ஆ.சுப்ரமணியன் ஆசு என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். துவரை இவரின் ஆறு தொகுப்புகள் வந்து இருக்கின்றன.
ஆறாவது பூதம், அன்றொரு மௌனம், ஈரவாடை, குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன் ஆகியவை ஏற்கனவே வந்தவை. இப்போது 'நேசித்தவனின் வாழ்வுரை' வந்திருக்கிறது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. த.அறிவழகன் இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அவர் வார்த்தைகளில்:
"வாழ்வின் சிக்கல்கள் எதிர்பாராத நெருக்கடிகளாகிற போது ஓரளவிற்கு எழுதி வந்த பலரும், தங்கள் அடையாளங்களை மீட்டு எடுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றனர். வெகுசிலரே நெருக்கடிகளையும் படைப்புகள் ஆக்கி மகிழும் சாமர்த்தியம் கைவரப் பெற்றவர்கள் ஆகமாறுகின்றனர். அவ்வகையில் தமிழ்க் கவிதைச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் ஆகவும் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் சாமர்த்தியமாக இயங்குபவர் ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் ஆசு".
கவிஞரின் எண்ணங்கள் ஓடும் திசை பற்றி அவரே சொல்கிறார்: "மொழியின் சாதுர்யத்திற்குள் குரலையும் கருதுக்களையும் ஒளிக்காமல், அதன் தேவைக்கு ஏற்ப கவிதையினை முன் நகர்த்த வேண்டிய பயன்பாட்டுக் கருவியாகவும் படைப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தையும் கவனத்தில் கொள்கிறேன்."
ஆசுவின் இந்தக்குரல் முக்கியமான ஒன்று. "சின்னஞ்சிறிய குருவி நான், என் கூட்டை அழகாகக் கட்டிக் கொள்வேன்; யாவரின் துயரும் எனக்கானதாய் அகற்றுவேன். புன்னகைகளால் பூமி முழுவதும் நிறைப்பேன், மழை பகிர்ந்து காடுகளை விதைப்பேன்" என்கிறார் ஆசு.
"நிரம்பி வழியும் ஒவ்வொரு வின்மீணிலும் கடவுளின் கண்களில் ஒழி யுமில்கின்றன, ஒரே அன்பின் நீர்மை அந்த விண்மீனில் வழிவதை உணர்கிறேன்". இவ்வாறு ஆசுவின் கவி உலகம் விரிந்து கொண்டே போகிறது. நம் நெஞ்சில் இடம் பெறுகிறது.
No comments:
Post a Comment