Sunday, April 11, 2010
எழுதும்வேளைகளில் நம் மன உலகம்....
எழுதும்வேளைகளில் நம் மன உலகம்.......மார்ச் மாதம் பதிவுக்குப் பின் வேறு ஒரு பதிவும் செய்ய முடியாமல் வெளியில் அலைந்து கொண்டிருந்தேன்.இன்று படித்த சில வாக்கியங்கள் இப்படி உட்கார வைத்தன."உங்கள் எழுத்தின் ஊடே நீங்கள் மூச்சு விட்டுக்கொள்ள தவறினால்,உங்கள் எழுத்தில் நீங்கள் கதறிக் குரல் எழுப்பவில்லை என்றால்,உங்கல் எழுத்தின் இடையே நீங்கள் பாடவில்லை என்றால் பிறகு நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்கள்.நமது கலாச்சாரத்திற்கு உங்கள் எழுதினால் ஒரு பயனும் கிடையாது...!" மிக ஆழமான சிந்தனைகளை எழுப்பும் கருத்து இது.ஒவ்வொரு எழுத்தாளனும் தன அனுபவத்தில் உணர்கிற ஒன்றினை இந்த வரிகள் சொல்லுகின்றன.நாம் உணர்கிரவற்றை உணர்ந்தபடி முழுமையாகக் கொண்டு வர முடியாவிட்டாலும்,பெரும் அளவுக்கு படிக்கிறவர்கள் உணரும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் எழுதும் ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் கதறிக் குரல் எழுப்பித்தான் ஆக வேண்டும்.ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் நம் ஆத்மா இசைக்கும் பாடல் ஒன்றின் சாயலையாகிலும் கோடிட்டுக் காட்டி இருக்கவேண்டும்.வெளியில் வரத் தவித்துக் கொண்டு அலை மோதும் மூச்சு நம் e ழுத்தில் சுதந்திர உணர்வுடன் பீரிட்டு வந்திருக்க வேண்டும்.இப்படி உணர்ந்து எழுதினால் எழுத்தின் ஜீவனை வாசிப்பவர்கள் நன்றாக உணர முடியும்.இது நம் ஆசை.நிறைவேற வேண்டும் அல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment