Monday, March 12, 2012

sudaamani raagavanum raamakrishna madamum...

சூடாமணி ராகவனும் ராமகிருஷ்ண மடமும்..என்ற இந்தப் பதிவு மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி பற்றியது.தமிழின் ஆகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூடாமணி,தனது மறைவிற்குப் பின்தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவரின் பங்கு மார்கெட் வருமானம் சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,ராமகிருஷ்ண மட    தர்ம ஆஸ்பத்திரி,  வாலண்டரி ஹெழ்த் செர்விசெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.இது இப்போதைய நன்கொடை.ஏற்கெனவே ஒரு நாலரை கோடி சூடாமணியின் வீட்டை விற்று வந்த பணத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் பெற்றுள்ளன.அவரின் எழுத்துகளில் மனம் பரி கொடுத்தவர்கள் பலருள் நானும் ஒருவன்.ஒரே ஒரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டவர்களுக்காக அவருடைய சிறுகதை ஒன்றை சிறு நூலாக்க அனுமதி கேடு அவருடன் பேசினேன்."என்னோட கதைல அப்படி எதுவும் இதுக்குப் பொருத்தமா இருக்கிற மாதிரித் தெரியலை.ஆனா,உங்களுக்கு அப்படி எதானு கிடைச்சு பயன்ப ட்டா  ரொம்ப சந்தோசம்.அவ்வளவுதானே?"இதுதான் அவரின் பதில்.அவரின் நாவல்"இரவுச் சுடர்",நாடகம் "இருவர் கண்டனர்"இன்னும் நூற்றுக் கணக்கான அவரின் மணி மணியான சிறு கதைகள் எல்லாம் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்புகள் என்றால் நாம் மேலே கண்ட அவரின் நன்கொடைகள் இந்த சமூகம் கொண்டாட வேண்டிய பங்களிப்புகள்.எதனை நாம் பெரிதாகக் கருதுவது?பத்தி காண்பது சிரமம்தான்!