Saturday, November 21, 2009
annal ambethkarum kalviyum..........!
இந்தியா விடுதலை பெற்ற பின் அதன் அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பியான அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்த ஒருவர்.தன ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன் மொழிகிறார்.அவை: "பொதுக் கல்வித் துறையிலும், சட்டக் கல்வித்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அறிவியல்,பொறியியல் துறைகளில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.வெளிநாடுகளின் பல்கலைககழகங்களில் உயர் தரக்கல்வி கற்பதென்பது எட்டாக் கனியாக உள்ளது.அறிவியலிலும்,தொழில் நுட்பத்திலும் உயர் தரக்கல்வி கற்பதுதான் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு உதவும்;ஆனால் சர்க்காரின் உதவி இல்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா.....!"என்கிறார் அம்பேத்கர்.இந்தக் குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும்?நம் மகா கவி பாரதி தரும் பதில் இதுதான்.:"உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள்.அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அதனை ஸ்தாபனம் செய்யுங்கள்.."என்பது பாரதி காட்டும் வழி.உனக்கு நீயே விளக்கு என்றவர் புத்தர்.அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விசயங்களைக் குறிப்பிடுகிறார்.:"ஒன்று,கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று,மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்..."இது போல் இந்தியாவின் கல்வி வரலாற்றில் மாபெரும் மனிதர்களின் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன...........!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment