Sunday, November 29, 2009

sol ondru vendum...........!

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்பார் பாரதி.சொல்லாட்சி என்பதன் உச்சத்தை பாரதியிடம் பல வரிகளில் காண முடியும்."கால நடையினிலே நின்றன் காதல் தெரியுதடீ' என்பது ஒரு உதாரணம்.காதலியின் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போது காலம் மெல்ல நகரும் உணர்வு இருக்கும்.அந்த நகர்வை நடை என்று உருவகப் படுத்துகிறார் பாரதி.சொற்களின் வலிமை இலட்சியவாதிகளின் பேச்சுக்களில் ஸ்தூலமாக வெளிப்படுவதைக் காண முடியும்.புகழ் பெற்ற சில பேச்சுக்களில் இந்த வலிமை நம் கண்ணெதிரே  பொருந்தித் தெரிவதைக் காணலாம்."செயல்,அதுவே சிறந்த சொல்" என்கிறார் ஹோசே மார்த்தி.சொல்வதில் இன்பம் காண்கிற பலர் செயல் என்று வரும் போது பதுங்கிக் கொள்வதைக் காண்கிறோம்.                                       சொற்களை பூக்களைத் தொ டுப்பது போலத் தொடுத்து படிப்பவர் நெஞ்சில் நீண்ட காலம் வரை நிலைத்து இருக்கும் படிச் சொன்னவர் தீபம் நா.பா.அவரது ஆழ்ந்த தமிழ்மொழிப் புலமை அதற்கு நல்ல சாதனமாக அமைந்தது.அவரளவுக்கு மென்மையான முறையில் மொழியைக் கையாண்டவர்கள் தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைவு.குறிப்பாக அவரின் 'மணிபல்லவம்","குறிஞ்சி மலர்""தூங்கும் நினைவுகள்","பொன் விளங்கு""ஆத்மாவின் ராகங்கள்","மலைச் சிகரம்", போன்ற நாவல்களிலும் நவநீத கவி என்ற அவரின் கவிஞர் பாத்திரம் ஒன்று எழுதியதாக நா. பா. எழுதிய சில கவிதை வரிகளிலும் இந்தச் சொல்லின்பதைக் காண முடியும்.ஒரு உதாரணம்: அவரின் பொன்விலங்கு நாவலில் நவநீத கவியின் கவிதை வரிகள்............"எண்ணத் தறியில் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய்,முற்றும் கற்பனையா....."என்று வரும் பகுதி.அவரின் எல்லாப் படைப்புகளிலும் கவித்துவமும்,சொல்லாட்சியும் இனிமை நிறைந்த ஒரு இசைக்காவியம் போல் நம் நெஞ்சில் பதியும் வல்லமை padaiத்தவை. வாசிக்க வாசிக்க மனப் பரப்பில் அமுதமழை போல் ப்ய்யக்கூடியவை...!

Friday, November 27, 2009

intha mannin vaasanai.....................!

இந்த மண்ணின் வாசனை, இதற்கு ஏது ஈடு இணை? என்றொரு பாடல் உண்டு.நாம் வாழ்கிற மண் குறித்த பெருமிதம் இந்தப் பாடலின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.தமிழ் மண்ணில் பிறந்த யாரும் இந்தப் பெருமிதத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க இயலாது.யாதும்   ஊரே யாவரும் கேளிர்என்று ஒலித்த குரல் நம் தமிழ்க் கவிஞர் ஒருவருடையது.நாடாய் இருந்தால் என்ன,காடாய் இருந்தால் என்ன,எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்கள் ஆக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் என்று மண்ணைப் போற்றிப் பாடுகிறார்  ஔவையார். இன்று நாம் வாழும் வாழ்க்கையில் இந்தப் பெருமிதத்திற்கு இடம் இருக்கிறதா?                                                                                                                                                              அரசியலின் பண்புகளும் சாதீயத்தின் கூறுகளும் இன்று இப்படிப் பெருமிதங்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டன.மானுட மேன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு இயங்க வேண்டிய எழுத்தாளர்கள் கூட இன்று சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கிய உலகில் உழன்று கொண்டிருக்கும் எனக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தான் இப்படி சாதி அட்டை மாட்டிக் கொண்டுதிரியும் எழுத்தாளர்களை இனம் காண முடிகிறது.இதனை ஆண்டுகள் நாம் எழதியும்,படித்தும் தெரிந்து கொண்டது உண்மையில் என்ன என்ற கேள்வி குடைகிறது மனதில்.நந்தனின் கதையும்,கீழ வெண்மணியும்,திண்ணியமும்,உத்தப்புரமும் இன்று நம் சமூகத்தின்   மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.எங்கே வேர், எங்கே நீர் என்று தெரியாமல் இந்த அசுர  விருக்ஷம் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மண்ணில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.தந்தை பெரியாரும்,மணியம்மையும்,மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரும் இன்னும் எவ்வளவோ பெரியவர்களும் போராடிய இந்த மண்ணில் இன்று சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நண்பர்களின் வெளிப்பாடுகள் நாம் பெருமிதப் படும் வகையில் இல்லை.என்ன செய்யலாம்? 

Tuesday, November 24, 2009

கார்பன் பூட்ப்ரின்ட்-குளோபல் வார்மிங்-சில சிந்தனைகள்......

கடற்கரை மணலில் நடக்கையில் நம் காலடிச் சுவடுகள் பதியும் அழகில் மனம் லயிக்காதவரகள் உண்டா?கடற்கரை  மணலில் இப்படிப் பதியும் சுவடுகளும்,சின்னகுழந்தைகள் கட்டும் மணல்வீடுகளும் அழகின் வெளிப்பாடுகள்.இன்று எழுதும் கவிஞர் முதல் பண்டைய இலக்கியவாதிகள் வரை இந்தக் கடற்கரைக் காட்சிகள் பற்றி எழுதத் தவறியது இல்லை.ஆனால் இன்று சுற்றுச் சூழல் பற்றி ஆராய்கிறவர்கள் கார்பன் காலடிச் சுவடுகள் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்கள்."புவி  வெப்பம் அடைதல்" என்கிற விஷயம் இன்று மிகவும் பரபரப்பான ஒரு அம்சமாக மாறி இருக்கிறது.மனித இனம் இன்று தன அமைதியான வாழ்க்கையைத் தானே அவலம் மிக்கதாக மாற்றிக் கண்டு வருகிறது.அந்தமாதிரி அவலங்களில் ஒன்றுதான் இந்த கார்பன் வெளியிடும்  சாதனங்களும்,அதன் விளைவாகப் பூமி வெப்பம் உயர்ந்து கொண்டே போவதும்.ஒவ்வொரு மனிதரும் வெளி உலகில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வாகனங்களும்,வீடுகள்,கடைகள்,தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்திருக்கும் குளிர்சாதன இயந்திரங்களும் வெளியிடும் கார்பன் வாயுவினால்  பூமிப் பரப்பிற்கு மேல் உள்ள ஓசோன் படலம் ஓட்டையாகி அது பெரிதாகிக் கொண்டே போவதும்,இந்த வாயு பூமிக்கு மேல் ஒரு கனத்த போர்வையாகி வெப்பம் குறைய விடாமல் மூடிக் கொண்டு இருப்பதும் பூமி வெப்பம் அடையும் அவலத்திற்குக் காரணங்கள்.இதைக் குறைக்க என்ன செய்யலாம்?முடிந்த வரை கார்பன் வெளியிடும் சாதனங்களின் உபயோகத்தைக் குறைக்கலாம்;கார்பன் வாயுவை உள்ளே ஈர்க்கும் மரங்களை உலகெங்கும் எவ்வளவு அதிகம் வளர்க்க முடியுமோ அவ்வளவு அதிகம் வளர்க்கலாம்.கார்களில்     போகாமல் சைக்கிள் அல்லது நடந்து போகலாம்.இல்லை என்றால் என்ன ஆகி விடும்?பூமியின் வெப்பம் உயர உயர துர்வப் பிரதேசப் பனிப் படலங்கள் உருகும்.கடல் மட்டம் உயரும்.பூமியின் வெப்பம் தாங்க முடியாத அளவு உயர்ந்து கொண்டே போவதால் மனித இனமும் பிற உயிரினங்களும் வாழ்வதே பெரும் பிரச்னை ஆகி விடும்.என்ன செய்யப் போகிறாய்?............!

Sunday, November 22, 2009

iruttu enakkup pidikkum............!

இருட்டு என்றாலே எனக்குப் பயமாயிருக்கும் என்று நம்மில் பலர் பல சமயங்களில் சொல்வதுண்டு.இருள் என்பதை நாம் பயப்படும்படியான் விசயங்களுடனே சேர்த்துப் புரிந்து வைத்திருப்பதின் விளைவு இது.சிறு வயதில்  இருந்து நம் வீட்டுப் பெரியவர்களும் இருட்டிய பின் எங்கேயும் தனியாகப் போகக் கூடாது என்று நம்மை பயமுறுத்திக் கொண்டேதான் இருந்திருப்பார்கள்.நாம் கேள்விப்படும் பேய்க்கதைகளும்,கொலை , கொள்ளை போன்ற செய்திகளும் நமது பயத்தை இன்னும் அதிகப்பட்துகின்றன.ஆனால் இருட்டு என்பது நாம் விரும்பக் கூடிய ஒன்று என்று யாராவது சொன்னால் நீங்கள் அதை ஒப்புக் கொள்வீர்களா?இருளின் இனிமைகள் பற்றி யாரேனும் எழுதினாலோ பேசினாலோ அது சற்று வியப்புக்குரிய ஒன்றுதானே?தமிழின் நவீனஎழுத்தாளர்களில்சிறந்த ஒருவரும், ,"பூ' படத்தின் திரைக்கதைக்காக இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்றவருமான ச.தமிழ்ச்செல்வன் "இருட்டு எனக்குப் பிடிக்கும்"என்ற தலைப்பிலே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்."இருள் என்பது குறைந்த velicham "என்று பாரதியின் ஒரு வரி சொல்லும்.ஜெயா மாதவன் என்கிற கவிஞர்,குழந்தை இலக்கிய படைப்பாளி எழுதி இருக்கும் கட்டுரை ஒன்றில் தான் இரவுகளை விரும்புவதாக எழுதி இருக்கிறார்.அவரின் வார்த்தைகளில் சொல்லும் இந்த உணர்வுகளைப் பாருங்கள்:"இருட்டியதும் பறவைகள் தம் கூடுகளில் அடைந்து விடுகின்றன.மாடு,கன்றுகள் வீடு திரும்பி விடுகின்றன.இரவு வானில் நிலவு மெல்ல எட்டிப் பார்க்கும்.அதனுடன் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் நம் மனதில்  இனம் புரியாத பரவசத்தை நிரப்பி விடுகின்றன. இரவின் ஓசைகள் நம் புலங்களில் ஒரு கூர்மையைக் கொண்டு வந்து விடுகின்றன.பகலில் நாம் தேவையோ தேவை இல்லாதவையோ ஏதானும் வேலைகளைச் செய்து கொண்டேதான் இருப்போம்.நமது உலகில் வெளிச்சத்தின் இயல்பு அது.அது நம்மை இயங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்.நம் வாழ்க்கைத்  தேவைகளுக்காக இந்த  மாதிரி  இயக்கம்  தேவையை  இருந்தாலும்  இரவின்  தனிமையில்  நாம்  வேறொரு  உலகில்  சஞ்சாரம்  செய்கிறோம் ........" இன்னும்  இப்படி  நிறைய  எழுதுகிறார்  அவர். ."இன்ப  இரவு " என்பது  பாரதிதாசன்  எழுதிய    கவிதை  naadakam.ippadiyaaka pala perum padaippaalikal iravai virumbum azakaip paarunkal.enakkum kooda iruttu pidikkum.unkalukku?                  

Saturday, November 21, 2009

annal ambethkarum kalviyum..........!

இந்தியா விடுதலை பெற்ற பின் அதன் அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பியான அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்த ஒருவர்.தன ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன் மொழிகிறார்.அவை:  "பொதுக் கல்வித் துறையிலும், சட்டக் கல்வித்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அறிவியல்,பொறியியல் துறைகளில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.வெளிநாடுகளின் பல்கலைககழகங்களில் உயர் தரக்கல்வி கற்பதென்பது எட்டாக் கனியாக உள்ளது.அறிவியலிலும்,தொழில் நுட்பத்திலும் உயர் தரக்கல்வி கற்பதுதான் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு உதவும்;ஆனால் சர்க்காரின் உதவி இல்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா.....!"என்கிறார் அம்பேத்கர்.இந்தக் குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும்?நம் மகா கவி பாரதி தரும் பதில் இதுதான்.:"உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள்.அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அதனை ஸ்தாபனம் செய்யுங்கள்.."என்பது பாரதி காட்டும் வழி.உனக்கு நீயே விளக்கு என்றவர் புத்தர்.அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விசயங்களைக் குறிப்பிடுகிறார்.:"ஒன்று,கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று,மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்..."இது போல் இந்தியாவின் கல்வி வரலாற்றில் மாபெரும் மனிதர்களின் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன...........!

Friday, November 20, 2009

valaippoovum vaasakarkalum....................!

வலைப்பூ என்பது இன்று ஒரு சக்தி மிக்க வெளிப்பாட்டு ஊடகம் ஆகி இருக்கிறது.இதில் இடுகைகள் பதிவு செய்யும் நண்பர்கள் தம் மனதில் தோன்றும் எண்ணங்களை வண்ணங்கள் நிறைந்த வானவில் போலத் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஊடகத்தையும் எழுத்துலகத்தையும் ஒப்பிட்டு பதிவர் ஆதிமூல கிருஷ்ணன் எழுதியிருக்கும் இடுகை சுவையான் சில உண்மைகளை நம் முன் வைக்கிறது.ஒரு இடுகையை பலரும் விரும்பிப் படிக்க வைக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று அவர்சொல்லும்  டிப்ஸ் பயனுள்ள ஒன்று.அவரின் நீண்ட அனுபவம் இதில் தெரிகிறது.ஆனால் அச்சு ஊடகத்தில் எழுதும் எழுத்தாளர்கள் தம் எண்ணங்களுக்கு எதிர்வினைகளை உடனே பெற முடிகிறது என்று அவர் கூறுவது விவாதத்திற்குரிய ஒரு கருத்து.என் முப்பத்தைந்து ஆண்டு கால அனுபவத்தில் அச்சில் வரும் நமது படைப்புகள் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கடைசி வரை தெரியாமலே போகிற நிலைதான் பெரும்பாலும்.இன்றைய சூழலில் திரையுலகம் சார்ந்து  இயங்கும் எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் பாபுலாரிட்டியின் விளைவாக அவர்களின் படைப்புகள் உடனுக்குடன் நூல் வடிவம் பெறவும்,அவை உடனே வாசகர்கள் கைகளில் சென்று சேரவும்,அவர்கள் அந்தப் படைப்புகள் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் வாயிப்பு இருக்கலாம்.ஒரு காலம் இருந்தது.அப்போது அகிலன்,கல்கி,தீபம்.நா.பார்த்தசாரதி,சாண்டில்யன்....இப்படிப் பல எழுத்தாளர்கள் மிகப் பிரபலங்கள் ஆக தமிழ்ச் சூழலில் இருந்தார்கள்.எழுதுபவர்கள் மிகக் குறைவு;வாசகர்கள் அதிகம். இப்போது போல தொலைக்காட்சியோ,இண்டர்நேட்டோ இல்லாத காலம் அது.எனவே மேற்கண்ட எழுத்தாளர்கள் எழுத்து படைப்புகளில் மனம் பறிகொடுத்து நாங்கள் எல்லாம் பைத்தியங்கள் போலத் திரிந்தோம்.தமிழ்வாணன் எழதிய  சங்கர்லால் துப்பறியும் கதைகளை வரும் சங்கர்லாளையும்,இந்திராவையும்,கத்தரிக்காயையும் உண்மையான மனிதர்கள் ஆகவே   நினைத்துக் கொண்டு கடிதம் எழுதுவோம்.தமிழ்வாணன் தானேதுப்பறியும் நிபுணராக வரும் கதைகள் படித்த பின் அவர் போலவே கற்பனையில் திரிந்து வந்திருந்த காலங்கள் நினைவிலாடுகின்றன.நா.பா.வின் குறிஞ்சி  மலரும்,பிறந்த மண்ணும், poன்விலங்கும் இன்னும் பல நாவல்களும் படித்த பின் அவரின் கதாநாயகர்கள் அரவிந்தன்,சத்யமூர்த்தி,நவீனன்,போலவும் பெண்களில் பூரணியையும்,மோகினியையும்,சுரமஞ்சரியையும் போலவும் வாசகர்கள் கற்பனை செய்து கொள்வது மிக சாதாரணம்.இன்று எழுதும் யாருக்கும் அப்படி ஒரு வாசகப் பரப்பு இல்லை.வலைப் பதிவுகள் இன்று வீட்டில் இருந்து கொண்டே யாருடைய தயவும் இன்றி அவரவர் எண்ணங்களை உடனுக்குடன் உலகம் எங்கும் சென்று சேரும் வகையில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யக் கூடிய ஒருஅற்புதமாக இருக்கின்றன.ஆயிரமாயிரம் வலைப் பூக்கள் மலரட்டும்............!

Thursday, November 19, 2009

kalviyin karaikalil......................!

நேற்று என் இடுகையில் கவிஞர் யுகபாரதியும் நானும் உரையாடிய ஒரு அனுபவம் ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். படிக்காத மனிதர்களுக்கு கல்வி போய்ச் சேர வேண்டும் என்று பாடுபடும் பலர் ஒன்றும் பெரும் அதிகாரம் படைத்தவர்கள் ஆகவோ,பெரும் செல்வந்தர்கள் ஆகவோ இருப்பவர்கள் அல்ல என்ற உண்மையை அவர் சொன்ன ஒரு நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.இந்தக் கருத்து என் சொந்த அனுபவத்தில் பல அற்புதமான மனிதர்களைப் பார்த்தும் பழகியும் நேரடியாக உணர்ந்த ஒன்று.இந்தியா விடுதலை பெற்ற பின் நாம் அமைத்த முதல் கல்விக்குழு கோதாரி குழு ஆகும்.அதன் முதல் செயலாளர் ஆக இருந்தவர் திரு.ஜே.பி.நாயக்.உநேச்கோ அமைப்பினால் உலகின் சிறந்த கல்வியாளர்களின் பட்டியலில் குறிப்பிடப் பெற்றவர் இவர்.இவர் எழுதிய "கல்விக்குழுவும்,அதன் பிறகும்"என்ற நூலில் இந்தியக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று கோத்தாரி குழு எதிர்பார்த்ததோ அந்த மாற்றங்கள் நடந்ததா என்று திறந்த மனதுடன் நேர்மையாக ஆராய்கிறார்.தான் தயாரித்ததுதான் என்றாலும் அந்தக் குழு அறிக்கையைக் கூட விமர்சன பூர்வமாக அணுகி,அதன் பலவீனங்களை,விடுபடல்களை,-ஏன்,அதன் போதாமையைக் கூட வெளிப்படையாக எழுதி இருக்கிறார்.அதன் முன்னுரையை எழுதி இருப்பவர் மொல்கம்  எஸ்.அதிசெசய்யா.அவர் தன முன்னுரையில்,"எந்த ஒரு நாட்டிலும் அதனுடைய கல்வி வாழ்க்கை என்பது படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் போன்றது;அது கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்ரைச் செழுமையான உள்ளேடு ஆகக் கொண்டு உயிர்ப்புள்ள நீர்ப் பெருக்காயிப் பாயும்"என்கிறார்.நமது இந்தியக் கல்வித்துறையின் வரலாற்றைத்  திரும்பிப் பார்த்தல் அவசியம்.அவ்வாறு பார்க்கும் பொது அது மேற்க்கண்டவாறு தொடர் நீரோட்டம் ஆக இருப்பதை உணர முடியும்.ஆனால் படிப்படியாக அது மாறிக் கொண்டே வந்திருக்கிறதா,கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்றைச் செழுமையான உள்ளீடாக அது தன்னுள் உள்வாங்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இன்றும் நம் நாட்டுப் பெண்களில் கிட்டத் தட்ட நாற்பது சதவீதம் பேர் படிக்காதவர்கள் என்பதை நினைக்கும் வேளையில் மனம் மிகவும் கனமாகி விடுகிறது.இந்தச் சூழலில்தான் பிறரைப் படிக்க வைக்க பஸ் நிலையத்தில் படுத்துத் தூங்கிக் கூட சேவை செய்யும் அசாதாரணமான சேவையாளர்களை நன்றியுடன் வணங்க வேண்டிஇருக்கிறது................!

Monday, November 16, 2009

சாதாரண மனிதர்களின் அசாதாரண சேவைகள்...

நேற்று கவிஞர் யுகபாரதியுடன் ஒரு மணி நேரம் உரையாடல் நிகழ்த்த முடிந்தது.அவர் சொன்ன ஒரு செய்தி மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. அவர் நெடுக் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு பற்றியது அது."வெளிச்சம்" என்ற ஒரு சேவை அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில் ஐம்பது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்று நாம் கூறுகிற பிரிவினர். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சேவை அமைப்பின் உதவியை மட்டுமே கொண்டு பட்டம், பட்டயம் போன்று கல்வித் தகுதி பெற்று விட்ட மாணவர்கள். இவர்கள் கல்வி பெற வேண்டும் என்று பாடுபட்டவர் இந்தச் சேவை அமைப்பின் நிறுவனர் ஆக உள்ள ஒரு பெண். அவர் மாணவர்களின் கல்விக்காக அலைந்து திரிகிற வேளையில் தங்க இடம் கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் கூடத் தன்  மாணவர்களுடன் தங்கி இருக்க நேர்ந்திருக்கிறது. இந்த வகையில் படித்த அம்மாணவர்கள் இப்போது தங்களைப் போல உள்ள பிற மாணவர்களின் கல்விக்குப் பாடுபடுகிறார்கள். என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்து இன்னும் இருபது பேருக்கு பீஸ் கட்டுகிற ஒரு மாணவனை பற்றிச் சொன்ன சமயம் கண்கள் குளமாகின. வேதனை என்ன என்றால் இந்த மாணவர்களின் நிலைமை நன்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் படிக்கும் நிறுவனங்கள் இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பைசா கூடக் குறைத்துக் கொள்வது இல்லை. தனது கல்விக்கு, பூஜை செய்து    கிடைக்கும் அர்ச்சனை தட்டுக் காசுகளைக் கொண்டு உதவிய ஒரு பூசாரி பற்றி மனம் நெகிழ்ந்து சொன்னார், யுகபாரதி.தன "நடைவண்டி நாட்கள்" நூலில் இது பற்றி எழுதி இருப்பதாகவும் சொன்னார். கேட்கும் போதே மனம் சுமையாகி கனக்கிறது. "இந்த நாட்டில் மட்டும் தான் படிப்பதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கிறது" என்றார் அவர். இன்று மிக வெற்றிகரமான பாடல் ஆசிரியர் ஆகி விட்டாலும் தன முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில் தயக்கம் எதுவும் இல்லை அவரிடம். இந்த அனுபவம் எனது எழுத்தறிவுப் பணியில் நான் பெற்ற பல அனுபவங்கள் குறித்து நினைவு கூர்ந்து நெகிழும் வாய்ப்பைத் தந்தது. கிராமப் புற மக்கள் புதிதாக எழுதப் படித்துத் தெரிந்து கொண்டு முதல் முதலாக சில எழுத்துக்களை எழுதிக் காட்டும் வேளையில் அவர்களின் கண்களில் மின்னும் மகிழ்ச்சிப் பிரவாகம் நம்மை மலைக்க வைக்கும். எழுத்தறிவின் அவசியம் பற்றி அவர்கள் நடுவே முதல் முதலாகக் கலை நிகழ்ச்சி நடத்திய கலைக்குழுவிற்கு இரவு உணவை கிராம மக்களே சில சமயம் வழங்குவது உண்டு. அவ்வாறு உணவு போடும் அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. மிக எளிய மனிதர்கள் அவர்கள். அந்தக் குடும்பம் முழுவதுமே பரிமாறும்.உணவை முடித்துக் கொண்டு  வெளியே வரும் வேளையில் அக்குடும்பத்தினர் கண்களில் தெரியும் பெருமிதம் இருக்கிறதே, அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. கடந்த பத்தொன்பது ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் காரணம் இந்த மாதிரிச் சாதாரணமானவர்கள் செய்ய முன்வரும், செய்து கொண்டே இருக்கும் அசாதரணமான சேவைகளைத் தினமும் நேரடியாகப் பார்க்கும் ஒரு வேலையாக அது இருந்ததே. வேறென்ன சொல்வது?...!

Sunday, November 15, 2009

sithaayanamum raamaayanamum....................

ராமாயணம் நமது இதிகாசங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் இன்னும் உயிர்த்துடிப்புடன் மக்கள் மனங்களில் இடம் பெற்ற கதை இது.இக்கதை நாயகன் ராமன் தான் பிரதானமாக முன் வைக்கப் படும் பாத்திரம்.ஆனால் உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவில் அனேகமாக எல்லா மொழிகளிலும் பல வகையான ராமாயணக் கதைகள் வழக்கில் உள்ளன.இவற்றில் சீதா முக்கியப் பாத்திரம் ஆக இடம் பெறுவது நம் கவனத்திற்கு வந்திருக்குமா?சந்தேகம்தான்.இது பற்றி இன்று கன்னட மொழிக் கவிஞரும்,எழுத்தாளருமான சிவப்ப்ரகாஷ் எழுதி உள்ள "சீதாயணம்"என்ற கட்டுரை பல சிந்தனைகளை முன் வைக்கிறது.ராமாயணத்தின் புகழுக்குக் காரணம் அது ஒரு ஆன்மீக இலக்கியம் என்பதுவா?  அல்ல.நமது நாட்டின் எல்லா மதப் பிரிவுகளும் அவரவர் சொந்த ராம காதைகளை கொண்டுள்ளன.புத்த மதம் சார்ந்த தாய்லாந்து நாடும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் அந்தந்த நாடுகளுக்கே உரிய ராமாயனங்களைக் கொண்டுள்ளன.ஆனால் மக்கள் நடுவே ராமன் கதை பெற்றுள்ள புகழ் அது மனித உணர்வுகளின்வேறு வேறு வண்ணங்களைக் காவியம் ஆகி இருக்கிறது என்பதே.நமது பழ்ங்குடி மக்களின் நடுவே உலவும் நாட்டுப்புறக் கதைகளிலும்,பாடல்களிலும் புழங்கி வரும் ராமாயணத்தில் ராமனின் முக்கியத்துவம் குறைவே.சீதைக்குத்தான் புகழ் எல்லாம்.கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புறப் பாடல் இப்படி அமைகிறது.:"ஜனகனின் இளவரசி காட்டில் ஒரு தொட்டிலில் லவனையும் குசனையும் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.இனிய தாலாட்டுப் பாடல்கள் பாடுகிறாள்.."என்பதே அது.அந்த மாநிலத்தில் தும்கூர் பகுதியில் ஒரு படிக்காத பெண் சொன்ன கதையில் அக்னிப் பிரவேசம் செய்யும்படி சீதையிடம் ராமன் சொல்வதாகக் கதை இல்லை.மாறாக,சீதை தன கற்பை நிரூபிக்க பல காலமாக மலடாக இருந்து வரும் மரம் ஒன்றை பூக்கச் செய்து,காயிக்கச் செய்தால் போதும் என்பதே ராமனின் நிபந்தனை.அதன்படி சீதை அந்த மரத்தைத் தொடுகிறாள்.உடனே அந்த மரம் பூத்துக் குலுங்குகிறது.காய்கள் தொங்குகின்றன.என்ன அற்புதமான உணர்வு? இது போலவே மாபெரும் கவி பவபூதி தன உத்தர ராமாயணத்தில் ராமனும் சீதையும் இறுதியில் ஒன்று சேர்வதாக முடிக்கிறார்.ஆனால் வேறு பல ராமாயணங்களில் சீதையின் முடிவு பூமித் தாயிடம் சரண் புகுந்து மறைவதாக அமைகிறது.ஆந்திராவின் பெண் போராளி சிநேகலதா ரெட்டி எழுதிய கதையில் சீதை தன கற்பு பற்றி சந்தேகப் படும் ராமனிடம் கடும் விவாதம் நடத்திய பிறகும் அவன் மனம் மாறாதது கண்டு கொதித்து எழுந்து அவனை நிராகரிப்பதாகக் கூறுகிறார்.தமிழ எழுத்தாளர் புதுமைப் பித்தன் தன சிறுகதையில் சீதையைத் தீயல் இறங்கச் சொல்லி ராமன் சொன்னதாகக் கேட்டதுமே "ராமனே சொன்னாரா?"என்று திரும்பத் திரும்பக் கேட்ட பின் இறுதியில் "அவனே சொன்னானா?"என்று கேட்டு, சீதை "ஆம்,ராமனே சொன்னதுதான் இது"என்று சொன்ன உடனே அகலிகை மறுபடி   கல் ஆகி விட்டதாக ஒரு கடும் விமர்சனத்தைக் கதை மூலம் வைக்கிறார்.இது போன்ற பல உதாரணங்கள் சீதைக்கே ராமனை விடப் பெரும் புகழ் இருப்பதாக நிரூப்க்கின்றன  என்கிறார் சிவப்பிரகாஷ்.மறுவாசிப்பு என்பது இதுதான்...........!

Saturday, November 14, 2009

sathyajith ray -unnikrishnan-isaiyum thiraiyum..............

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவது பற்றிப் பயணங்கள் முடிவது இல்லை என்று நினைத்துப் பார்க்கிறோம்.சற்று முன் படித்த ஓரிரு விஷயங்கள் நினைவில் அலை மோதுகின்றன.தனது இசைப் பயணம் பற்றி நினைவு கூர்ந்து அவர் சொல்வது நம் கவனத்திற்கு உரியது.தன அன்னையும் தந்தையும் அளித்த உத்வேகம்,வழிகாட்டுதல்,ஒரு போட்டியில் கிடைத்த பரிசு இவைதான் தனது இசைத் துறை வெற்றிக்குக் காரணம் என்கிறார்.டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் ஆக இருந்த உன்னிகிருஷ்ணன் இன்று மக்கள் மனங்கவரும் பாடகர்."என்னவளே அடி என்னவளே..."பாடல்தான் அவரின் முதல் திரைஇசைப் பாடல். அந்த ஒரே பாடலில் அவர் புகழின் உச்சிக்குப் போக முடிந்தது.சிறந்த பின்னணிப் பாடகர் என்ற தேசிய விருதையும் இந்த முதல் பாடலில் அவர் பெற முடிந்தது.இது திரை இசையில் வெற்றி பெற்ற ஒருவரின் அனுபவம்.திரைப் பட இயக்குனர் என்ற வகையில் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் வங்க மொழித் திரை இயக்குனர் சத்யஜித்ரே மற்றொரு உதாரணம்.உபெந்திரகிஷோர் என்ற கலைஞர் எழுத்து,இலக்கியம்,ஓவியம் போன்ற கலைகளில் சிறந்தவர்.ஆனால் தன திறமைக்கு ஏற்ற புகழை அடைய அவரால் முடியவில்லை.அவரது மகன் சுகுமார் ரேயும்சிறப்பான கலைஞர்தான். அவரும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.இவரது மகன் சத்யஜித் தாத்தா வின் கனவை நனவாக்கினார்.இவரது மூன்று வயதில் அப்பா இறந்து விட,அம்மா சுப்ரபா தான் தனி ஆளாக மகனை ஒரு திரை கலைஞராகி வெற்றி காணச் செய்தார்.தன அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை ஒரு உலகறிந்த திரைப்பட இயக்குனர் ஆக்கியது என்று பின்னாளில் ரேயே இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா-ஆகிய படங்கள் உலக அளவில் பாராட்டுக்களையும்,விமர்சனங்களையும் பெற்றவை.சாருலதா படத்தில் நமது கலாச்சார மதிப்பீட்டில் பெரும்விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ரே.ஓவியம்,நுண்கலைகள் பயின்ற திரைக்கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.தமிழ்த் திரைக் கலைஞர் சிவகுமார் போலவே ரேயும்.எந்த மொழியானால் என்ன?சிறந்த கலைஞர்களின்  வாழ்க்கைப் பயணமும் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை உணர முடிகிறது...........!

Friday, November 13, 2009

பயணங்கள் முடிவதில்லை...

திங்கள் அன்று எதிர்பாராமல் கோவைக்குப் பயணிக்க நேர்ந்தது.அம்மா கீழே விழுந்து விட்டார்கள்.மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் அம்மாவுக்கு இந்த வயதில் இப்படி ஒரு சோதனை. எப்போதுமே எங்கள் ஊருக்குப் போவது என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.பூசாரி பட்டியில் இரங்கி நடந்தே போவது இன்னும் அதிகப் பிடித்தம்.சென்ற முறை என் இடுகையில் ஊர் சுற்றிப் புராணம் பற்றி எழுதி இருந்தேன்.அந்தப் புத்தகம் படிக்கும் முன்னரே ஊர் சுற்றுவதில் பெரும் ஆர்வம் உடையவன் என்றாலும் அதன் பிறகு இன்னும் பல மடங்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.ஒரு முறை எட்டாம் வகுப்பு படிக்கையில் கோடை விடுமுறை வந்தது. அந்த லீவில் கேரளாவில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. கொச்சின் அருகே எர்ணாகுளத்தை அடுத்த குட்டித் தோடு என்ற ஒரு சின்ன ஊரில் பெரியப்பா இருந்தார்.அந்த ஊரின் வெளியே சின்ன ஆறு போல கடல் நீர் ஓடும் காயல் என்ற நீர் ஓடை ஓடிக் கொண்டிருக்கும். படகுகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.அந்த ஊரில் சுமார் ஒன்றரை மாதம் வரை இருந்தேன். இன்னும் பசுமையாக இருக்கிற நினைவுகளை அந்த ஊரில் இருந்து அப்போது அந்தச் சிறு வயதில் சுமந்து கொண்டு திரும்பி இருந்தேன். இருக்கையில் பார்த்த மூன்று மலையாளப் படங்களில் இரண்டு நன்றாக நினைவு இருக்கிறது.  ஒன்று எம்.டி.வாசுதேவன் நாயரின் "இருட்டிண்டே ஆத்மாவு".மற்றது "கனக சலங்கை"இந்தப் படம் யாருடையது என்பது நினைவு இல்லை.ஆனால் இருளில் ஆத்மா என்ற படம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.மன நிலை சரி இல்லாத ஒரு இளைஞனின் கதை இது.கனக சலங்கையின் கதை இசையார்வம் மிக்க நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கதை என்று மங்கலாக கொஞ்சம் நினைவு வருகிறது. அங்கு பார்த்த படங்கள், படகுகளில் சரக்குகளையும் மனிதர்களையும் ஏற்றிக்  கொண்டுசெல்லும் கேரளா படகோட்டிகள், அந்த ஊருக்கு அருகில் கண்ட ஒரு கோவில் திருவிழா, அலங்கார யானைகளின் முகபடாம்,வான வேடிக்கைகள், தென்னை மரங்கள் இனிமை கொஞ்சும் மலையாள மொழி,குழாய்ப்புட்டு, இப்படியாக நினைவு அடுக்குகளில் பதிந்தவற்றில் பல நினைவுகளை ஊர் திரும்பிய  பிறகு "மலை நாட்டுத் தென்றலில்..." என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரையாக எழுதினேன். எந்தப் பத்திரிகையில் என்று கேட்டு விடாதீர்கள்.நான் லீவு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குப் போனதும் அங்கு தினமும் பயிற்சி நோட்டில் ஒரு பக்கம் நல்ல கையெழுத்தில் எழுதிக் கொண்டு வரும்படி ஆசிரியர் சொல்லுவார். அந்த நோட்டில்தான் என் பயணக் கட்டுரைத் தொடர் இடம் பெற்றது. இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே?ஆசிரியர் ஒன்றும்  சொல்லாமலா இருந்தார் என்ற சந்தேகம் வருவது நியாயம்தானே?ஆனால் தினமும் நான் என் பயண அனுபவங்களை எழுதுவேன். நோட்டு ஆசிரியர் பார்வைக்குப் போகும். சிவப்பு மையில் ஒரு ரைட்போட்டு அவரின் இனிடியலையும் போடுவார் அவர். ஒருக்கால் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்காமலே திருத்தினாரோ? அது சரி, வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்கள் தினமும் எழுதும் அவ்வளவு கட்டுரை நோட்டுகளையும் படித்துப் பார்த்துக் கை எழுத்துப் போடுவது நடக்கிற காரியமா? 

Sunday, November 8, 2009

oor sutrip puraanam...............

ஊர் சுற்றிப் புராணம் என்ற புத்தகத்தை ராகுல சங்கிருத்தியாயன் எழுதி இருக்கிறார்.இவரின் பல புத்தகங்கள் மிகப் புகழ் பெற்றவை.இந்தப் புத்தகத்தில் ஊர் சுற்றுவது பற்றி அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதி இருக்கிறார்.ஊர் சுற்றி என்றால் பொதுப் புத்தியில் மிகத் தாழ்வான எண்ணமே இருக்கிறது.ஆனால் இந்தப் புத்தகம் படிப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.அவ்வளவு வலிமையான வாதங்களை ஊர் சுற்றுவதற்கு ஆதரவாக எடுத்து வைக்கிறார் ராகுல்ஜி. "ஊர் சுற்றிப் புராணம் எழுத வேண்டிய தேவையை நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.என்னை போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து  கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.வாசகர்களின் மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கம் அல்ல.அதற்குப் பதிலாக அந்த என்னத்தை வலுப்படுத்த வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்" என்கிறார் இவர்."உலகத்தில் உள்ள தலை சிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும்.ஊர் சுற்றுவதை விட மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளால் தான்இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர் சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான்.விவசாயம்,தோப்பு துறவு,வீடு வாசல் எதுவும் இல்லாத அவன் வானத்துப் பறவைகளைப் போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்......"இப்படித் தொடங்கும் புத்தகம் முழுக்க ஊர் சுற்றும் உயர்ந்த விரதம் வேறு எதுவும் இல்லை என்று நிறுவுகிறது.பகவான் புத்தர்,மகாவீரர்,குரு நானக் போன்று உலகின் பல மகா மனிதர்கள் அனைவரும் ஊர் சுற்றிகள் ஆகத்தான் இருந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி.அவ்வாறு ஊர் சுற்றியதன் மூலமே மனிதஇனம்  இன்று அடைந்துள்ள அணைத்து முன்னேற்றங்களையும் அடைந்து உள்ளது என்று பல உதாரணங்களுடன் விவரிக்கிறார்.மிக அற்புதமான நடையில் இந்த நூலை மொழி பெயர்த்து இருப்பவர் ஏ.ஜி.எத்திராஜுலு.என்கிற முன்னோடி மொழி பெயர்ப்பாளர்.ராகுல்ஜியின் நூல்களில் மட்டுமே பன்னிரண்டுக்கு மேற்பட்ட நூல்களை தமிழுக்குத் தந்தவர் இவர்.பயன் கருதாமல் உலகம் சுற்றி வரும் ஊர் சுற்றிகளின் அனுபவங்கள் மனிதர்களின் முன்னேற்றம்,வளர்ச்சி,இலக்கிய-கலாசார உலகில் பெரும் படைப்புகள் தோன்றி வளர உதவி இருப்பது நாம் அறிந்த உண்மை,அல்லவா?     தமிழில் இது போன்ற பயண இலக்கியங்கள் ஏராளமாக வந்து இருக்கின்றன.சிலப்பதிகாரக் காப்பியமே ஒரு வகையில் பயணம் சென்று ஒரு தம்பதியர் அடைந்த துன்பங்களின் கதை தானே?நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் பல பயண நூல்கள் ராகுல்ஜியின் கருத்துக்கள் உண்மைதான் என்று நிறுவுகின்றன.தி.ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி','உதய சூரியன்'போன்றவை;'சிட்டி' சிவபாத சுந்தரம் அவர்களின் 'சேக்கிழார் அடிச் சுவட்டில்',புத்தர் அடிச் சுவட்டில்''மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில்,' இப்படிப் பல புத்தகங்களைச் சொல்லலாம்.ஊர் சுற்றுகிற அனுபவங்களின் அடிப்படையில் இன்றும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் மிக நல்ல கட்டுரை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருவது நாம் அறிந்ததே.கோணங்கி என்கிற நவீன ஊர் சுற்றியின் அனுபவங்களை அவர் விவரிக்கும் சமயத்தில் நேரில் கேட்பவர்கள் அந்த அனுபவங்களை எந்த வார்த்தையில் விளக்க முடியும்? ராக்ல்சி என்கிற ஊர் சுற்றி முன்னோடியின் புராணம்,கட்டுக் கதைகளின் தொகுப்பு  அல்ல.ஒரு பயன் கருதா கர்ம யோகியின் சிரத்தை மிக்க கருத்துலகம்...............!

Friday, November 6, 2009

இன்றும் வல்சனின் சிந்தனைகள்...



நவம்பர் இரண்டாம் தேதி அன்று சிற்பி வல்சன் கொலேரியின் சிந்தனைகள் சிலவற்றை இட்டிருந்தேன். பலரின் கவனத்தில் அது பதிந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.அவரது சிந்தனைகள் மிகவும் யோசிக்க வைக்கின்றன ஒரு கலைஞன் சமூகப் பிரஞ்கை உடையவன் ஆக இருந்தால் அவனது கலையில் அது எந்த அளவுக்குச் சமூக நிகழ்வுகள் பிரதிபலிக்கும் என்பது நமக்குப் புரிகிறது அவரின் சிந்தனைகளில் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம் .: "ஓவியம், சிற்பம் இவை மெத்தப் படித்த, கலையுணர்வு மிக்க மேல் தட்டு மனிதர்களுக்கானவை என்று பொதுவான நினைப்பு இருக்கிறது; அது சரியல்ல.. நம்மெல்லோருக்குள்ளும் இருக்கும் கலைஞனை பலரும் இறுதி வரை உணராமலே ஆகி  விடுவதுதான் பெரிய சோகம்" என்பது இவர் கருத்து ஆர்வமும், ஈடுபாடும் உள்ள எந்த ஒரு மனிதனும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் அற்புதமான கலைஞனாக முடியும். பார்வையற்ற மனிதர்களால் கூடச் சிற்பங்களை ரசிக்க முடியும் என்று இவர் சொல்லும் போது நமக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. அவரே சொல்கிறார்: "சிற்பம்-பார்க்கப் படுகிற ஒன்று மட்டும் அல்ல; விசுவல் ஆர்ட் மட்டும் அல்ல அது. எனது கண்காட்சி ஒன்றில் வாய்த்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிற்பங்களை கண் பார்வை அற்ற இருபது-முப்பது மாணவர்கள் வந்திருந்து "பார்த்தார்கள்". அவர்களாக ஒவ்வொன்றையும்  தொட்டுப்  'பார்த்து' அனுபவித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவகாரங்களை பார்வையுள்ளவர்கள் கூடச் செய்ய முடிந்தது இல்லை. முழு உலகையுமே 'பார்க்க' அவர்களால் முடிகிறது. நமக்குத்தான் பார்வை தீட்சண்யமாக இல்லை. முட்டுச் சந்துகளில் நின்று விடுகிறது நம் பார்வை. ஆனால் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் உணர்த்த முடிகிற மாதிரி ஒரு தகவல் தொடர்பு இருக்கிறது- பறவைக் கூட்டத்தில் ஒரு பறவை தவறி விட்டாலோ அடிபட்டு விழுந்து விட்டாலோ கூட்டம் முழுவதும் உடனே அதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்து விடுகிற மாதிரி...." ....உண்மைதான்! 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நகரங்களிலும், பாரீஸ் உட்பட சர்வதேச நகரங்களிலும் ஏராளமான கண்காட்சிகளை நடத்திப் புகழ் பெற்றவரான வல்சன் கொலேரி, அனுபவப் பூர்வமாக ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன்  சொல்லுகிற இம்மாதிரி உண்மைகளை எப்படி மறுக்க முடியும்?

Monday, November 2, 2009

nava naveenak kuralkal............

இன்று தமிழ எழுத்தாளர்கள் நடுவே நிகழ்ந்து வரும் சில விவாதங்கள் படிக்கப் படிக்க வேதனை அளிப்பதாக உள்ளன.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சாதி குறிப்பிட்டுத் திட்டிக் கொண்டு இருப்பதுதான் அது.நவீன,நவ நவீன,அதி நவீனக் குரல்களாகத் தமது குரல்களைத் தாங்களே குறிப்பிடுவது இன்னொரு கொடுமை.நமது சமூகத்தின் அழிக்க முடியாத அநீதியாக நீடித்து இருந்து வரும் சாதி சார்ந்த பார்வைகளை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இன்று தூக்கிப் பிடிப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.மிகப் புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளர்கள் கூட இதற்குஅப்பர்ப்பட்டவர்கள்  அல்ல என்பது வேதனை.படைப்புக்களில் எங்கேனும் அவரவர் சாதி அம்சங்கள் அவர்களை அறியாமலேயே பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.அவரவர் குடும்ப,கலாசார,பழக்க வழ்க்கங்கள் இம்மாத்ரிப் பிரதிபலிக்கும் போது அவர்கள் சாதி உணர்வுடன்தான் இந்த இடத்தில இன்ன மாத்ரி எழுதி இருக்கிறார்கள் என்று முத்திரை குத்துவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் இன்று  மிக அதிகம் ஆகி விட்டன.இதன் மூலம் சமூகப் பரப்பில் இருந்தே துடைத்து எறியப் பட வேண்டிய ஒரு அவலத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்து மீண்டும் ஒரு பெரும் அழிவுச் சக்தியாக வளர்க்கிறார்கள்.ஏற்கனவே பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகள் இந்த சாதி வெறிக்கு நீர் ஊற்றி உரம் இட்டுப் பேரு மரமாக வளர்த்து விட்டாயிற்று.மானுட மேன்மைக்குப் பாடுபட வேண்டிய இலக்கியத்திலும் இந்த அவலமா?

Sunday, November 1, 2009

ammy kothavum sirpi thevaithaan........

நேற்று என் வலைப் பதிவில் சிற்பி வல்சன் கொலேரியின் அனுபவப் பதிவுகளை அவரின் நேர்காணல் ஒன்றில் இருந்து இட்டிருந்தேன்.என் கட்டுரை தொகுப்பில் அது இடம் பெற்று இருக்கிறது.இன்றும் அவரது கருத்துக்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.:"உடைந்த அம்மிக் கல்லில்,தன தாயார் நீண்ட காலம் வீட்டில் புழங்கிய பழைய வெண்கலப் பாத்திரத்தில் உயிர்த் துடிப்பு மிக்க சிற்பங்களை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் :  ".....பழைய அம்மிக்கல்-அர்த்தம் நிறைந்த ஒன்று.அது உடைந்து துண்டுகளாக ரோட்டில் கிடக்கும் போது பல நூற்றாண்டுகளாக இந்திய உழவர்களின்  வரலாற்றைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடப்பது போல் தோன்றுகிறது எனக்கு,அந்த மாற்றிக் கிடக்கிற கல்லின் அழகினை உளி கொண்டு சிதைக்க எனக்கு மனமில்லை.எந்தக் கல்லிலும்,எந்த மரத்த துண்டிலும் எஅதோ ஒரு சொவ்ந்தர்யம் இருக்கத்தான் செய்கிறது.அதை என் கெடுக்க வேண்டும்?   எந்தச் சிற்பம்,எதனால் செய்யப் பட்டு இருக்கிறது என்று பார்பவருக்குத் தெரிய வேண்டும்.எந்தப் பக்கம் திருப்பினாலும் ஒரு சொவ்ந்தர்யம் இருக்க வேண்டும்....மெடீரியல் வங்கக் காசு இல்லாத போது-உடைந்த செங்கற்களை எடுத்து மணிக் கணக்கில் உரசி கிரைந்து பண்ணி நூற்றுக் கணக்கான kkyubuகளை உருவாகுவதற்குப் பயன்படுத்தினேன்.நல்ல கலைக்கு பற்றாக் குறைதான் உந்துதலாகக் கூட இருக்கிறது,மிக்கேல்-அஞ்சலோவின் 'டேவிட்' உருவானது கூட இதுபோல்தான்..."     வல்சனின் சிற்பங்கள் ஏதோ வெறும் ஆத்மா திருப்திக்காக வடிவமைக்கப் படுகிறவை அல்ல........திறவுகோலே என்று ஒரு சிற்பம்.புது டில்லி lalitha கலா அகாடமியின் முகாமிற்குச் சென்ற வல்சனின் கண்களில் கட்டி முடிக்கப் பட்டுப் பல ஆண்டுகளாகியும் பயன்படுத்தப் படாமல் மூடிக் கிடந்த "ஜவகர்லால் நேரு கலாகேந்திரா "கட்டிடம் பட்டிருக்கிறது."அதைத் திறந்து பயன்படுத்துங்கள் "என்று மொவுனமாக வலியுறுத்துகிற ஒரு சிற்பம்தான் திறவுகோலே ஆக வடிவு எடுத்துநின்றது...."சாலைகளை அகலப் படுதுவதர்க்காகப் பல ஆண்டுகளாக நிழாலும் கனிகளும் தந்து வந்திருக்கிற நெடிய மரங்களை வேருடன் தோண்டிப் போடுகிறோம்.அந்த மரங்களின் கதறலை நாம் ஒரு கணமேனும் கேட்டிருப்போமா?ஒரு பத்து நிமிடம் நம்மால் சேர்ந்தார்ப் போல் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டே நின்றிருக்க முடிகிறதா?....ஆனால் சாலை ஓரங்களில் அய்ம்பது,அறுபது ஆண்டுகளாகத் தனது கிளைகளை நீட்டியபடியே நிzaலையும், கனிகளையும் நமக்குத் தந்து கொண்டே அயராமல் இருந்து வந்த மரங்களின் கதரல்களைச் சட்டையே பண்ணாமல் அவற்றை வட்டிப் போட்டு விட்டு சாலை அமைப்பதில் சந்தோசப் படுகிறோம்.கொச்சின் அருகே ஒரு முகாமில் பங்கேற்ற போது -அருகில் இருந்த சாலையை அகலப் படுத்துவthaற்காக ஒரு பிரமாண்டமான மரத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள்.இருபது,முப்பது பேரை அழைத்துக்கொண்டு சென்று தோண்டி போடப்பட்டிருந்த மரத்தின் வேர்களைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தேன்.முகாமில் இயல்பாய் வளர்ந்து இருந்த சிருகொடிகள்,வேரடி மண்ணோடு சாய்ந்திருக்கும் மரச் சரிவில் முளை விடுவது போன்ற சிற்பமாக வடிவமைத்தேன்.-அதைப் பார்க்கிற எந்த மனித மனதிற்கும்,எதிர்காலத்தில் எந்த இடத்திலும் இம்மாத்ரி மரங்களை வெட்டும்போது கொஞ்சமேனும் உறுத்தல்,தயக்கம் ஏற்படாமல் இருக்காது,...."என்கிறார் வல்சன் கொலேரி.அம்மி  koத்த சிற்பி எதற்கு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதி இருந்தார்.சினிமாப் பாடல் எழுதுவதற்கு தன போன்ற கவிஞர்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் அப்போது அக்கருத்தினை எழுதியிருந்தார்.ஆனால் சிற்பியான வல்சன் கொலேரியின் அனுபவத்தில் அம்மி கொத்தவும் சிற்பி தேவைதான் என்று நிரூபணம் ஆகி இருக்கிறதே?