Wednesday, August 25, 2010
தலைநகரில் சில தினங்கள்..........!
இந்த மாதம் பதினேழாம் தேதி டெல்லி செல்ல நேர்ந்தது.இருபதாம் தேதி அங்கு அலுவலக முறையிலான கூட்டம் ஒன்று இருந்தது.அதை முடித்த பின் திரும்பும் தேதி இருபத்தி இரண்டு என்று அமைந்தது.டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட நன்மை அல்லது தீமை என்று சொல்லலாம்.நன்மை---அங்கு ஓரிரண்டு தினங்கள் இருக்க முடிந்தது.தீமை?அதைப் பிறகு பார்ப்போம்.இதற்கு முன்பும் நான்கு முறை டெல்லி போய் இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அந்த நகரம் எனக்கு வியப்பையும்,மகிழ்ச்சியையும்,துயரத்தையும்,ஆர்வத்தையும் இன்ன பிற உணர்வுகளையும் தருவது ஆகவே இருந்து வருகிறது.நேரில் டெல்லி அறிமுகம் ஆவதற்கு மிகவும் முன்னதாகவே அந்த நகரின் சில பதிவுகளை ஆதவனின் "காகித மலர்கள்",இந்திரா பார்த்தசாரதியின் "தந்திர பூமி","சுதந்திர பூமி"போன்ற நாவல்கள் வாயிலாக அறிந்து வைத்திருந்தேன்.ஆனால் நேரில் பார்ப்பது,அறிவது என்பது முற்றிலும் வேறு.யமுனை என்னும் நதியின் அழகும்'தாஜ்மகாலின் சௌந்தர்யமும்,செங்கோட்டையின் கம்பீரமும்'ஆக்ரா கோட்டையின் துயரம் பொதிந்த மௌனமும்,லோதி கார்தேனின் பசுமைதொய்ந்த உயிர்த் தாவரங்களும் பார்லிமென்ட், ராஷ்ட்ரபதி பவன் போன்ற பிரம்மாண்டங்களின் அச்சுறுத்தும அதிகாரத் தொனியும் எல்லாமும் ஒரு சாதாரண மனிதனின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், இழப்புணர்வையும்,ஏக்கத்தையுமே தரக் கூடியவை.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்நடத்துவதற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அங்கு நடைபெறும் பணிகளும்,அவட்ருக்கானசெலவுகளும் பற்றிய அவலக் கதைகளை ஊடகம்களின் வாயிலாக தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம்.நேரில் பார்கையில் அதன் அவலம் நெஞ்சை பிளந்தது.நவீன,புதிய தாராளமயம்,உலகமயம்,தனியார்மயம் என்ற தாரக மந்திரங்களின் அக்டோபஸ் பிடியில் இன்று நம்மை ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள்.ஆகவே,நாமும்! யமுனை நதியைப் பற்றிய என் கற்பனைகள் முதல் முறை டெல்லி போனசமயம் சுக்கு நூறாகி இருந்தன.அந்த நதியின் ஒரு ஓரம் சாக்கடை ஒன்று ஓடுவதுதான் அன்று நான் கண்ட யமுனை.ஆனால் இந்த ஒரு வாரமும் ஏன்,அதற்கு முன்பிருந்தே பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மழையின் விளைவாக அங்கு இப்போது அதன் இரு கரைகளும் கொள்ளாமல்,அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.அங்கு மட்டும் இன்றி வரும் வழிஎல்லாம் அணைத்து மாநிலங்களிலும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் இப்போது நீரில் மூழ்கி கிடக்கின்றன.பெய்தும் கெடுக்கும்,காய்ந்தும் கெடுக்கும் என்று மக்கள் நோகிற சொலவடை எவ்வளவு உண்மை? எண்ணங்களின் வெள்ளமும் அதே அளவுக்குப் பிரவாகம் எடுத்துப் பெருகித்தான் பாய்ந்தது.ஆனால் அவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வரத்தான் முடியவில்லை...................!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment