Sunday, June 20, 2010
சாதாரண மனிதர்களின் விலைதான் என்ன?
போபாலில் இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷவாயுக் கசிவும் அதைத் தொடர்ந்து பதினாறாயிரம் பேர் ஒரே இரவில் மரணம் அடைந்ததும் இன்று உலகம் அறிந்த செய்திகள்.அந்தக் கொடுமை நிகழக் காரணமான அன்டர்சன் என்ற அமெரிக்கன் உட்பட பல உயர் அதிகாரிகள் இன்று சுதந்திரப் பறவைகள்.இவ்வளவு ஆண்டுக்காலம் நடந்த வழக்கும்,அதன் மீது வந்துள்ள தீர்ப்பும் இன்று மீண்டும் உலகை உலுக்கி இருக்கின்றன.அந்த இரவில் மடிந்து போன பல்லாயிரவர் தவிர இன்றளவும் அதன் பாதிப்பில் துன்புறும் பல லட்சம் பேருக்கு என்ன நிவாரணம் என்ற விவாதங்கள் சூடு பறக்கின்றன.உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் இந்த வழக்கு நீர்த்துப் போனது என்கிறார்கள்.தங்களின் தீர்ப்பு சரியே என்கிறார்கள் மாண்பமை நீதிமான்கள்.அமைச்சர்கள் குழு ஒன்று இப்போது மீளாய்வு நடத்திக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் மட்டும் இன்றி எந்த நாட்டிலும் சாதாரண மனிதர்களின் உயிர்கள் கேவலம் கிள்ளுக்கீரை போலத்தான் கருதப்படுகின்றன.இந்த விவகாரம் முழுக்கப் படிக்கும் ஒரு சாதாரண மனிதன் எந்த நம்பிக்கையில் உயிர் வாழ்வான்?மனதி ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி இது ஒன்றுதான்.கோடிக்கணக்கான பேரின் கடும் எதிர்ப்புகளுக்கு இந்தப் பிரச்னையைக் கையாண்டவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?ஆண்டர்சன் என்ற கயவன் இந்தக் கொடும் விபத்துக்குப் பின் மிகப் பத்திரமாகத் தன நாட்டுக்குப் போய்ச் சேர உதவியவர்கள் யார்?இன்று நம் மனதில் தார்மீக நெறி சார்ந்துஎஞ்சி இருக்கும் உணர்வுகள் என்ன?ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வெறும் பிரமையா?கேள்விகள் குடைகின்றன.பதில்தான் கிடைப்பது இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment