லால்கர் ஒரு மூன்றாவது பார்வை என்ற புத்தகமும் அரசு,இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள் என்ற புத்தகமும் மார்க்ஸ்-எழுதிய புதிய நூல்கள். சமீப நாட்களில் ஊடகங்களில் மிகவும் அடிபட்ட விஷயங்கள் குறித்து மிக ஆழமான முறையில் மார்க்ஸ் எழுதி இருக்கிறார்.வன்முறை என்பது இன்றுள்ள சூழ்லில் அரசு பயங்கர வாதத்திற்கு மட்டும் பயன்படுகிற ஒரு ஆயுதமே தவிர சமூக மாற்றம் வேண்டிப் போராடும் இயக்கங்கள் தமது இலட்சிய நிறைவேற்றத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதமாக இல்லை என்ற வாதத்தை மார்க்ஸ் முன் வைக்கிறார்.நடைமுறை அனுபவங்களில் இருந்து இன்னும் நக்சல் இயக்கங்களும் மாவோயிஸ்ட் இயக்கங்களும் பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே நம் ஆதங்கமயிருக்கிறது.
அரசு எப்போது வன்முறையைக் கையில் எடுக்கிறது? மக்களிடம் தனது பிடி தளர்கிறது என்று உணர்கிறதோ அப்போதுதான்,அதுவரை அரசு மக்களின் ஒப்புதலுடன் தன் அதிகாரத்துறை ஆளுகையை மக்கள் மீது செலுத்திக் கொண்டு இருக்கிறது.எனவே அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான ஒரு இயக்கம் வெற்றி அடைய வேண்டுமானால் அந்த முடிவுகளுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்கக் கூடாது.அந்த வகையில் சமூக மற்றத்ர்க்கான இயக்கங்கள் எதிர் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இரக்க வேண்டும்.ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதே சோகம்.மார்க்ஸ் இந்த உண்மையை மிகக் கூர்மையாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கிறார்.
சிறிய இரு நூல்களும் மிகச் செறிவான முறையில் எழுதப்பட்டு இருக்கின்றன.இந்த உண்மைகள் ஏன் போராளிகளுக்குப் புரியவில்லை என்ற கேள்வி நமக்கு எழும்.அதற்கும் மார்க்ஸ் பதில் சொல்லி இருக்கிறார்.இன்றைய போராளிகள் தீவிரமாக் எதயும் படித்து மக்களின் நிகழ கால வாழ்வு பாதிக்காமல் எதிர் கால லட்சியங்களின் வெற்றிக்குப் போராடுவது கிடையாது என்பதே மார்க்ஸ்ன் அவதானிப்பு. இன்றுள்ள நிலையில் மிகக் கவலையுடன் யோசிக்க வேண்டிய பல செய்திகளை மார்க்ஸ் எழுதி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே ஒரு பிரச்சினை என்ன என்றால் இந்த இரு நூல்களிலும் இழையோடும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு என்பதுதான். இது பற்றி விரிவாகப் பார்கத்தான் வேண்டும்.

No comments:
Post a Comment