Friday, October 26, 2012

indrum iniyum

இன்றும் இனியும்
இந்த ஆண்டு முழுவதிலுமே நான்கு இடுகைகள்தான் இந்த பகுதியில் பதிவு செய்ய முடிந்தது.மனதில் ஓடுகிற எண்ணங்கள் எவ்வளவோ அவை எல்லாம் பதிவு செய்யப்பட முடிகிறதா என்ன?இன்று இலக்கிய உலகம் இருக்கிற இருப்பில் பல விதமான படைப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிற நிலை.வாசிப்பின் சாத்தியங்கள் எத்தனையோ அவை அத்தனையும் இந்தப் படைப்புகளில் காணக் கிடைக்கின்றன.சமீப நாட்களில் கல்வி குறித்து மிக அதிகம் படிக்கவும் சிந்திக்கவுமான ஒரு சூழல் நிலவுகிறது.கல்விச் சிந்தனைகள் அடங்கிய நூல்கள் சுமார் முப்பது வரை வாசித்து அவை பற்றி ஒரு கையேடு  தயார் செய்து இருந்தேன்.பாரதி,தாகூர்,அம்பேத்கர்,லெனின்,பாவ்லோ ப்ரையிரே,இன்னும் பல உலக அளவிலான மற்றும் நம் நாட்டு   சிந்தனையாளர்கள் பலரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு அது.நமது காலம் சிக்கல்கள் நிறைந்த ஒன்று.எந்த வழியில் செல்வது என்ற தெளிவு இல்லாத ஒரு சமூகம் நம்முடையது.இன்று நாம் நிற்கிற சந்திப்பு ஒரு முட்டுச் சந்து போல நம்மை மிரட்டுகிறது.இன்று நிற்கும் இந்தத் திசையில்  இருந்து  இருந்து எந்தப்பக்கம் போகப் போகிறோம் என்பது தெளிவாக இல்லை.என்றாலும் நமக்கு நிற்க முடியாத நிலை.நடந்து தீர்ப்பதே நம் கடமை.இன்றும்,இனியும்.........