Sunday, November 1, 2009
ammy kothavum sirpi thevaithaan........
நேற்று என் வலைப் பதிவில் சிற்பி வல்சன் கொலேரியின் அனுபவப் பதிவுகளை அவரின் நேர்காணல் ஒன்றில் இருந்து இட்டிருந்தேன்.என் கட்டுரை தொகுப்பில் அது இடம் பெற்று இருக்கிறது.இன்றும் அவரது கருத்துக்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.:"உடைந்த அம்மிக் கல்லில்,தன தாயார் நீண்ட காலம் வீட்டில் புழங்கிய பழைய வெண்கலப் பாத்திரத்தில் உயிர்த் துடிப்பு மிக்க சிற்பங்களை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் : ".....பழைய அம்மிக்கல்-அர்த்தம் நிறைந்த ஒன்று.அது உடைந்து துண்டுகளாக ரோட்டில் கிடக்கும் போது பல நூற்றாண்டுகளாக இந்திய உழவர்களின் வரலாற்றைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடப்பது போல் தோன்றுகிறது எனக்கு,அந்த மாற்றிக் கிடக்கிற கல்லின் அழகினை உளி கொண்டு சிதைக்க எனக்கு மனமில்லை.எந்தக் கல்லிலும்,எந்த மரத்த துண்டிலும் எஅதோ ஒரு சொவ்ந்தர்யம் இருக்கத்தான் செய்கிறது.அதை என் கெடுக்க வேண்டும்? எந்தச் சிற்பம்,எதனால் செய்யப் பட்டு இருக்கிறது என்று பார்பவருக்குத் தெரிய வேண்டும்.எந்தப் பக்கம் திருப்பினாலும் ஒரு சொவ்ந்தர்யம் இருக்க வேண்டும்....மெடீரியல் வங்கக் காசு இல்லாத போது-உடைந்த செங்கற்களை எடுத்து மணிக் கணக்கில் உரசி கிரைந்து பண்ணி நூற்றுக் கணக்கான kkyubuகளை உருவாகுவதற்குப் பயன்படுத்தினேன்.நல்ல கலைக்கு பற்றாக் குறைதான் உந்துதலாகக் கூட இருக்கிறது,மிக்கேல்-அஞ்சலோவின் 'டேவிட்' உருவானது கூட இதுபோல்தான்..." வல்சனின் சிற்பங்கள் ஏதோ வெறும் ஆத்மா திருப்திக்காக வடிவமைக்கப் படுகிறவை அல்ல........திறவுகோலே என்று ஒரு சிற்பம்.புது டில்லி lalitha கலா அகாடமியின் முகாமிற்குச் சென்ற வல்சனின் கண்களில் கட்டி முடிக்கப் பட்டுப் பல ஆண்டுகளாகியும் பயன்படுத்தப் படாமல் மூடிக் கிடந்த "ஜவகர்லால் நேரு கலாகேந்திரா "கட்டிடம் பட்டிருக்கிறது."அதைத் திறந்து பயன்படுத்துங்கள் "என்று மொவுனமாக வலியுறுத்துகிற ஒரு சிற்பம்தான் திறவுகோலே ஆக வடிவு எடுத்துநின்றது...."சாலைகளை அகலப் படுதுவதர்க்காகப் பல ஆண்டுகளாக நிழாலும் கனிகளும் தந்து வந்திருக்கிற நெடிய மரங்களை வேருடன் தோண்டிப் போடுகிறோம்.அந்த மரங்களின் கதறலை நாம் ஒரு கணமேனும் கேட்டிருப்போமா?ஒரு பத்து நிமிடம் நம்மால் சேர்ந்தார்ப் போல் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டே நின்றிருக்க முடிகிறதா?....ஆனால் சாலை ஓரங்களில் அய்ம்பது,அறுபது ஆண்டுகளாகத் தனது கிளைகளை நீட்டியபடியே நிzaலையும், கனிகளையும் நமக்குத் தந்து கொண்டே அயராமல் இருந்து வந்த மரங்களின் கதரல்களைச் சட்டையே பண்ணாமல் அவற்றை வட்டிப் போட்டு விட்டு சாலை அமைப்பதில் சந்தோசப் படுகிறோம்.கொச்சின் அருகே ஒரு முகாமில் பங்கேற்ற போது -அருகில் இருந்த சாலையை அகலப் படுத்துவthaற்காக ஒரு பிரமாண்டமான மரத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள்.இருபது,முப்பது பேரை அழைத்துக்கொண்டு சென்று தோண்டி போடப்பட்டிருந்த மரத்தின் வேர்களைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தேன்.முகாமில் இயல்பாய் வளர்ந்து இருந்த சிருகொடிகள்,வேரடி மண்ணோடு சாய்ந்திருக்கும் மரச் சரிவில் முளை விடுவது போன்ற சிற்பமாக வடிவமைத்தேன்.-அதைப் பார்க்கிற எந்த மனித மனதிற்கும்,எதிர்காலத்தில் எந்த இடத்திலும் இம்மாத்ரி மரங்களை வெட்டும்போது கொஞ்சமேனும் உறுத்தல்,தயக்கம் ஏற்படாமல் இருக்காது,...."என்கிறார் வல்சன் கொலேரி.அம்மி koத்த சிற்பி எதற்கு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதி இருந்தார்.சினிமாப் பாடல் எழுதுவதற்கு தன போன்ற கவிஞர்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் அப்போது அக்கருத்தினை எழுதியிருந்தார்.ஆனால் சிற்பியான வல்சன் கொலேரியின் அனுபவத்தில் அம்மி கொத்தவும் சிற்பி தேவைதான் என்று நிரூபணம் ஆகி இருக்கிறதே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment