இன்றைய ஹிந்து படிக்கையில் ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் மழை வெள்ளம் வந்து அதனால் அங்கு மக்கள் படும் துரம் பற்றி செய்திகள், படங்கள் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த நிலை ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும் ஒரு சரியான தீர்வு இதுவரை காணப்படவில்லை.
வானில் பறந்து வெள்ளப் பாதிப்புக்களை பார்வையிடும் பிரமுகர்கள் பற்றியும் ஒவ்வொரு முறையும் அதே பத்திரிக்கைகளில் செய்திகளும், படங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தனது சின்னஞ்சிறு குடிசை மழை நீரில் மூழ்கி விட்ட சோகம் நெஞ்சைத் தாக்கி உலுக்க கண்ணீர் வடிக்கும் ஏழைப்பெண் ஒருத்தியின் படம் நம் மனதில் இடி போல இறங்குவதை உணர்கிறோம். என்னதான் தீர்வு?
No comments:
Post a Comment