இந்தப் பதிவில் எனது இடுகை இடம்பெற்று நீண்ட காலம் ஓடி விட்டது.எண்ணங்கள் என்னவோ அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன.அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் என்று பொன்னியின் செல்வன் வரும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.படிக்கும் ஒவ்வொரு புதிய புத்தகமும் நமது சிந்தனைகளைக் கூர்மை ஆக்குகின்றன.கல்கத்தா சு.கிருஷ்ணாமூர்த்தி எழுதிய என் வாழ்க்கைப் பயணம் புத்தகமும் அவ்வாறே எண்ணற்ற நினைவு அலைகளை எழுப்பியது.தீபம் பத்திரிகை அதில் வந்த பல முக்கியமான படைப்புகள் பற்றிய பதிவுகளை அவர் செய்திருக்கிறார்.வேறு பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.உதயசங்கர் மொழி பெயர்ப்பில் சதாத் ஹசன் மோண்டோ கதைகள் நூலும் அவற்றில் ஒன்று. சிவப்பு மழைக் கொட்டு அணிந்த பெண் என்ற கதை உட்பட அவரின் மிக முக்கியமான கதைகளை உதயசங்கர் மிக உணர்ச்சித் துடிப்புடன் தமிழில் தந்திருக்கிறார்.இன்னும் முழுமையாகப் படித்து முடிக்க முடியவில்லை.இன்று மகாகவி பாரதியின் குயில் பாட்டு நீள் கவிதையை மீண்டும் எடுத்துப் படித்தேன்.புதுமின் என்ற சொற் பிரயோகம் நெஞ்சில் பதிந்தது.இதே பிரயோகத்தை ச.து.சு.யோகி தன பாடல் ஒன்றில் பிரயோகித்ருக்கிறார்.குழ்ந்தை யின் மென்னுடலை புதுமின் போல் வளயுமுடல் என்கிறார்.மின்னல் என்பதே ஒரு புதுப் பாய்ச்சல்தான். அதில் புது என்பதும் செரும்விந்தையை இந்த இரு கவிகளும் வியந்து பாடுகிற அழகை வியக்காமல் இருக்க முடியவில்லை.
No comments:
Post a Comment