சிற்பம்,சிற்பக்கலை என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே,பொதுவாக நமக்கு பாரம்பரியச்சிறப்பு மிக்க கோவில்களில்,தூண்களிலும்,கோபுரங்களிலும்,பிராகாரச் சுவர்களிலும் நிறைந்திருக்கிற கர்ச்சிலைகளே நினைவுக்கு வருகின்றன.அவற்றைப் பற்றி சிர்ப்பக்களை வல்லுனர்கலால்தான் பேச முடியும்;அவற்றை ரசிக்க முடியும்-என்ற உணர்வுதான் நமக்கு இருக்கிறது.
உண்மையில் அது அப்படித்தானா?நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த நுண்கலைகள் பற்றி அறிவதர்க்கோ,உணர்ந்து அனுபவிப்பதற்கோ ஒன்றுமே கிடையாதா?
"அப்படி இல்லை!நம் எல்லோரிடத்திலும் ஒரு சங்கீதக் காரன் இருக்கிறான். சிற்பியும், ஓவியனும் கூட.அதனால்தான் நம்மால் இசையை ரசிக்க முடிகிறது.நாம் போடுகிற சட்டை,பண்ட்டுகளுக்கு கலர்கோம்பிநேடின்,மாட்சிங் பார்க்கச் செய்வது நம்முள் இருக்கும் ஓவியந்தான்...."என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சிற்பி வல்சன் கொலேரி.
பல புகழ் பெற்ற சிற்பிகளையும்,ஓவியர்களையும் உருவாக்கிய சென்னை கலை-கைத் தொழில் கல்லூரியில் பயின்றவர்தான் இவரும்.சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு,சத்தச் சீரழிவு போன்று இன்றைய நவீன யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன்,இந்திய சிற்பக்கலை மரபின் நீண்ட செழுமையான பாரம்பரிய அம்சங்களை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருப்பது வல்சனின் பாணி ஆகும்.
"மலபாரில் பாத்தியம் என்ற ஊரில் பிறந்து வளந்தேன். சென்னைக்கு வந்தேன்.போவிருந்தவல்லி ஹை ரோடில் கலை-கைத் தொழில் கல்லுரி வாழ்க்கை.சென்னை நகரில் இடைவிடாத சத்தச் சீரழிவு தாங்க முடியாத சோகமாக இருந்தது.உள்ளூர ஓயாமல் அலறிய ச்ய்றேன்.இந்த ஓயாத சத்த அதிர்வில் இருந்து தப்பிக்க உள்முகமாகப் பயணமானேன்.என்னுடைய முதல் சிற்பத்தை இந்த உளைச்சலை வெளிப்படுத்த உதவிய ஒரு சங்கீதமாகவே பார்க்கிறேன்..."
சிற்பி ஆகத் தன்னை உருவாகிய கல்லுரி அனுபவங்கள் குறித்து மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவராய் கண்களை மூடியபடி பேசிக் கொண்டே போகிறார் வல்சன். "மனித உடம்புக்கும்,அதனுடைய இருத்தலில் அவனறியாமலே பிரதான பங்கு வகிக்கும் புவியீர்ப்பு விசைக்குமிடையே உள்ள உறவைப் பற்றி ஆழ்ந்து கவனித்து வந்திருக்கிறேன்....இந்த இரண்டுக்கும் இடையேயான சீரான உறவு மனித உடலுக்கு அழகைத் தருகிறது.இந்த அழகினை நமக்குக் கிடைக்கும் எந்தப் பொருளிலும்,எந்த வடிவிலும் மறு உருவாக்கம் செய்ய முடியும்...!"என்று சொல்லுகிற வல்சன்,வெண்கலம்,கிரானைட் கற்களிலும் தன் சிற்பங்களுக்கான மூலப் பொருளைத் தேர்வு செய்கிறார்.
No comments:
Post a Comment