இன்றைய ஹிந்து-ல் கவனகர் கனிமொழியின் நேர்காணல் வந்திருக்கிறது. தனது கவி உலகம் பற்றி அவர் சொல்லியிருக்கும் அனுபவப் பதிவுகள் முக்கியமானவை. கவிதை என்பது தன் சுயம் உடனான தொடர்ச்சியான உரையாடல் என்கிறார் கனிமொழி. அது என்னைக் கண்டறியும் ஒரு நிகழ்வு என்பது அவரின் பதிவு.
"எனக்குள் மௌனம், அதைக் காண்பது; அதன் மய்யத்தில் நான் இருப்பது ஒரு அனுபவம். எவ்வளவு அலைச்சல்களுக்கு நடுவிலும் எழுத முடியும். சில் நேரங்களில் உங்களால் அந்தஉலகத்தைக் கண்டு அறிய முடியாமல் போகக் கூடும்".
"சில நேரங்களில் வேறு ஒரு வடிவத்தின் மூலம் அதைக் கண்டறியலாம். அது இசையாக, ஒரு திரைப்படமாக, படிக்கக் கிடைக்கிற ஒரு புத்தகம் இப்படி ஏதேனும் ஒன்றாக அது இருக்கலாம்."
இப்படி கனிமொழியின் கவிதை வாழ்வனுபவம் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு பல கவிஞர்களும் இந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார்கள். உள்ள உணர்வுகள் வெளிப்படும் தருணம் எப்போது எப்படி அமையும் என்று யார் சொல்ல முடியும்?
No comments:
Post a Comment