம்மை விட நிச்சயம் திறமைசாலிகள் ஆக இருக்கிறார்கள்.அந்த மகிழ்ச்சி நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.வாழ்க்கை முழுவதும் எழுதும் படிப்பும் நமக்கு முக்கியம் என்று இருப்பவன் நான்.படிப்பதின் சுகமும் பயனும் எல்லோராலும் உணரப்படும் நாள் என்று வரும் ?இன்று என் மனதில் அலை பாயும் சிந்தனைகள் கடந்த காலம் முதல நிகழ காலம் வரை என் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அசை போட ஆரம்பித்தன.பயணம் தொடர்கிறது...
Subscribe to:
Posts (Atom)