Monday, December 24, 2012

பயணங்கள் தொடரும்

இந்த ஆண்டின் நிறைவுப் பகுதியில் நாம் இருக்கிறோம். மனநிறைவு அளிக்கும் சூழலில் இருக்கிறோமா இந்தக் கேள்வி மனதில் பெரும் பாரமாய்ச் சுமை கூடுகிறது.நமது நாட்டின் தலை நகரில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்  ஒரு மனிதன் எப்படி மனநிறைவு கொள்ள முடியும்? இங்கு அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா? ஆம் என்றால் நமது குழந்தைகளின் எதிர்காலம் இங்கு பாதுகாப்புடன் இருக்குமா?மிகுந்த அவநம்பிக்கையோடும் கவலையோடும் யோசிக்கிறேன்.தலைநகர வீதிகளில்  இளம் மாணவர்களும் பணியாளர்களும் பல்லாயிரம் பேர் காவல் துறையினரால் மிருகத் தனமாகத் தாக்கப் பட்டுக் கொண்டுள்ளனர்.எப்போதும் போல சமூக விரோதிகள் இந்த நிகழ்வுகளில் தங்களின் கைவரிசைகளைக் காட்டி விட்டனர். இதுதான் சாக்கு என்று காவல்துறை தன வலிமை முழுவதையும் திரட்டி மக்களின் மீது பாய்ந்திருக்கிறது.யாருடைய குரலுக்கும்,ஆட்சேபனைகளுக்கும் அந்த இயந்திரம் ஒரு போதும் மதிப்பு அளித்ததே இல்லை.எனவே வீதிகள் போர்க்களம் போலாகி விட்டன.இந்த அளவுக்கு இதற்கு முன் போலிசை இப்படி மக்கள் இவ்வளவு பெரும் அளவில் எதிர்கொண்டிருப்பார்களா?சந்தேகம்தான்.இனி என்ன நடக்கும்?ஒரு விசாரணைக் குழு போடப்பட்டு விட்டது.பிரதமர் உறுதி அளித்து விட்டார்.ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட கொடும் செயலுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்குமாம்.மணிப்பூர் மக்களின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாகப் போராடும் இரோம் ஷர்மிளா கேட்டால் சிரிப்பார்.வேதனையுடந்தானே ஊடகங்களும் இன்று இதில் காட்டுகிற வேகத்தை விளிம்புநிலை மக்களின்பால் காட்டியதுண்டா?கேள்விகள்..கேள்விகள்...பதில்தான் கிடைப்பதே இல்லை...............

Sunday, December 16, 2012

எழுதுகிறவர்களின் கனவுகள்

உதய சங்கரின் கட்டுரை ஒன்றை நற்றிணையில் நேற்றுப் படித்தேன்.இன்று தமிழில் எழுதுகிறவர்களில் மிக முக்கியமான ஒரு படைப்பாளி.குறுநாவல்,சிறுகதை,கவிதை,குழந்தை இலக்கியம்,கட்டுரை,பிற மொழிப் படைப்புகளைத் தமிழில் ஆக்கித் தருவது ,கட்டுரைகள் எழுதுவது என்று அனேகமாக எல்லா வகையான வடிவங்களிலும் அவர் தன படைப்புகளைத் தந்திருக்கிறார்.அத்தகைய எழுத்தாளர் நற்றிணையில் எழுதிய கட்டுரை ஒரு வகையில் மிகச் சிறப்பான ஒரு மன நிலையைச் சொல்லுகிறது.இன்னொரு வகையில் இன்று தமிழில் எழுதுகிறவர்கள் படும் மன அவசங்களைச் சித்தரிக்கிறது.எழுதாமல் இருக்க முடியாது;ஆகவே எழுதுகிறேன்;இது ஒரு குரல்.பணமும்,புகழும் கிடைக்கிறது.ஆகவே எழுதுகிறேன் என்று பலரின் குரல்கள்.சமூகம்ஏதேனும் ஒரு வகையில் பயன் பெறுவதற்காக எழுதுகிறேன் என்று மிகச்சில குரல்கள்.யாருடைய எழுத்தினாலும் எந்தக் காலத்திலும் சமூகம் ஒன்றும் பெரிதாக புரண்டு விடவில்லை,விடவும் விடாது என்று விடாமல் சொல்லுகிற பலர்.இவர்களுக்கு நடுவே ஒரு தனிக்குரல் உதய சங்கருடையது.அவரின் "யாவர் வீட்டிலும்"சிறுகதைத் தொகுப்பு இன்று எடுத்து வாசித்தாலும் மனதை உலுக்கும் கதைகளின் தொகுப்பு என்பேன்.டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் என்ற ஒரு கதை போதுமே.எழுபதுகளில் வேலூரில் நான் இருந்த காலத்தில் வாசித்துப் பரவசம் அடைந்த எழுத்து உதயசங்கருடையது.அவரின் சமீப கால எழுத்துகளில் நவீன எழுத்து முறையிலான கதைகளைக் காண முடியும்.                      இங்கு அவரின் நற்றிணை கட்டுரை குறித்து............"என்றாலும் நான் எழுதுகிறேன்..ஆகவே நான் இருக்கிறேன் "என்பது தலைப்பு.ஒருவர் எழுத்தாளர் ஆவது எப்படி நிகழ்கிறது என்று யாராவது துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா என்று ஆரம்பிக்கிற கட்டுரை இன்று எழுதுகிறவனின் கனவுகளும் அவை பெரும்பாலும்  கானல் நீராகவே போய்விடுகிற கொடுமைகளும் பற்றி உரையாடுகிறது.இலக்கிய உலகம் இன்று என்னஎன்ன வேசங்கள் கட்டி ஆடிக் கொண்டிருக்கிறதோ அந்த வேசங்கள் அனைத்தையும் பற்றி அவர் எல்லா எழுத்தாளர்களின் மனதிலும் இருக்கிற வேதனைகளை பதிவு செய்திருக்கிறார்.வெறும் வாய்ப்பேச்சில் காற்றில் கரைந்து போய்க் கொண்டிருந்த புலம்பல்கள் இவை.இவையும் பதிவாகத்தானே வேண்டும்.அவர் துணிந்து பதிவு செய்து விட்டார்,நாம் வாசித்து ஆமாம்,நியாயமாகத் தானே எழுதி இருக்கிறார் என்று அங்கீகரிக்கலாம். 

Friday, October 26, 2012

indrum iniyum

இன்றும் இனியும்
இந்த ஆண்டு முழுவதிலுமே நான்கு இடுகைகள்தான் இந்த பகுதியில் பதிவு செய்ய முடிந்தது.மனதில் ஓடுகிற எண்ணங்கள் எவ்வளவோ அவை எல்லாம் பதிவு செய்யப்பட முடிகிறதா என்ன?இன்று இலக்கிய உலகம் இருக்கிற இருப்பில் பல விதமான படைப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிற நிலை.வாசிப்பின் சாத்தியங்கள் எத்தனையோ அவை அத்தனையும் இந்தப் படைப்புகளில் காணக் கிடைக்கின்றன.சமீப நாட்களில் கல்வி குறித்து மிக அதிகம் படிக்கவும் சிந்திக்கவுமான ஒரு சூழல் நிலவுகிறது.கல்விச் சிந்தனைகள் அடங்கிய நூல்கள் சுமார் முப்பது வரை வாசித்து அவை பற்றி ஒரு கையேடு  தயார் செய்து இருந்தேன்.பாரதி,தாகூர்,அம்பேத்கர்,லெனின்,பாவ்லோ ப்ரையிரே,இன்னும் பல உலக அளவிலான மற்றும் நம் நாட்டு   சிந்தனையாளர்கள் பலரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு அது.நமது காலம் சிக்கல்கள் நிறைந்த ஒன்று.எந்த வழியில் செல்வது என்ற தெளிவு இல்லாத ஒரு சமூகம் நம்முடையது.இன்று நாம் நிற்கிற சந்திப்பு ஒரு முட்டுச் சந்து போல நம்மை மிரட்டுகிறது.இன்று நிற்கும் இந்தத் திசையில்  இருந்து  இருந்து எந்தப்பக்கம் போகப் போகிறோம் என்பது தெளிவாக இல்லை.என்றாலும் நமக்கு நிற்க முடியாத நிலை.நடந்து தீர்ப்பதே நம் கடமை.இன்றும்,இனியும்......... 

Monday, March 12, 2012

sudaamani raagavanum raamakrishna madamum...

சூடாமணி ராகவனும் ராமகிருஷ்ண மடமும்..என்ற இந்தப் பதிவு மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி பற்றியது.தமிழின் ஆகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூடாமணி,தனது மறைவிற்குப் பின்தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவரின் பங்கு மார்கெட் வருமானம் சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,ராமகிருஷ்ண மட    தர்ம ஆஸ்பத்திரி,  வாலண்டரி ஹெழ்த் செர்விசெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.இது இப்போதைய நன்கொடை.ஏற்கெனவே ஒரு நாலரை கோடி சூடாமணியின் வீட்டை விற்று வந்த பணத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் பெற்றுள்ளன.அவரின் எழுத்துகளில் மனம் பரி கொடுத்தவர்கள் பலருள் நானும் ஒருவன்.ஒரே ஒரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டவர்களுக்காக அவருடைய சிறுகதை ஒன்றை சிறு நூலாக்க அனுமதி கேடு அவருடன் பேசினேன்."என்னோட கதைல அப்படி எதுவும் இதுக்குப் பொருத்தமா இருக்கிற மாதிரித் தெரியலை.ஆனா,உங்களுக்கு அப்படி எதானு கிடைச்சு பயன்ப ட்டா  ரொம்ப சந்தோசம்.அவ்வளவுதானே?"இதுதான் அவரின் பதில்.அவரின் நாவல்"இரவுச் சுடர்",நாடகம் "இருவர் கண்டனர்"இன்னும் நூற்றுக் கணக்கான அவரின் மணி மணியான சிறு கதைகள் எல்லாம் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்புகள் என்றால் நாம் மேலே கண்ட அவரின் நன்கொடைகள் இந்த சமூகம் கொண்டாட வேண்டிய பங்களிப்புகள்.எதனை நாம் பெரிதாகக் கருதுவது?பத்தி காண்பது சிரமம்தான்!

Wednesday, February 29, 2012

kalvichchinthanaikal

கல்வி என்ற ஒரு மருந்துதான் சமூகத்தின் பல அவலங்களுக்கும் நிவாரணி என்று உலகெங்கும் பல சிந்தனையாளர்கள் பல காலமாய் எழுதியும்,பேசியும் வந்திருகிறார்கள்.இந்திய நாட்டில் விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெற்றுவிட வேண்டும் என்ற கனவுடன் உழைத்தவர்கள் ஏராளம்.அவர்களில் குறிப்பாக கிறித்துவ இறைப் பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிகள் பெரும்பாலும்  ஒடுக்குமுறை இயந்திரத்தின் பகுதியாகவே இருந்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் இந்த நாட்டு மக்களின்பால் அன்பும் அக்கறையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.சென்னையில் கர்னல் ஆள்காட் அவர்களில் ஒருவர். பஞ்சமர் இலவசப் பள்ளிகள் துவங்கி அவர் செய்த அரும்பணி பற்றிப் படிக்கும் போதுதான் தெரிகிறது இந்த மண்ணில் அவர் போன்றவர்கள் செய்த அளவுக்குக் கூட நம் நாட்டுத் தலைவர்கள் பலர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்ற உண்மை."பறையர் வரலாறு" என்ற தனது நூலில் ஆள்காட் சொல்கிறார்:  "நிரந்தரமான நன்மைகளைத் தருமென்று நம்பியவைகளை மட்டுமே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.  எந்த வகையான கட்டணமும் இல்லாமல் அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைத் திறந்தேன்......சமையல் செய்வது,கிழிந்த ஆடைகளைத் தைப்பது,உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது,குடும்பக் கணக்கினை எழுதுவது போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.அவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும்நல்ல ஊதியம் தருவதுமான வேலையைப் பெற்று அவற்றில் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இப் பயிற்சியை  அவர்களுக்கு அளித்தேன்"    என்கிறார் கர்னல்.இந்தப் பார்வை நம்மில் எதனை பேருக்கு இருந்தது?இருக்கிறது?

Thursday, February 23, 2012

indrum innoru naalum....

இந்தப் பகுதியில் இடுகை என்று பதிவு செய்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நமது மனப் பரப்பில் எண்ணற்ற சிந்தனைகள் இடம் பெற்று விடுகின்றன.அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்கிறோம் எல்லாவற்றையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.சிலருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடிவதும் இல்லை.எழுத்து என்ற ஊடகம் நமக்குக் கை கொடுக்கிறது.இசை,ஓவியம்,நாடகம்,சினிமா,சின்னத் திரை என்று எத்தனையோ ஊடகங்களின்று. அசோகமித்திரன் எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு "வாழ்விலே ஒரு முறை"என்பது.பிறகு சில காலம் கழித்து "இன்னும் சில நாட்கள்' என்ற அடுத்த தொகுப்பு வந்தது.இன்றுடன் அல்லது வாழ்வில் ஒரு முறை என்று நினைக்கிறோம்.ஆனால் இன்னும் சில நாட்கள் இருக்கவே செய்கின்றன.நேற்று முடிந்து போய் விட்டது;இன்று முடியப் போகிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாளை வரத்தான் போகிறது என்பது.எனது எழுத்துப் பணிகளில் சில சமயம் சோர்வு ஏற்படும் வேளைகளில் இந்த "வாழ்விலே ஒரு முறை"யும் "இன்னும் சில நாட்கள்" தலைப்புமே நினைவுக்கு வரும்.மீண்டும் எழுதுவேன்.வாழ்க்கை என்னும் மகா நதியில் மிதந்து கொண்டிருக்கிற சிறு படகு நான்.எழுதும் வாசிப்பும் எனது இரு கண்கள் எனலாம்.இவை இல்லாதிருந்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்?நினைக்கவே துயரம் தரும் கேள்வி இது.சற்று முன் வாசித்த தோழர் தொழார் கவின்மலரின் பதிவு ஒன்று மறைந்த தோழர்   உ.ரா.வரதராஜன் அவர்கள் பற்றிய ஒரு கண்ணீர்ததும்பும் பதிவு மௌனமாக் நம்மை அழச் செய்கிறது.போரூர்ஏரியைக்  கடக்கும் போதெல்லாம் அவரின் துயர நினைவு வந்து நெஞ்சைக் கனமாக்கி  விடும்.இன்றைய அரசியல் வானில் இப்படி பல துயர நிகழ்வுகள்.அவற்றின் பின்னால் எந்த விதமான "தத்துவ"சண்டைகள் நிகழ்ந்தனவோ?ஆனால் இவற்றின் பின்னுள்ள அவல நிலை நம்மைத் திகைக்கச செய்கிறது.எனினும் நாம் நின்று விட முடிவதில்லை."இருள் என்னும் விருந்தாளி இரவு வரைக்கும் தான்;எவர் தடுத்து இதுவரை விடியல் நின்றிருக்கிறது?"என்று உருதுக் கவிஞர் சாகிர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது இன்னொரு நாள் இதோ நாளை வருகிறது.....நடக்கிறோம்,நடப்போம்.

Friday, January 6, 2012

இந்தப் புதிய ஆண்டில் என்ன செய்யப் போகிறோம்?

 அதாவது இப்போது  புதிய ஆண்டு ஒன்று பிறந்து ஆறு நாட்கள் ஓடி விட்டன.கடந்த ஆண்டின் பல நிகழ்வுகள் கசப்பானவை.சில நல்ல விசயங்களும் நடந்திருக்கலாம்.நம் மனப்பரப்பில் அவை நிலை கொண்டு நம்மை தொந்திரவு செய்து கொண்டே இருப்பவையாக ஆகியிருக்கும்.இதோ இன்னொரு புதிய ஆண்டு ஒன்று பிறந்துவிட்டது.வரும்போதே தானே புயலுடன் வந்த ஆண்டு.மனித வாழ்க்கையில் பல தருணங்கள் இப்படி ஒன்று கிடக்க இன்னொன்றாய் ஆகி விடுகின்றன.ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு விட்டது மிகவும் வருந்த வேண்டிய விசயம்தான்.சக மருத்துவரின் கொலைக்காக வெகுண்டு எழுந்த தனியார் மருத்துவ நிலையங்களின் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்து தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்து இருக்கிறார்கள்.ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் கல்கத்தா தனியார் மருத்துவ மனை ஒன்றில் தீப் பிடித்துநூற்றுக் கணக்கில் இறந்து போன சமயம் இந்த மருத்துவர்கள் எங்கே போயிருந்தார்கள்?ஒரு அனுதாபக் குரலைக் கூடஇவர்கள் அப்போது எழுப்பியதாகத் தெரியவில்லையே?இறந்து போன டாக்டர் ஒரு அரசு மருத்துவர்.அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கில் இரண்டு உயிர்கள் பலியாக அவரின் தவறான மருத்துவமே காரணம் என்ற ஒரு கோபத்தில் பாதிக்கப் பட்ட நபர் செய்த செயல் இது என்று சொல்லப் படுவது பற்றி அவர்கள்