Saturday, December 5, 2009

pirantha mannil oru naal..........!

இந்த வெள்ளிக்கழமை அன்று நான் திண்டுக்கல் போயிருந்தேன்.அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்;படித்தேன்;அங்கிருந்து வெளியேறி இப்போது சுமார் நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போது பார்க்கையில் ஊரே அடையாளம்  தெரியாமல் மாறி இருப்பதை உணர முடிந்தது.நெடுஞ்சாலைகள் பெரிய பாலங்களின் இணைப்பில் பிரமாண்டமாய் ஆகி  விட்டிருந்தன.அங்கு ஒரு நிகழ்வில் கிராம நூலகங்களின் பயன்பாடு பற்றி ஒரு வகுப்பு நடத்த வேண்டியிருந்தது.நன்றாக அமைந்தது.அதல்ல என் மனம் சொல்ல விரும்புவது.எனது மூத்த சகோதரர் ஆக நான் மதிக்கும் எழுத்தாளர்,நல்லாசிரியர் விருது பெற்று இப்போது பணி ஒய்வு பெற்றுள்ள அண்ணா திரு கமலவேலன் அவர்களைக் கண்டு பேச முடிந்ததும்,அவரும் நிகழ்வில் என்னோடு பண்கேற்றதும்தான்.அவரை நான் சந்தித்ததே ஒரு விந்தையான முறையில்தான்.அப்போது நான் பள்ளி மாணவன்."கண்ணன்"என்ற அக்கால சிறுவர் இதழில் கமலவேலன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன்.அதில் டிண்டுகல்லின் கடைவீதியும்,பழனி ரோடும் இன்னும் சில இடங்களும் இடம் பெற்று இருந்தன.அடடே,நம் ஊரில் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா என்ற வியப்புடன் அவரைப் பற்றி அந்த ஊர்ப் பத்திரிகை விற்பனைக் கடைகளில் எல்லாம் விசாரித்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தேன்.அவரை ஒருமழை   நாளில் பதிரிகைக்கடை எதிரில் சந்தித்தேன்.அன்று தொடங்கிய நட்புமஅன்பும் இன்றளவும் நீடித்து இருக்கிறது.நடுவே சில காலம் தொடர்பு அறுந்து இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் தொடர்பு கிடைத்து விடுகிறது.அவர் ஏராளமான நூல்களின் ஆசிரியர்.அந்தக்கால பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,மற்று கல்கி,குமுதம் விகடன் உட்படப் பிரபல,சிற்றிதழ்கள் எல்லாவற்றிலும் எழதி இருப்பவர்.ஆனால்போதிய அளவு இன்னும் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்குப் போல் இருப்பவர்.அவர் தீபம் இதழில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"சிறுகதை மறக்க முடியாத சிறுகதைகளில் ஒன்று.சிறந்த நாடக் ஆசிரியரும் கூட.பல மேடை நாடகங்களை அவர் தன சொந்த முயற்சியில் அரங்கேற்றியவர்.குறிப்பாக பிரஞ்சு நாடக ஆசிரியர் மொழியர் எழுதிய "கஞ்சன்"நாடக அரங்கேற்றத்தின் போது சே.ராமானுஜம் வந்து பார்த்துப் பாராட்டினார்.அந்த நினைவுகளும் அவருடன் சேர்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் ,மலை அடிவார வள்ளலார் கோவிலில்,அபிராமி ஆலயத்தில் இப்படிப் பல இடங்களில்  பேசிக் கொண்டே திரிந்த நாட்களின் நினைவுகளும் அலை மோதிக்கொண்டு இருந்தன.வாழ்க்கை நம் முன் நிறுத்துகிற மனிதர்களின் பெருமைகள் முழுவதையும் நாம் உணர்ந்து முடிப்பதற்குள் நமது வாழ்க்கை முடிந்து விடுமோ? யாரறிவார்!

2 comments:

  1. எவ்வளவு சம்பாதித்தாலும்,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,எத்தனை வருடங்கள் ஆனாலும் தாய் மண்ணிற்கு திரும்புகையில் கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது ஸார். உங்கள் கட்டுரையும் அதைதான் உணர்த்துகிறது. நல்ல பதிவு.

    ஒரு சிறு ஆலோசனை.கட்டுரை எழுதும்போது சற்று இடைவெளி விட்டு பத்தி பத்தியாக எழுதினால் படிக்கும் வாசகர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும். ஆர்வமும் வரும்.நன்றி

    ReplyDelete
  2. anbu mikka poonkundran avarkalukku,vanakkam.unkalin pinnoottathai indruthaan padikka mudinthathu.mikka nandri.unkal aalosanaiyum oru sariyaana visayathai sutti kaati irukkirathu.ini mel idukaikal idum bothu ithaik kandippaakap pinpatrukiren.anbudan, kamalalayan.

    ReplyDelete