Tuesday, November 24, 2009
கார்பன் பூட்ப்ரின்ட்-குளோபல் வார்மிங்-சில சிந்தனைகள்......
கடற்கரை மணலில் நடக்கையில் நம் காலடிச் சுவடுகள் பதியும் அழகில் மனம் லயிக்காதவரகள் உண்டா?கடற்கரை மணலில் இப்படிப் பதியும் சுவடுகளும்,சின்னகுழந்தைகள் கட்டும் மணல்வீடுகளும் அழகின் வெளிப்பாடுகள்.இன்று எழுதும் கவிஞர் முதல் பண்டைய இலக்கியவாதிகள் வரை இந்தக் கடற்கரைக் காட்சிகள் பற்றி எழுதத் தவறியது இல்லை.ஆனால் இன்று சுற்றுச் சூழல் பற்றி ஆராய்கிறவர்கள் கார்பன் காலடிச் சுவடுகள் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்கள்."புவி வெப்பம் அடைதல்" என்கிற விஷயம் இன்று மிகவும் பரபரப்பான ஒரு அம்சமாக மாறி இருக்கிறது.மனித இனம் இன்று தன அமைதியான வாழ்க்கையைத் தானே அவலம் மிக்கதாக மாற்றிக் கண்டு வருகிறது.அந்தமாதிரி அவலங்களில் ஒன்றுதான் இந்த கார்பன் வெளியிடும் சாதனங்களும்,அதன் விளைவாகப் பூமி வெப்பம் உயர்ந்து கொண்டே போவதும்.ஒவ்வொரு மனிதரும் வெளி உலகில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வாகனங்களும்,வீடுகள்,கடைகள்,தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்திருக்கும் குளிர்சாதன இயந்திரங்களும் வெளியிடும் கார்பன் வாயுவினால் பூமிப் பரப்பிற்கு மேல் உள்ள ஓசோன் படலம் ஓட்டையாகி அது பெரிதாகிக் கொண்டே போவதும்,இந்த வாயு பூமிக்கு மேல் ஒரு கனத்த போர்வையாகி வெப்பம் குறைய விடாமல் மூடிக் கொண்டு இருப்பதும் பூமி வெப்பம் அடையும் அவலத்திற்குக் காரணங்கள்.இதைக் குறைக்க என்ன செய்யலாம்?முடிந்த வரை கார்பன் வெளியிடும் சாதனங்களின் உபயோகத்தைக் குறைக்கலாம்;கார்பன் வாயுவை உள்ளே ஈர்க்கும் மரங்களை உலகெங்கும் எவ்வளவு அதிகம் வளர்க்க முடியுமோ அவ்வளவு அதிகம் வளர்க்கலாம்.கார்களில் போகாமல் சைக்கிள் அல்லது நடந்து போகலாம்.இல்லை என்றால் என்ன ஆகி விடும்?பூமியின் வெப்பம் உயர உயர துர்வப் பிரதேசப் பனிப் படலங்கள் உருகும்.கடல் மட்டம் உயரும்.பூமியின் வெப்பம் தாங்க முடியாத அளவு உயர்ந்து கொண்டே போவதால் மனித இனமும் பிற உயிரினங்களும் வாழ்வதே பெரும் பிரச்னை ஆகி விடும்.என்ன செய்யப் போகிறாய்?............!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment