கல்வி என்ற ஒரு மருந்துதான் சமூகத்தின் பல அவலங்களுக்கும் நிவாரணி என்று உலகெங்கும் பல சிந்தனையாளர்கள் பல காலமாய் எழுதியும்,பேசியும் வந்திருகிறார்கள்.இந்திய நாட்டில் விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெற்றுவிட வேண்டும் என்ற கனவுடன் உழைத்தவர்கள் ஏராளம்.அவர்களில் குறிப்பாக கிறித்துவ இறைப் பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிகள் பெரும்பாலும் ஒடுக்குமுறை இயந்திரத்தின் பகுதியாகவே இருந்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் இந்த நாட்டு மக்களின்பால் அன்பும் அக்கறையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.சென்னையில் கர்னல் ஆள்காட் அவர்களில் ஒருவர். பஞ்சமர் இலவசப் பள்ளிகள் துவங்கி அவர் செய்த அரும்பணி பற்றிப் படிக்கும் போதுதான் தெரிகிறது இந்த மண்ணில் அவர் போன்றவர்கள் செய்த அளவுக்குக் கூட நம் நாட்டுத் தலைவர்கள் பலர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்ற உண்மை."பறையர் வரலாறு" என்ற தனது நூலில் ஆள்காட் சொல்கிறார்: "நிரந்தரமான நன்மைகளைத் தருமென்று நம்பியவைகளை மட்டுமே நான் அவர்களுக்குக் கொடுத்தேன். எந்த வகையான கட்டணமும் இல்லாமல் அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைத் திறந்தேன்......சமையல் செய்வது,கிழிந்த ஆடைகளைத் தைப்பது,உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது,குடும்பக் கணக்கினை எழுதுவது போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.அவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும்நல்ல ஊதியம் தருவதுமான வேலையைப் பெற்று அவற்றில் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இப் பயிற்சியை அவர்களுக்கு அளித்தேன்" என்கிறார் கர்னல்.இந்தப் பார்வை நம்மில் எதனை பேருக்கு இருந்தது?இருக்கிறது?
Showing posts with label வாசித்தது. Show all posts
Showing posts with label வாசித்தது. Show all posts
Wednesday, February 29, 2012
Sunday, September 25, 2011
நீண்ட இடைவெளிக்குப் பிறகு......
இடுகைகள் இடுவதில் நீண்ட இடைவெளி.காரணம் எதுவாக இருப்பினும்,இது ரொம்ப அதிக இடைவெளிதான்.என்ன செய்ய?இந்த இடைக்காலத்தில் படித்த,கேட்ட,எழுதிய விஷயங்கள் எண்ணற்றவை.கடந்த வாரத்தில் நான் எழதிய புத்தகம் ஒன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞ்ர்கள் சங்கத்தின் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.ஆப்ரிக்கப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யுனே பற்றிய புத்தகம் அது.பருத்திக்காட்டில்,பருத்தி பொருக்கி வாழ்க்கை நடத்தும் கறுப்பின அடிமைப் பெற்றோரின் மகள் அவர்.உனக்குப் படிக்க வராது என்று ஒரு வெள்ளைக்காரப் பெண் சொல்லும் வார்த்தைகள் அவரைப் பாதிக்கின்றன.அன்று முதல் "நான் படித்தே தீருவேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டு அதே சிந்தனையில் மூழ்கி அமெரிக்காவின் மாபெரும் கருப்பு இன கல்வி நிலையம் ஒன்றை நிறுவி வெற்றி காண்கிறார் அவர். இந்தக் கதையை நான் ஆங்கில மூலத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு ஆதவன் தீட்சண்யா வெள்ளிக்கிழமை அன்று நீண்ட நேரம் பேசினார்.உதய சங்கரும்,எஸ்.வி.வேணுகோபாலும் பேசினார்கள்.எனக்கும் இந்தப் புத்தகம் என் எழுத்து வாழ்கையில் ஒரு குறிப்பிடத் தக்க நூல் என்றே தோன்றுகிறது. பிறகு,படித்தவை.ஒப்ரா வின்பிரே பேசுகிறார் என்றொரு புத்தகம்.ஒப்ராவும் கறுப்பினப் பெண்தான்.படிப்புதான் சுதந்திரத்தின் நுழைவாயில் என்கிறார்.புத்தக வாசிப்பு என்பது தனது மாபெரும் ஆர்வமிக்க செயல் என்கிறார்.மிக மிக மோசமான சூழலில் பிறந்து வளர்ந்து இன்று உலகம் போற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி என்ற வெற்றியை அடைந்திருக்கிறார். சுஜாதாவின் ஆழ்வார் பாடல்கள் ஓர் அறிமுகம் என்ற நூலை மறு வாசிப்புக்கு எடுத்திருந்தேன் பெரியாழ்வாரின் பாடல்கள்,ஆண்டாள் பாடல்கள் இரண்டையும் பற்றி அவர் எழுதியிருக்கும் விதம் அபாரம். நேற்று என்.சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும்,இயக்கமும் என்ற புத்தகம் படித்து முடித்தேன் அந்த நூல் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இன்று எழுதினேன்.பொதுவுடைமைக் கட்சி தலைவர்கள் பற்றி இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரும் சிறுபிள்ளைத் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களின்,குறிப்பாக சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தல் தெரியும்.எப்படிப்பட்ட தியாக வாழ்க்கை அவர்களுடையது என்று.அவருக்கு தொண்ணூறு வயது.அதில் எழுபது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை.பிரிட்டிஷ் இந்தியாவில் நான்கு ஆண்டுகளும்,சுதந்திர இந்தியாவில் நான்கு ஆண்டுகளும் சிறையில்;தலைமறைவு வாழ்க்கை ஒரு மூன்று ஆண்டுகள்.விடுதலைப் போராட்டத்திற்குப் போவதற்காக தன கல்வியைத் தியாகம் செய்கிறார்.அவரின் சிறைவாசம்,சட்டமன்ற அனுபவம்,கட்சிப்பணிகள்,பொதுவாழ்க்கை,இலக்கிய ஆர்வம்,குடும்பம் என்று எல்லாம் படிக்கப் படிக்க பிரமிப்புத் தருகிறது."விடுதலைப் போரினால் வீழ்ந்த மலரே தோழா"என்ற பாடல் அன்று சுதந்திரப் போராடத் தியாகிகள் பற்றிய நினைவு அஞ்சலி.எழுதியவர் மணவாளன் என்ற தியாகி.இசையமைத்தவர் மறைந்த இசைக் கலைஞர் எம்.பி சீனிவாசன்.கேட்கும் போதே உருக வைக்கும் பாடலிது.கட்சி மாநாட்டில் இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தி நின்ற சங்கரய்யாவின் மனம் நெகிழ்ச்சியானது.கலை இலக்கிய வடிவம் உள்ளடக்கம் பற்றிப் பேசியிருக்கும் பேச்சு அற்புதம்.இந்த நாட்களில் கொலைகாரர்களும்,கொள்ளைக்காரர்களும்,கிரிமினல்களும் அரசியல்வாதிகள் என்றும்,முதல்வர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்றும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும் அவர்கள் பின்னால் மந்தைகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,சங்கரய்யா போன்றோரின் பணிகளை இன்று இந்தக் கூட்டம் அறியுமா?அறிந்து பின்பற்றுமா?
Saturday, May 21, 2011
பாப் மார்லேயும் தமிழ் வாசகப் பரப்பும்...!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பாரதி புத்தகாலயம் போயிருந்தேன்.பாப் மர்லின் வரலாறு ரவிக்குமாரால் எழுதப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது.அதை அன்று இரவில் முழுமையாகப் படிக்கும் வேளையில் பெரும் வியப்பு ஆட கொண்டது.சமைக்க என்பது கரிபியன் கடற்பபரப்பில் உள்ள ஒரு சிறிய நாடு.அங்கு ஒரு சிறு கிராமத்தில் பிறந்து முப்பத்தி ஆறு வயதுக்குள் இசைத்துறையில் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தவர் பாப் மார்லி.ஆப்பிரிக்க பழங்குடிப் பெண்ணுக்கும் வெள்ளை இனக் கேப்டன் ஒருவருக்கும் பிறந்த அவர் தந்தையால் கைவிடப் படுகிறார்.சேரிப் பகுதி ஒன்றில் வசித்து பல விதமான வேலைகள் செய்து தீராத் தாகத்துடன் இசை மேதை ஆகிறார்.அமெரிக்காவுக்கும் லண்டன் நகருக்கும் சென்று விடா முயற்சி மேற்கொண்டு இசைத் தொகுப்புகள் வெளியிடுகிறார்.புகழின் உச்சத்தில் இருக்கும் வேளையில் புற்று நோயால் மரணம் அடைகிறார். மூன்றாம் உலகமே பெரியது என்பதும்,உலகில் உள்ள எல்லோரும் சுதந்திரம் அடையாமல் எந்தமனிதரும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர் தரும் செய்தி.சிலருக்கு நம்பிக்கையும்,கனவும்...சிலருக்கு மட்டும் வாய்ப்பும்,வழியும் என்பது போன்ற மிகக் கருத்தாழமிக்க பாடல்கள்,காதல் பாடல்கள்,கறுப்பர் இன விடுதலை சார்ந்த அரசியல் பாடல்கள் என்று பல ரகமான பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடுகிறார்.செல்லும் இடம் எல்லாம் பெருங்கூட்டம்.அவருக்குக் கிடைக்கும் புகழை தங்கள் அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த நாட்டின் அரசியல்வாதிகள் ,அமெரிக்க சி.ஐ.ஏ.இவர்களின் சூழ்ச்சியால் பாப் சுடப் படுகிறார்.அதில் தப்பி விட்டாலும் வெகு விரைவில் புற்று நோய் அவரின் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறது.இந்த வரலாறு மிகவும் புனைவுத் தன்மையுடன் இந்த நூலில் எழுதப் பட்டு இருக்கிறது.உயிர்மை இதழில் சாஜி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் இந்த நூலின் முன்னுரை ஆக இடம் பெற்றுள்ளது.தமிழில் இசைப்பாடல்கள் குறிப்பாக திரைஇசைப் பாடல்கள் பற்றி சாஜியின் கட்டுரைகள் இரு தொகுப்புகள் ஆக வந்துள்ளன.நேற்று எம்.எம்.டி.ஏ.த.மு.எ.க.ச.கிளை சார்பில் பாப் மார்லி ஒரு இசைபோராளி நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.அஜயன் பாலா,சாஜி பேசினார்கள்.நான் தலைமை.வாசகர்கள்,தமிழில் இந்த மாதரியான ஆளுமைகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு.இந்த நிலையில் இது போன்ற புத்தகங்கள் பெரும் பங்களிப்பு ஆகும்.சாஜியிடம் கூட்டம் முடிந்த பிறகு இதைக்கூறினேன்.
Tuesday, May 10, 2011
vaasakan oruvan pesukiren
வாசகன் ஒருவன் பேசுகிறேன்,,,,,,,,,,இப்படி ஒரு குரல் என்னில் ஒலிக்கும் பொது அந்தக் குரல் எழுப்பும் நினைவு அலைகள் ஏராளம்.நல்ல படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொரு தருணமும் பொன்னானது.இன்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "வாசகபருவம்"படித்த சமயம் இந்தக் குரல் பெரும் முழக்கம் போல ஒலித்தது.பல முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய தன வாசக அனுபவத்தைக் கலை நுணுக்கமும் படைப்பாளியின் ஆளுமையும் கலந்த ஒரு நடையில் எஸ்ரா எழுதி இருக்கிறார்,வைக்கம் முகம்மது பஷீர் கி.ராஜநாராயணன்,ப.சிங்காரம்,எ.கே.ராமானுஜன்,சி.சு.செல்லப்பா,அசோகமித்திரன்,பிரபஞ்சன்,கோணங்கி,வண்ண நிலவன்,இப்படி பெரும் ஆளுமைகள் பற்றி தனக்கே உரிய பாணியில் எஸ்ரா எழுதியிருக்கிறார்.படைப்பு மனநிலை என்பது மிக ஆழமானது.சக மனிதர்கள் படும் அவஸ்தைகள் ஒரு நுண்ணிய மனதில் உண்டாக்கும் தாக்கம் மிக வலியது.இந்தப் பதிவுகள் அந்தத் தாக்கம் முழுவதையும் நம் மனதில் எளிதில் கடத்திபோல் கொண்டு வந்து நிரப்புகின்றன..வலி மிகுந்த தருணங்கள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான உத்வேகத்தைத் தருகின்றன.மீரா பற்றி அவர் எழுதி இருக்கும் பதிவு என் சொந்த அனுபவத்தில் பதிந்துள்ள மீரா நினைவுகள் போன்றே விரிந்து செல்கின்றன.என் முதல் தொகுப்பை "பார்வைகள் மாறும்"என்ற தலைப்பில் மீராதான் வெளியிட்டார்.அதன் அட்டைப்படத் தேர்வு கோணங்கியினுடையது.திருவண்ணாமலையில் கலை இரவின் பொது நிகழ்வில் வெளியிடப்பட்டது.மீரா தான் சுமந்து வந்த கட்டைப் பிரித்து முதல் பிரதியைத் தந்த அந்த நிமிடம் எந்த எழுத்தால் பதிவு செய்யப் படக் கூடும்?என்றும் மறையாத அந்த நிகழ்வும் அது போன்ற பல சமயங்களில் சிவகங்கையிலும் சேலம்,சென்னை உள்பட பல இடங்களிலும் மீராவுடன் பேசித் திரிந்த பொழுதுகளும் இன்று முழுக்க அலை புரண்டன.எஸ்ராவின் எழுத்து குறித்து இன்று மீளவும் பிரமிக்க நேர்ந்த தருணம் மலரின் விகசிப்புப் போன்று என் மனமெங்கும் வியாபித்திருக்கிறது.................!
Monday, January 31, 2011
மாற்று வெளியும் மானுடமும்........
பழகிய தடம் பயணம் செய்ய ஏற்றது.அதில் ஆபத்து மிகக் குறைவு.பிரச்னைகளும் கம்மி.ஆனால் மாற்று வெளியில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் ஏதேனும் ஒரு தடை வந்து கொண்டே இருக்கும்.யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.புரிந்து கொள்ள முயல் பவர்களும் முழுமையாகப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.இந்தப் பிரச்னைகள் எல்லாம் இருந்த போதும் மாற்று வழியில் பயணம் செய்ய எப்போது சிலர் முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த உலகில் புதியது புனைகிரவர்கள்.அந்தப் புதிய புனைவுகள்தான் இந்த உலகின் எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம்.இன்று இலக்கிய வெளியில் மாற்று வெளி என்ற ஆய்வு இதழின் மூலம் வெளி வரும் படைப்புகளும் அப்படி புதிய சிந்தனைகளை நம் முன் வைக்கின்றன.இதுவரை வந்துள்ள ஆறு இதழ்களும் அவ்வாறே ஒவ்வொரு இதழிலும் ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கின்றன.கால்டுவெல் குறித்த கட்டுரைகள்;பொருளாதாரம்,கல்வி, ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,நாவல்படைப்புகள் குறித்த பதிவுகள்,மாற்றுப் பாலியல் .....இப்படி ஆறு பொருண்மைகள்.தமிழில் வந்துள்ள இவை வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவை.
Wednesday, August 11, 2010
kaatru varum paruvam
"காற்று வரும் பருவம்" என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன்.பாரதி பாலன் எழுதியது.இந்த மண்ணில் வீசும் காற்றில் கூடச் சாதீயம் தன விசக்கிருமிகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.இதன் கொடுமைகள் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.தந்தை பெரியாரும்,அண்ணல் அம்பேத்கரும் இன்னுமிவர்கள் போன்ற பலரும் எவ்வளவோ காலம் இந்தக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனாலும் இதன் விஷம் பரவிக் கொண்டேதான் இருக்கிறது.அதன் oru parimaanathai இந்த naaval ambalap paduthukirathu.
Sunday, January 10, 2010
artham iyangum thalam
எந்த ஒரு படைப்புக்கும் அதன் மையமான பொருள் ஒன்று இருக்கவே செய்யும்.இது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று.அர்த்தம் என்று வடமொழியில் சொல்லப்படும் இந்தப் பொருள் எது?சொல்கிறவரின் மனதில் இருந்ததா?சொல்லில் வெளிப்பட்டதா?சொல் கடந்த ஒன்றா?எல்லாம்தான் "சொல்லினால் தொடர்ச்சி நீ,சொல்லப்படும் பொருளும் நீ.....சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ.......சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்......சொல்லினால் சுருங்க நீ நின் குணங்கள் சொல்ல வல்லரே....."என்று நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல் உண்டு.அது படைப்பிலக்கியதிற்கும் பொருந்தும் என்று இன்று கிடைத்த ஒரு நூலின் பதிப்புரையில் படித்தேன்."அர்த்தம் இயங்கும் தளம்"என்பது தலைப்பு.தேவகோட்டை வா.மூர்த்தி,'பாரவி',எஸ்.சுவாமிநாதன் ஆகிய மூன்று எழுத்தாளர்கள் "அர்த்தம்"என்பதன் அர்த்தம் பற்றிச் சிந்திதவற்றின் தொகுப்பு.மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன.இன்று காலையில் பாரவி என்கிற என் நீண்ட நாள் நண்பரைச் சந்திக்க நேர்ந்த பொது அவர் தந்த நூல் இது.பல்லாண்டு காலமாக தொடர்ந்து எழுதி வருகிறவர் பாரவி.குறைவாகவே எழுதி இருந்தாலும் மிக நவீன சொல்முறையில் எழுதுபவர்.இன்னும் இவரின் எழுத்துகள் ஒரு தொகுப்பாக வராமல் இருப்பது பற்றி எனக்கு மிகுந்த ஆதங்கம் உண்டு.இது பற்றி அவரைச் சந்திக்கும் போதெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறேன்.இன்றும் சொன்னேன்.இந்த நூலில் முதல் கட்டுரையின் பதினைந்து பக்கங்கள் வரை படித்ததில் சில முக்கியமான சிந்தனைகள் எழுந்தன.வா. மூர்த்தியும் நீண்ட காலமாகத் தமிழில் எழுதி வருபவர்தான்."தீபம்"இதழ் காலம் தொட்டு இவரின் படைப்புகள் எனக்கு அறிமுகம்.படைப்பாளியின் கருத்து என்ன என்று ஒரு படைப்பில் நமக்குப் புலப்படும் பொருளும்,அவரின் மனதில் இருக்கும் பொருளும் ஒன்றாகவே அமைந்து விட்டால் பிரச்னை இல்லை.அவ்வாறு இல்லாமல்,வேறு வேறு பொருள்கள் எழுந்தால்,என்ன செய்வது.அங்கு,நான் சொல்ல வந்தது இதுதான் என்று படைப்பாளி விளக்கம் அளிக்க நேர்கிறது.இந்த விளக்கம் அளிக்கும் செயலில் பொதுவாகப் படைப்பாளிக்கு ஆர்வம் இருப்பது இல்லை.அது சற்று கலைத்திறன் குறைவான செயல் என்றே கருதப்படுகிறது.இது போன்று பல கருத்துக்கள் இந்த நூலின் வாசிப்பைத் தொடர்ந்து என் மனதில் எழுந்தன.
Sunday, December 27, 2009
pirapancanin ulakam.............!
பிரபஞ்சன் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ளன.சற்று நீண்ட தலைப்பு.குமுதம்இதழில் அவர் பணியாற்றிய அனுபவங்களும்,வேறு பல விசயங்கள் பற்றிய அவரின் சிந்தனைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.புதுவை அனுபவங்களும் அவரின் முன்னோடிகளும் அவரின் பெற்றோர்களும் வாழ்ந்த விதம் பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.அவரின் மொழிநடை மிக வசீகரமான ஒன்று.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.பற்றி இவ்வளவு காலமும் வேறு யாராவது இப்படி எழுதி இருப்பார்களா?சந்தேகம்தான்.இவரின் பார்வை வித்தியாசமானதாக இருக்கிறது.அப்பாவின்,தாத்தாவின் கள்ளுக்கடை வியாபாரம் பற்றி பிரபஞ்சன் எழுதி இருக்கும் விதம் தனித்தன்மையானது.பொதுவில் கள்ளுக்கடை பற்றிய சித்திரம் ஒருவிதமானதாக இருக்கும்.ஆனால்,இவர் தரும் ஓவியம் வேறுவிதம்.ரசிக்கவும்,மகிழவும் முடிகிற விதத்தில் இந்தப் பதிவுகள் உள்ளன.அவரின் தம்பியும்,தங்கையும் அம்மை நோய்க்குப் பலியான நிகழ்வு நெஞ்சை உலுக்கும் விதத்தில் பதிவாகி உள்ளது.கிணற்றடியில் அண்ணனும்,தம்பியும்,தங்கையும் மூவரும் விளையாடுவதாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன்,ஆனால் நான்காவதாக மரணமும் எங்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடியவில்லை;உணர முடிகிற வயது,அனுபவம் எதுவும் கிடையாது அப்போது என்கிறார் பிரபஞ்சன்.பானுவின் புத்தகப்பை ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;ஆனால் அதைமாட்டிக்கொள்ள பானுதான் உயிருடன் இல்லை.என்ன ஒரு சோகம்.இவரின் அனைத்துக் கதைகளிலும் மூர்த்தி என்ற பெயர் மட்டுமே ஆண் கதாபாதிரங்களுக்குப் பெயராக வருவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இந்தக் கட்டுரையை வாசிக்கும் வேளையில் கிடைத்தது.புதுவை பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் வாழ்ந்த இரு பிரஞ்சுப் பெண்கள் பற்றிய கட்டுரையும் மிக வலிமையானது.படிக்கும் வேளையில் மனம் உலைந்து விடுகிறது.பிரபஞ்சனின் இசையார்வம்,வாசிப்பு விரிவும்,ஆழமும்,கூர்மை மிக்க பார்வை எல்லாம் நமக்குப் புலனாகின்றன.மேன்ஷன்களின் வாசனை,அதன் ஓசைகள்,அது நம் மீது திணிக்கிற கலவையான உணர்வுகளின் அழுத்தங்கள்....இப்படி ஒரு கட்டுரை.மென்மையான ஒரு நடையில் வாழ்வின் குரூரங்கள் பலவற்றையும் பதிவு செய்வது பிரபஞ்சனுக்கே உரிய ஒரு தனித்தன்மை.............!
Sunday, November 15, 2009
sithaayanamum raamaayanamum....................
ராமாயணம் நமது இதிகாசங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் இன்னும் உயிர்த்துடிப்புடன் மக்கள் மனங்களில் இடம் பெற்ற கதை இது.இக்கதை நாயகன் ராமன் தான் பிரதானமாக முன் வைக்கப் படும் பாத்திரம்.ஆனால் உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவில் அனேகமாக எல்லா மொழிகளிலும் பல வகையான ராமாயணக் கதைகள் வழக்கில் உள்ளன.இவற்றில் சீதா முக்கியப் பாத்திரம் ஆக இடம் பெறுவது நம் கவனத்திற்கு வந்திருக்குமா?சந்தேகம்தான்.இது பற்றி இன்று கன்னட மொழிக் கவிஞரும்,எழுத்தாளருமான சிவப்ப்ரகாஷ் எழுதி உள்ள "சீதாயணம்"என்ற கட்டுரை பல சிந்தனைகளை முன் வைக்கிறது.ராமாயணத்தின் புகழுக்குக் காரணம் அது ஒரு ஆன்மீக இலக்கியம் என்பதுவா? அல்ல.நமது நாட்டின் எல்லா மதப் பிரிவுகளும் அவரவர் சொந்த ராம காதைகளை கொண்டுள்ளன.புத்த மதம் சார்ந்த தாய்லாந்து நாடும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் அந்தந்த நாடுகளுக்கே உரிய ராமாயனங்களைக் கொண்டுள்ளன.ஆனால் மக்கள் நடுவே ராமன் கதை பெற்றுள்ள புகழ் அது மனித உணர்வுகளின்வேறு வேறு வண்ணங்களைக் காவியம் ஆகி இருக்கிறது என்பதே.நமது பழ்ங்குடி மக்களின் நடுவே உலவும் நாட்டுப்புறக் கதைகளிலும்,பாடல்களிலும் புழங்கி வரும் ராமாயணத்தில் ராமனின் முக்கியத்துவம் குறைவே.சீதைக்குத்தான் புகழ் எல்லாம்.கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புறப் பாடல் இப்படி அமைகிறது.:"ஜனகனின் இளவரசி காட்டில் ஒரு தொட்டிலில் லவனையும் குசனையும் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.இனிய தாலாட்டுப் பாடல்கள் பாடுகிறாள்.."என்பதே அது.அந்த மாநிலத்தில் தும்கூர் பகுதியில் ஒரு படிக்காத பெண் சொன்ன கதையில் அக்னிப் பிரவேசம் செய்யும்படி சீதையிடம் ராமன் சொல்வதாகக் கதை இல்லை.மாறாக,சீதை தன கற்பை நிரூபிக்க பல காலமாக மலடாக இருந்து வரும் மரம் ஒன்றை பூக்கச் செய்து,காயிக்கச் செய்தால் போதும் என்பதே ராமனின் நிபந்தனை.அதன்படி சீதை அந்த மரத்தைத் தொடுகிறாள்.உடனே அந்த மரம் பூத்துக் குலுங்குகிறது.காய்கள் தொங்குகின்றன.என்ன அற்புதமான உணர்வு? இது போலவே மாபெரும் கவி பவபூதி தன உத்தர ராமாயணத்தில் ராமனும் சீதையும் இறுதியில் ஒன்று சேர்வதாக முடிக்கிறார்.ஆனால் வேறு பல ராமாயணங்களில் சீதையின் முடிவு பூமித் தாயிடம் சரண் புகுந்து மறைவதாக அமைகிறது.ஆந்திராவின் பெண் போராளி சிநேகலதா ரெட்டி எழுதிய கதையில் சீதை தன கற்பு பற்றி சந்தேகப் படும் ராமனிடம் கடும் விவாதம் நடத்திய பிறகும் அவன் மனம் மாறாதது கண்டு கொதித்து எழுந்து அவனை நிராகரிப்பதாகக் கூறுகிறார்.தமிழ எழுத்தாளர் புதுமைப் பித்தன் தன சிறுகதையில் சீதையைத் தீயல் இறங்கச் சொல்லி ராமன் சொன்னதாகக் கேட்டதுமே "ராமனே சொன்னாரா?"என்று திரும்பத் திரும்பக் கேட்ட பின் இறுதியில் "அவனே சொன்னானா?"என்று கேட்டு, சீதை "ஆம்,ராமனே சொன்னதுதான் இது"என்று சொன்ன உடனே அகலிகை மறுபடி கல் ஆகி விட்டதாக ஒரு கடும் விமர்சனத்தைக் கதை மூலம் வைக்கிறார்.இது போன்ற பல உதாரணங்கள் சீதைக்கே ராமனை விடப் பெரும் புகழ் இருப்பதாக நிரூப்க்கின்றன என்கிறார் சிவப்பிரகாஷ்.மறுவாசிப்பு என்பது இதுதான்...........!
Saturday, November 14, 2009
sathyajith ray -unnikrishnan-isaiyum thiraiyum..............
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவது பற்றிப் பயணங்கள் முடிவது இல்லை என்று நினைத்துப் பார்க்கிறோம்.சற்று முன் படித்த ஓரிரு விஷயங்கள் நினைவில் அலை மோதுகின்றன.தனது இசைப் பயணம் பற்றி நினைவு கூர்ந்து அவர் சொல்வது நம் கவனத்திற்கு உரியது.தன அன்னையும் தந்தையும் அளித்த உத்வேகம்,வழிகாட்டுதல்,ஒரு போட்டியில் கிடைத்த பரிசு இவைதான் தனது இசைத் துறை வெற்றிக்குக் காரணம் என்கிறார்.டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் ஆக இருந்த உன்னிகிருஷ்ணன் இன்று மக்கள் மனங்கவரும் பாடகர்."என்னவளே அடி என்னவளே..."பாடல்தான் அவரின் முதல் திரைஇசைப் பாடல். அந்த ஒரே பாடலில் அவர் புகழின் உச்சிக்குப் போக முடிந்தது.சிறந்த பின்னணிப் பாடகர் என்ற தேசிய விருதையும் இந்த முதல் பாடலில் அவர் பெற முடிந்தது.இது திரை இசையில் வெற்றி பெற்ற ஒருவரின் அனுபவம்.திரைப் பட இயக்குனர் என்ற வகையில் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் வங்க மொழித் திரை இயக்குனர் சத்யஜித்ரே மற்றொரு உதாரணம்.உபெந்திரகிஷோர் என்ற கலைஞர் எழுத்து,இலக்கியம்,ஓவியம் போன்ற கலைகளில் சிறந்தவர்.ஆனால் தன திறமைக்கு ஏற்ற புகழை அடைய அவரால் முடியவில்லை.அவரது மகன் சுகுமார் ரேயும்சிறப்பான கலைஞர்தான். அவரும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.இவரது மகன் சத்யஜித் தாத்தா வின் கனவை நனவாக்கினார்.இவரது மூன்று வயதில் அப்பா இறந்து விட,அம்மா சுப்ரபா தான் தனி ஆளாக மகனை ஒரு திரை கலைஞராகி வெற்றி காணச் செய்தார்.தன அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை ஒரு உலகறிந்த திரைப்பட இயக்குனர் ஆக்கியது என்று பின்னாளில் ரேயே இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா-ஆகிய படங்கள் உலக அளவில் பாராட்டுக்களையும்,விமர்சனங்களையும் பெற்றவை.சாருலதா படத்தில் நமது கலாச்சார மதிப்பீட்டில் பெரும்விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ரே.ஓவியம்,நுண்கலைகள் பயின்ற திரைக்கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.தமிழ்த் திரைக் கலைஞர் சிவகுமார் போலவே ரேயும்.எந்த மொழியானால் என்ன?சிறந்த கலைஞர்களின் வாழ்க்கைப் பயணமும் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை உணர முடிகிறது...........!
Sunday, November 8, 2009
oor sutrip puraanam...............
ஊர் சுற்றிப் புராணம் என்ற புத்தகத்தை ராகுல சங்கிருத்தியாயன் எழுதி இருக்கிறார்.இவரின் பல புத்தகங்கள் மிகப் புகழ் பெற்றவை.இந்தப் புத்தகத்தில் ஊர் சுற்றுவது பற்றி அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதி இருக்கிறார்.ஊர் சுற்றி என்றால் பொதுப் புத்தியில் மிகத் தாழ்வான எண்ணமே இருக்கிறது.ஆனால் இந்தப் புத்தகம் படிப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.அவ்வளவு வலிமையான வாதங்களை ஊர் சுற்றுவதற்கு ஆதரவாக எடுத்து வைக்கிறார் ராகுல்ஜி. "ஊர் சுற்றிப் புராணம் எழுத வேண்டிய தேவையை நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.என்னை போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.வாசகர்களின் மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கம் அல்ல.அதற்குப் பதிலாக அந்த என்னத்தை வலுப்படுத்த வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்" என்கிறார் இவர்."உலகத்தில் உள்ள தலை சிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும்.ஊர் சுற்றுவதை விட மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளால் தான்இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர் சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான்.விவசாயம்,தோப்பு துறவு,வீடு வாசல் எதுவும் இல்லாத அவன் வானத்துப் பறவைகளைப் போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்......"இப்படித் தொடங்கும் புத்தகம் முழுக்க ஊர் சுற்றும் உயர்ந்த விரதம் வேறு எதுவும் இல்லை என்று நிறுவுகிறது.பகவான் புத்தர்,மகாவீரர்,குரு நானக் போன்று உலகின் பல மகா மனிதர்கள் அனைவரும் ஊர் சுற்றிகள் ஆகத்தான் இருந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி.அவ்வாறு ஊர் சுற்றியதன் மூலமே மனிதஇனம் இன்று அடைந்துள்ள அணைத்து முன்னேற்றங்களையும் அடைந்து உள்ளது என்று பல உதாரணங்களுடன் விவரிக்கிறார்.மிக அற்புதமான நடையில் இந்த நூலை மொழி பெயர்த்து இருப்பவர் ஏ.ஜி.எத்திராஜுலு.என்கிற முன்னோடி மொழி பெயர்ப்பாளர்.ராகுல்ஜியின் நூல்களில் மட்டுமே பன்னிரண்டுக்கு மேற்பட்ட நூல்களை தமிழுக்குத் தந்தவர் இவர்.பயன் கருதாமல் உலகம் சுற்றி வரும் ஊர் சுற்றிகளின் அனுபவங்கள் மனிதர்களின் முன்னேற்றம்,வளர்ச்சி,இலக்கிய-கலாசார உலகில் பெரும் படைப்புகள் தோன்றி வளர உதவி இருப்பது நாம் அறிந்த உண்மை,அல்லவா? தமிழில் இது போன்ற பயண இலக்கியங்கள் ஏராளமாக வந்து இருக்கின்றன.சிலப்பதிகாரக் காப்பியமே ஒரு வகையில் பயணம் சென்று ஒரு தம்பதியர் அடைந்த துன்பங்களின் கதை தானே?நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் பல பயண நூல்கள் ராகுல்ஜியின் கருத்துக்கள் உண்மைதான் என்று நிறுவுகின்றன.தி.ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி','உதய சூரியன்'போன்றவை;'சிட்டி' சிவபாத சுந்தரம் அவர்களின் 'சேக்கிழார் அடிச் சுவட்டில்',புத்தர் அடிச் சுவட்டில்''மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில்,' இப்படிப் பல புத்தகங்களைச் சொல்லலாம்.ஊர் சுற்றுகிற அனுபவங்களின் அடிப்படையில் இன்றும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் மிக நல்ல கட்டுரை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருவது நாம் அறிந்ததே.கோணங்கி என்கிற நவீன ஊர் சுற்றியின் அனுபவங்களை அவர் விவரிக்கும் சமயத்தில் நேரில் கேட்பவர்கள் அந்த அனுபவங்களை எந்த வார்த்தையில் விளக்க முடியும்? ராக்ல்சி என்கிற ஊர் சுற்றி முன்னோடியின் புராணம்,கட்டுக் கதைகளின் தொகுப்பு அல்ல.ஒரு பயன் கருதா கர்ம யோகியின் சிரத்தை மிக்க கருத்துலகம்...............!
Tuesday, October 27, 2009
மதுர கவியும் முருகபூபதியும்..
தமிழ நாட்டின் கலை இலக்கியப் பிரமுகர்களில் பலரும் இந்திய தேசிய விடுதலைப் போரில்பங்கேற்றவர்கள்.நாடக மேடையிலும் திரைப்படங்களிலும் எழுத்துலகிலும் இசைத் துறையிலும் இப்படி பல துறை விர்ப்பன்னர்கள் தமது விடுதலை ஆர்வத்தை தங்களால் இயன்றவரை தமது துறை சார்ந்தும் மக்களுடன் இணைந்தும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மதுர கவி பாஸ்கர தாஸ்.தமிழ நாடக மேடைப் பாடல்கள்,தமிழ்சினிமாவின் முதல் பாடல் வரிசை,கிராமபோன் ரிக்கார்டுகள் ,என்று ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மதுரகவி,அவரதுடயரிக் குறிப்புகளை மதுரகவியின் பேரனும் நவீனநாடகக் கலைஞனும் ஆனா முருக பூபதி தொகுத்துத் தந்திருக்கிறார்.
அன்றைய நாடக உலகம்,அதன் கலைஞர்கள்,அவர்களின் அன்றாட வாழ்க்கை,செலவுகள்,சுக துக்கங்கள்,அவர்களின் கலை வேட்கை,மிடுதலை போரின் நடுவே தமது துறை சார்ந்தும்,வெளியிலும்,அவர்கள் இயங்கிய விதம் பற்றி இந்தக் குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும்,இயல்பாகவும்,உணர்ச்சி வசப் படாமலும் பேசுகின்றன.
அன்றைய தேசபக்தர்கள் மீது அந்நிய அரசு ஏவிய அடக்குமுறைகள் குறித்து மதுரகவியின் பாடல்கள் எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.டயரிக் குறிப்புகளில் இருந்து நாம் அன்றைய தமிழ நாடக மேடைக் கலாசாரம் பற்றி அறிய முடிகிறது,
அன்றைய நாடக உலகம்,அதன் கலைஞர்கள்,அவர்களின் அன்றாட வாழ்க்கை,செலவுகள்,சுக துக்கங்கள்,அவர்களின் கலை வேட்கை,மிடுதலை போரின் நடுவே தமது துறை சார்ந்தும்,வெளியிலும்,அவர்கள் இயங்கிய விதம் பற்றி இந்தக் குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும்,இயல்பாகவும்,உணர்ச்சி வசப் படாமலும் பேசுகின்றன.
அன்றைய தேசபக்தர்கள் மீது அந்நிய அரசு ஏவிய அடக்குமுறைகள் குறித்து மதுரகவியின் பாடல்கள் எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.டயரிக் குறிப்புகளில் இருந்து நாம் அன்றைய தமிழ நாடக மேடைக் கலாசாரம் பற்றி அறிய முடிகிறது,
Sunday, October 25, 2009
வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடங்கள்...
வாசிப்பு பற்றி பொன்மணி வைரமுத்துவின் ஒரு கவிதை தினமணி தமிழ்மணியில் வந்துள்ளது.தொடர்ந்த வாசிப்பு என்பது மனிதர்களின் உணர்வுகளில் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள் பற்றி இக்கவிதை மிக அழகாகச் சொல்கிறது.
"நான் ஒன்றும் நாதஸ்வரம் வாசிக்கவோ புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப் படவில்லை. நூல் வாசிக்கும் ஆசை மட்டும் நாள் தோறும் வளர்கிறது.
கதை,கவிதை,கட்டுரை,எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி!சிறகு கட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி!
சற்று முன் தின்ற பசும் புல்லை ஆசுவாசமாய் அசை போடும் பசுவைப்போல் படித்ததை நினைக்க நினைக்க ஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு வினோதம்-
படைத்தவன் சொன்னதைச் சொல்லும்; சொல்லாததையும் சொல்லும். வாசிப்பு புறத்தில் மறப்பு.அகத்தில் விழிப்பு!
வாசிப்பு தனிமைத் தவம் ,
தாய்மடி வானமழை, ஆழ்கடல் ஊன்றுகோல் ஞாந தீபம் தேவ கானம் தலை தொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை!
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்;என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒரு கையில் தேநீர் இன்னொரு கையில் புத்தகம். இதை விடவா ஒரு வாழ்க்கை?! "
இந்தக் கவிதை வாசிப்பையும் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்கிறது. மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணாபுரம் கிராமம் .அங்கு ஒரு நூலகம். அகால மரணம் அடைந்த தன மகன் நந்தகுமாரின் நினைவாக திரு நவநீத கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நூலகம் இது.ருபாய் பத்து லக்ஷம் மதிப்புள்ள பத்தாயிரம் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாக நவநீத கிருஷ்ணன் சொல்கிறார். மகன் உயிருடன் இல்லாத சோகத்தில் நிலை குலைந்து போகாமல் இப்படி ஒரு காரியம் செய்ய முன்வந்த இருவரும் வாசிப்பின் மேன்மையை உணராதிருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது.
"நூலகமே என் குழ்ந்தை" என்கிறார் நவநீத கிருஷ்ணன். பொதுவாக் நம்மை விரக்தியில் ஆழ்த்தும் ஒரு மீளாத சோகத்தை வென்று நிற்பதற்கு புத்தகங்களின் மீதான ஒரு பிடிப்பு உதவி இருக்கிறதே! 'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' என்ற எனது சிறு நூலில் தமிழ நாட்டு நூலக இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.நூலக இயக்கத் தந்தை என்று போற்றப்படும் ச.ரா ரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை புத்தகமும் ஒரு பெரும் மேதையின் வாழ்வுமினைகிற விந்தையைச் சொல்கிறது.உலக நூலகங்களின் வரலாறு நம் வாசிப்பின் சாத்தியங்கள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று சொல்லும்.
வாசிப்பின் எல்லைகள் பற்றி ஒரு போது நினைக்காமல் தொடர்ந்து படிக்கும் ஒருவர் எப்படி இயங்குவார் என்பதற்கு ரங்கநாதன் ஒரு உதாரணம்.அவரது நூல்கள் மட்டுமின்றி அவர் வாழ்க்கையே நூலகம், நூலகம் என்றே துடித்த ஒரு இதயத்தின் கதையாக இருக்கிறது.கிராம நூலகம் என்ற ஒரு கருதுகோள் அவரின் சிந்தனையில் எவ்வளவு அழுத்தமாக இடம் பெற்று இருக்கிறது?முறையாகப் பராமரிக்கப் படும் ஒரு கிராம நூலகம் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுஅர்த்துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக இருக்கும் என்பது ரங்கநாதனின் நம்பிக்கை.
இது வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடமாக இருக்கிறது... இன்று இந்த விதமான இயங்குதல் சாத்தியம் தானா ,தெரியவில்லை... பதில் தேடும் பயணத்தை வாசிப்பு உலகிற்குள் சென்று தொடருவோம்!
"நான் ஒன்றும் நாதஸ்வரம் வாசிக்கவோ புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப் படவில்லை. நூல் வாசிக்கும் ஆசை மட்டும் நாள் தோறும் வளர்கிறது.
கதை,கவிதை,கட்டுரை,எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி!சிறகு கட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி!
சற்று முன் தின்ற பசும் புல்லை ஆசுவாசமாய் அசை போடும் பசுவைப்போல் படித்ததை நினைக்க நினைக்க ஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு வினோதம்-
படைத்தவன் சொன்னதைச் சொல்லும்; சொல்லாததையும் சொல்லும். வாசிப்பு புறத்தில் மறப்பு.அகத்தில் விழிப்பு!
வாசிப்பு தனிமைத் தவம் ,
தாய்மடி வானமழை, ஆழ்கடல் ஊன்றுகோல் ஞாந தீபம் தேவ கானம் தலை தொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை!
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்;என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒரு கையில் தேநீர் இன்னொரு கையில் புத்தகம். இதை விடவா ஒரு வாழ்க்கை?! "
இந்தக் கவிதை வாசிப்பையும் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்கிறது. மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணாபுரம் கிராமம் .அங்கு ஒரு நூலகம். அகால மரணம் அடைந்த தன மகன் நந்தகுமாரின் நினைவாக திரு நவநீத கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நூலகம் இது.ருபாய் பத்து லக்ஷம் மதிப்புள்ள பத்தாயிரம் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாக நவநீத கிருஷ்ணன் சொல்கிறார். மகன் உயிருடன் இல்லாத சோகத்தில் நிலை குலைந்து போகாமல் இப்படி ஒரு காரியம் செய்ய முன்வந்த இருவரும் வாசிப்பின் மேன்மையை உணராதிருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது.
"நூலகமே என் குழ்ந்தை" என்கிறார் நவநீத கிருஷ்ணன். பொதுவாக் நம்மை விரக்தியில் ஆழ்த்தும் ஒரு மீளாத சோகத்தை வென்று நிற்பதற்கு புத்தகங்களின் மீதான ஒரு பிடிப்பு உதவி இருக்கிறதே! 'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' என்ற எனது சிறு நூலில் தமிழ நாட்டு நூலக இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.நூலக இயக்கத் தந்தை என்று போற்றப்படும் ச.ரா ரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை புத்தகமும் ஒரு பெரும் மேதையின் வாழ்வுமினைகிற விந்தையைச் சொல்கிறது.உலக நூலகங்களின் வரலாறு நம் வாசிப்பின் சாத்தியங்கள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று சொல்லும்.
வாசிப்பின் எல்லைகள் பற்றி ஒரு போது நினைக்காமல் தொடர்ந்து படிக்கும் ஒருவர் எப்படி இயங்குவார் என்பதற்கு ரங்கநாதன் ஒரு உதாரணம்.அவரது நூல்கள் மட்டுமின்றி அவர் வாழ்க்கையே நூலகம், நூலகம் என்றே துடித்த ஒரு இதயத்தின் கதையாக இருக்கிறது.கிராம நூலகம் என்ற ஒரு கருதுகோள் அவரின் சிந்தனையில் எவ்வளவு அழுத்தமாக இடம் பெற்று இருக்கிறது?முறையாகப் பராமரிக்கப் படும் ஒரு கிராம நூலகம் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுஅர்த்துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக இருக்கும் என்பது ரங்கநாதனின் நம்பிக்கை.
இது வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடமாக இருக்கிறது... இன்று இந்த விதமான இயங்குதல் சாத்தியம் தானா ,தெரியவில்லை... பதில் தேடும் பயணத்தை வாசிப்பு உலகிற்குள் சென்று தொடருவோம்!
Thursday, October 22, 2009
இசையுடன் இசைந்த வாழ்க்கை...
இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மன்னா தே குறித்து இன்று வந்த பிரன்ட் லைன் இதழில் பர்தா சட்டேர்சு எழுதிய கட்டுரையும் அவருடனான நேர்காணலும் வெளி வந்துள்ளன.ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களில் இவர் ஒரு தனி ரகமானவர் ஆகத் தோன்றுகிறது. இப்போது இவர் வயது தொண்ணூறு.இந்த வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதை அடைந்திருக்கிற இவருக்கு அது ஒன்றும் துள்ளிக் குதித்து மகிழ்கிற ஒரு விசயமாகத் தோன்றவில்லை. அந்த மனநிலையை நான் எப்போதோ தண்டி விட்டேன் என்கிறார்.
தான் பாடிய ஏதோ ஒரு மெலோடியை மும்பை ,பெங்களூர் போன்ற ஒரு பெருநகரின் வீதிகளில் யாரேனும் ஒரு மனிதன் ஹும்மிங் செய்வதைக் கேட்பதுதான் பால்கே விருதை விடப் பெரிய விருது என்கிறார் மன்னா.ராக அடிப்படையில் அமைந்த கிளாசிக்கல் பாடல்களுக்குத்தான் இவர் பொருந்தி வருவார் என்று ஒருஎண்ணம் அன்று நிலவி வந்தது இவரின் வளர்ச்சியில் ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது போலும். அவரது மனைவி ஒரு கேரளப் பெண்.அவரின் வார்த்தைகளில் சொன்னால் "மன்னா தன இதயத்தில் இருந்து பாடுகிறார்" என்பதே சரி. மற்றவர்கள் நினைத்து போல தான் ஒன்றும் முற்ற முழுக்க கர்நாடிக் கிளாசிக்கல் பாடகர் அல்ல என்கிறார் இவர்.உஸ்தாத் படே குழாம் அலிகான், ப்ம்சென் ஜோஷி அல்லது அமிர்கான் போலத் தான் முழுமையான கிளாசிகல் பாடகர் அல்ல என்பது இவரின் கணிப்பு."நான் அதில் அப்படி ஆர்வமும் கொண்டிருக்கவில்லை" என்கிறார்.
சங்கர் ஜைகிசன் ,சலீல் சௌதரி ,க.ராமச்சந்திர போன்றவர்களின் இசையமைப்பில் தான் பாடிய பெருவெற்றி பெற்ற பாடல்கள் பற்றி மன்னாவும் கட்டுரையாளர் பர்தாவும் நிறையத் தகவல்களை தந்துள்ளனர். தொண்ணூறு வயதிலும் தான் சவால்களை ,சோதனை முயற்சிகளை தான் விரும்புவதாகவும்,தான்உயிருடன் இருக்கும் வரை பாடுவதைத் தொடரப் போவதாகவும் சொல்கிறார்.என்ன ஒரு மன உறுதி/நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது அல்லவா?
தான் பாடிய ஏதோ ஒரு மெலோடியை மும்பை ,பெங்களூர் போன்ற ஒரு பெருநகரின் வீதிகளில் யாரேனும் ஒரு மனிதன் ஹும்மிங் செய்வதைக் கேட்பதுதான் பால்கே விருதை விடப் பெரிய விருது என்கிறார் மன்னா.ராக அடிப்படையில் அமைந்த கிளாசிக்கல் பாடல்களுக்குத்தான் இவர் பொருந்தி வருவார் என்று ஒருஎண்ணம் அன்று நிலவி வந்தது இவரின் வளர்ச்சியில் ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது போலும். அவரது மனைவி ஒரு கேரளப் பெண்.அவரின் வார்த்தைகளில் சொன்னால் "மன்னா தன இதயத்தில் இருந்து பாடுகிறார்" என்பதே சரி. மற்றவர்கள் நினைத்து போல தான் ஒன்றும் முற்ற முழுக்க கர்நாடிக் கிளாசிக்கல் பாடகர் அல்ல என்கிறார் இவர்.உஸ்தாத் படே குழாம் அலிகான், ப்ம்சென் ஜோஷி அல்லது அமிர்கான் போலத் தான் முழுமையான கிளாசிகல் பாடகர் அல்ல என்பது இவரின் கணிப்பு."நான் அதில் அப்படி ஆர்வமும் கொண்டிருக்கவில்லை" என்கிறார்.
Subscribe to:
Posts (Atom)


