இன்றைய ஹிந்து இலக்கிய விமர்சன இணைப்பில் மூன்று கட்டுரைகள் வாசிக்கையில் மிகவும் யோசிக்க வைத்தன. சமீபத்தில் உயர்த்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியர் எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று. வெறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்க நேர்ந்த போது அதை நம்ப முடியாத ஒரே அதிசயமாக எதிர் கொண்ட ஒரு இளம் கல்லூரி ஆசிரியர், இருபது வருடங்களில் நாற்பது ஆயிரமும் அதற்கு மேலும் சம்பளம் பெரும் வாய்ப்புக் கிடைத்த போது அதை எதிர் கொள்ளும் விதம் இககட்டுரையில் பதிவாகி இருக்கிறது.
மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று விரும்பி அதற்கு பாடுபடும் போது, மாணவர்களே அதை விரும்பாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார். கல்லூரி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் கூட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்கிறார். கடமை உணர்வும், சேவை செய்யும் மனமும் உடைய ஆசிரியர்கள் இப்படி மனச் சோர்வு அடையும் நிலை இருப்பது யார் கவனத்தில் பட வேண்டுமோ அவர்கள் கவனத்தை ஈர்க்குமா?
No comments:
Post a Comment