Friday, December 31, 2010
நாஞ்சில் நாடனுடன் சில மணி நேரங்கள்
இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.அவரின் நேர்காணலை செம்மலர் இதழுக்காக நான் எடுக்க வேண்டி வந்தது.ச.தமிழ்ச்செல்வன் சொன்னதின் அடிப்படையில் இந்த நேர்காணலை நண்பர் மணி கோவையில் நாஞ்சினாடனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.டிசம்பர் இருபத்தியாறாம் நாள்இதற்காக கோவை போனேன்.அன்று பல வேலைகள் இங்கு இருந்த போதும் நாஞ்சில் நாடன் என்ற ஆளுமை என்னை ஈர்த்தது.தீபம் இதழில் வந்த அவரின் முதல் சிறுகதையில் இருந்து நான் அவரின் படைப்புகளை வாசித்து வருகிறவன்.மாமிசப் படைப்பு என்ற அவரின் நாவல் தீபத்தில் தொடராக வந்தது.தலை கீழ் விகிதங்கள் என்ற நாவலில் அவர் அடைந்த வெற்றி மிகப் பெரியது.அன்றும் இன்றும் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கும் ஒருசிலரில் இவரும் ஒருவர்.தீதும் நன்றும் என்ற கட்டுரைத் தொடரின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வகையில் சமகாலப் பிரச்னைகள் பற்றி இவர் எழுதியது பலரின் கவனதயை ஈர்த்து செயல்ரீதியான பல எதிர்வினைகளை ஏற்ப்படுத்தியது.குறிப்பாக பெண் மாணவிகள் பயிலும் பள்ளியில் கழிப்பறை வசதிகள் எவ்வளவு மோசமான வகையில் இருக்கின்றன என்று இவர் பதிவு செய்தது தமிழ்நாடு முழுக்க எதிரொலிகளை உண்டாக்கியது.தான் வாழும் காலத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் எழுதுவது சிலரால்தான் முடிகிறது.அந்த வகையில் நாஞ்சில் நாடன் ஒரு மாபெரும் படைப்பாளி.செம்மலர் பொங்கல் மலரில் அவரின் நேர்காணல் வந்த பிறகு என்ன விதமான எதிர்வினைகள் வருகின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது. இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு என் சிந்தனைகளைப் பதிவு செய்ய அமர்ந்த வேளையில் இந்த வருடம் முழுக்கவே பதினாறு பதிவுகள் மட்டுமே என்பது சட்று ஆயாசமாக இருக்கிறது.இன்று வருடத்தின் கடைசி நாள்.நாளை புத்தாண்டு பிறக்கிறது.வரு ஆண்டில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.பார்ப்போம்..............!
Subscribe to:
Post Comments (Atom)
பேட்டியை பகிர்வீர்களா? நன்றி
ReplyDelete