தமிழ மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பலரையும் பற்றி யோசிக்கையில் இன்று நம் முன் வருகிற சித்திரம் என்ன? புதிய புத்தகம் பேசுது இதழ் சமீபத்தில் வெளியிட்ட தமிழ்ப் பதிப்புலகம் -இரு நூற்றாண்டு கால வரலாற்றுப் பதிவுகள் இந்த வகையில் ஒரு முக்கிய ஆவணம்.
உ.வே.சாமிநாதையர் சி.வை.தாமோதரம் பிள்ளை, மர்ரே.எஸ்.ராஜம், ஆறுமுக நாவலர், கதிரைவேர்ப் பிள்ளை மற்றும் பல முன்னோடிப் பதிப்பாளர்கள் பற்றிய ஆழமான பல கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கம்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம்,உலகத் தமிழ ஆராயிச்சி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்ப் பதிப்புலகிற்கு ஆற்றிய பெரும் பணிகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன.
இவை எல்லாம் நமது முன்னோடிகளின் அபூர்வப் பங்களிப்பு பற்றி அறிய நமக்கு உதவக் கூடிய ஆவணங்கள். இவர்களில் ஒரு சிலர் நன்கறியப் பட்டவர்கள் என்றாலும் மிகப் பலர் பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்த விதமான விவரமும் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தக் கவலை மலரைப் படிக்கும் யாருக்கும் எழும்.வெறும் கவலை அல்லது ஆதங்கம் இந்த நிலைமையில் மாற்றம் எதயும் கொண்டு வராது. இன்றுள்ள சூழலில் நாம் என்ன செய்ய முடியும் என்பதே நம் முன்னுள்ள கேள்வி.
No comments:
Post a Comment