Saturday, November 14, 2009
sathyajith ray -unnikrishnan-isaiyum thiraiyum..............
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவது பற்றிப் பயணங்கள் முடிவது இல்லை என்று நினைத்துப் பார்க்கிறோம்.சற்று முன் படித்த ஓரிரு விஷயங்கள் நினைவில் அலை மோதுகின்றன.தனது இசைப் பயணம் பற்றி நினைவு கூர்ந்து அவர் சொல்வது நம் கவனத்திற்கு உரியது.தன அன்னையும் தந்தையும் அளித்த உத்வேகம்,வழிகாட்டுதல்,ஒரு போட்டியில் கிடைத்த பரிசு இவைதான் தனது இசைத் துறை வெற்றிக்குக் காரணம் என்கிறார்.டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் ஆக இருந்த உன்னிகிருஷ்ணன் இன்று மக்கள் மனங்கவரும் பாடகர்."என்னவளே அடி என்னவளே..."பாடல்தான் அவரின் முதல் திரைஇசைப் பாடல். அந்த ஒரே பாடலில் அவர் புகழின் உச்சிக்குப் போக முடிந்தது.சிறந்த பின்னணிப் பாடகர் என்ற தேசிய விருதையும் இந்த முதல் பாடலில் அவர் பெற முடிந்தது.இது திரை இசையில் வெற்றி பெற்ற ஒருவரின் அனுபவம்.திரைப் பட இயக்குனர் என்ற வகையில் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் வங்க மொழித் திரை இயக்குனர் சத்யஜித்ரே மற்றொரு உதாரணம்.உபெந்திரகிஷோர் என்ற கலைஞர் எழுத்து,இலக்கியம்,ஓவியம் போன்ற கலைகளில் சிறந்தவர்.ஆனால் தன திறமைக்கு ஏற்ற புகழை அடைய அவரால் முடியவில்லை.அவரது மகன் சுகுமார் ரேயும்சிறப்பான கலைஞர்தான். அவரும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.இவரது மகன் சத்யஜித் தாத்தா வின் கனவை நனவாக்கினார்.இவரது மூன்று வயதில் அப்பா இறந்து விட,அம்மா சுப்ரபா தான் தனி ஆளாக மகனை ஒரு திரை கலைஞராகி வெற்றி காணச் செய்தார்.தன அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை ஒரு உலகறிந்த திரைப்பட இயக்குனர் ஆக்கியது என்று பின்னாளில் ரேயே இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா-ஆகிய படங்கள் உலக அளவில் பாராட்டுக்களையும்,விமர்சனங்களையும் பெற்றவை.சாருலதா படத்தில் நமது கலாச்சார மதிப்பீட்டில் பெரும்விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ரே.ஓவியம்,நுண்கலைகள் பயின்ற திரைக்கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.தமிழ்த் திரைக் கலைஞர் சிவகுமார் போலவே ரேயும்.எந்த மொழியானால் என்ன?சிறந்த கலைஞர்களின் வாழ்க்கைப் பயணமும் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை உணர முடிகிறது...........!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment