Wednesday, October 21, 2009

மாநகர நினைவுகள்...

சென்னை மாநகர நினைவுகள் பற்றி தமிழ்நாட்டின் பல முக்கியமான பிரமுகர்கள் தமது மலரும் நினைவுகள் பலவற்றை ஹிந்து இதழில் எழுதிக் கொண்டு வருகிறார்கள்.இன்று ச.வைதீஸ்வரன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அகில இந்திய வானொலியின் செய்திச் சேவையை மெரீனா கடற்கரையில் லௌட்ச்பீகர்கள் மூலம் கேட்ட அனுபவம் பற்றி, தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகம் பற்றி, ச.வி. சகஸ்ரநாமம் பற்றி கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரம் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.சென்னை அன்று ஏரிகளும் குளங்களும் நிறைந்த நகரமாக இருந்த கதையை சொல்கிறார்.




நகரச் சுவர்கள்,விரல்மீட்டிய  மழை, உதய நிழல் போன்ற தொகுப்புக்கள் இவரின் கவிதை படைப்புக்கள் ஆகும்.வேறு பலரும் இவர் போலவே தங்கள் மனச் சுரங்கத்தில் இருந்து அன்றைய சென்னை பற்றி பதிவுகளை எழுதி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே பெரிய பிரமுகர்கள் மட்டுமே. சாதரணமான மனிதர்களின் மனதில் இந்த நகரம் என்ன விதமாகப் பதிவாகி இருக்கிறது? எப்போதாகிலும் அந்த மாதரியான பதிவுகளை நாம் படிக்கக் கிடைக்குமா?

இந்த நகரம் நான் முதன் முதலில் ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்த இடம்.இங்குதான் அம்பதூரில் ஒருகம்பெனியில்வேலை செய்தேன்.ஆறு மாத காலம் கழித்து வேலூர் சென்று அங்கு பணியில் சேர்ந்தேன். மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்து சேர வேண்டியதாகியது. இப்போது பத்தொன்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இந்த நகரம் என் கதைகளில் பதிவாகி இருக்கிறது.குறிப்பாக 'பிணங்களும் விலை போகும்' கதையில்.என் இலக்கிய வாழ்வின் முக்கியப் பகுதிகள் நிகழ்ந்த இடம் இதுதான். நினைவுகள் அழிவதில்லை அல்லவா?

No comments:

Post a Comment