Wednesday, December 2, 2009

ithu varaiyilaana pathivukal.............!

எனது சிந்தனைகளை இப்படி வலைப்பூவில் பதிவு செய்யத் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன.நான் படித்த விசயங்களை,என் படைப்புகளில் இருந்து சில பதிவுகளை,என் கவனத்திற்கு வந்த நிகழ்வுகள் மீதான என் கருத்துக்களை,பிற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றி,இப்படி அவ்வப்போது தோன்றிய கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்து வருகிறேன்.அவற்றில் ஒரு நான்கு பதிவுகள் தமிளிஷ் மூலம் பிரபலமான இடுகைகள் ஆக தேர்வாகவும் செய்தன.எங்கெங்கோ இருந்து இப்பதிவுகளைப் படிக்கவும்,பாராட்டவும்,புறக்கணிக்கவும்,பார்த்து விட்டு எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் இருந்து விடவுமாக நாட்கள் ஓடுகின்றன.மற்ற ஊடகங்களை விட இங்கு உடனே எதிர்வினைகள் என்ன என்று தெரிந்து விடுகின்றன.                                                                         தூங்கும் நினைவுகள் என்ற நா.பா.வின் குறுநாவல் இப்போது என் மனப் பரப்பில் ஓடுகிறது. அவரின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த சிலவற்றில் இதுவும் ஒன்று.ஒரு மலைகாடு சார்ந்த கிராமம் ஒன்றில் ஆசிரியர் பணி செய்யும் கதை சொல்லி,தன அடிமனதில்  மறைந்து கிடந்த சோகக்கதை ஒன்றை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிறார்.நா.பாவுக்கே உரிய மேன்மை கொஞ்சும் தமிழில் இந்தக் குறுநாவல் எழுதப் பட்டிருக்கும்.நினைவுகளின் சுமையைப் போல் கனமான வேறொன்று கிடையாது.இதை படிக்கும் அனைவர் மனதிலும் அந்த சுமை பாறாங்கல் போல் இறங்கும்.நமது பதிவுகளின் சுமையை நாமே சுமக்க முடியாமல் திணறிப் போவோம்.............!

2 comments:

  1. ////இதை படிக்கும் அனைவர் மனதிலும் அந்த சுமை பாறாங்கல் போல் இறங்கும்.நமது பதிவுகளின் சுமையை நாமே சுமக்க முடியாமல் திணறிப் போவோம்///

    ரொம்ப அருமையா எழுதறீங்கன்னு சொல்ல இந்த வரிகளே போதும். நிஜமா இதை படிக்கறப்போவே மனசு கனத்துப் போகுது.

    ReplyDelete
  2. unkalin karuthu padithen.unmaiyil inthak kuru naaval padikkum pothu nam nenjil thoonkum ninaivukalin sumai paaraankal pol kanappathai naam nanku unara mudiyum.neenkal padithu iruppeerkal endru ninaikkiren. pinnoottathirku mikka nandri......Kamalalayan

    ReplyDelete