வாசிக்கிற அனுபவம் ஒரு மனிதனிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி பலரும் சொல்லி இருக்கிறார்கள். நல்ல ஒரு கவிதை, படித்து நீண்ட காலம் ஆகிய பின்னும் நம் மனதைக் குடைந்து கொண்டே இருப்பதை பல நேரங்களில் உணர முடிந்திருக்கிறது. ஒரு நாவல் ஏற்ப்படுத்தும் பாதிப்பு வாழ்நாள் முழுக்க இருப்பதை என் அனுபவமே எனக்குச் சொல்ல்கிறது.
தீவிரம் நிறைந்த ஒரு கட்டுரை நம்மை செயல்படத் தூண்டுகிறது. மஹாஸ்வேதா தேவியின் ஒரு நேர்காணலில் அவர் தன் அனுபவங்களைச் சொல்லிய விதம் இன்று வரை எனக்கு ஒரு புதிய பாதை காட்டும் தீபமாக இருக்கிறது. படிக்கிற அனுபவங்கள் பற்றி படிப்பதே ஒரு சுவையான அனுபவம்தான். படித்த விசயங்களை மற்றவர்களிடம் பகிர்வது மற்றொரு அறிய அனுபவமாக இருக்கிறது.
No comments:
Post a Comment