Sunday, November 15, 2009

sithaayanamum raamaayanamum....................

ராமாயணம் நமது இதிகாசங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் இன்னும் உயிர்த்துடிப்புடன் மக்கள் மனங்களில் இடம் பெற்ற கதை இது.இக்கதை நாயகன் ராமன் தான் பிரதானமாக முன் வைக்கப் படும் பாத்திரம்.ஆனால் உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவில் அனேகமாக எல்லா மொழிகளிலும் பல வகையான ராமாயணக் கதைகள் வழக்கில் உள்ளன.இவற்றில் சீதா முக்கியப் பாத்திரம் ஆக இடம் பெறுவது நம் கவனத்திற்கு வந்திருக்குமா?சந்தேகம்தான்.இது பற்றி இன்று கன்னட மொழிக் கவிஞரும்,எழுத்தாளருமான சிவப்ப்ரகாஷ் எழுதி உள்ள "சீதாயணம்"என்ற கட்டுரை பல சிந்தனைகளை முன் வைக்கிறது.ராமாயணத்தின் புகழுக்குக் காரணம் அது ஒரு ஆன்மீக இலக்கியம் என்பதுவா?  அல்ல.நமது நாட்டின் எல்லா மதப் பிரிவுகளும் அவரவர் சொந்த ராம காதைகளை கொண்டுள்ளன.புத்த மதம் சார்ந்த தாய்லாந்து நாடும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் அந்தந்த நாடுகளுக்கே உரிய ராமாயனங்களைக் கொண்டுள்ளன.ஆனால் மக்கள் நடுவே ராமன் கதை பெற்றுள்ள புகழ் அது மனித உணர்வுகளின்வேறு வேறு வண்ணங்களைக் காவியம் ஆகி இருக்கிறது என்பதே.நமது பழ்ங்குடி மக்களின் நடுவே உலவும் நாட்டுப்புறக் கதைகளிலும்,பாடல்களிலும் புழங்கி வரும் ராமாயணத்தில் ராமனின் முக்கியத்துவம் குறைவே.சீதைக்குத்தான் புகழ் எல்லாம்.கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புறப் பாடல் இப்படி அமைகிறது.:"ஜனகனின் இளவரசி காட்டில் ஒரு தொட்டிலில் லவனையும் குசனையும் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.இனிய தாலாட்டுப் பாடல்கள் பாடுகிறாள்.."என்பதே அது.அந்த மாநிலத்தில் தும்கூர் பகுதியில் ஒரு படிக்காத பெண் சொன்ன கதையில் அக்னிப் பிரவேசம் செய்யும்படி சீதையிடம் ராமன் சொல்வதாகக் கதை இல்லை.மாறாக,சீதை தன கற்பை நிரூபிக்க பல காலமாக மலடாக இருந்து வரும் மரம் ஒன்றை பூக்கச் செய்து,காயிக்கச் செய்தால் போதும் என்பதே ராமனின் நிபந்தனை.அதன்படி சீதை அந்த மரத்தைத் தொடுகிறாள்.உடனே அந்த மரம் பூத்துக் குலுங்குகிறது.காய்கள் தொங்குகின்றன.என்ன அற்புதமான உணர்வு? இது போலவே மாபெரும் கவி பவபூதி தன உத்தர ராமாயணத்தில் ராமனும் சீதையும் இறுதியில் ஒன்று சேர்வதாக முடிக்கிறார்.ஆனால் வேறு பல ராமாயணங்களில் சீதையின் முடிவு பூமித் தாயிடம் சரண் புகுந்து மறைவதாக அமைகிறது.ஆந்திராவின் பெண் போராளி சிநேகலதா ரெட்டி எழுதிய கதையில் சீதை தன கற்பு பற்றி சந்தேகப் படும் ராமனிடம் கடும் விவாதம் நடத்திய பிறகும் அவன் மனம் மாறாதது கண்டு கொதித்து எழுந்து அவனை நிராகரிப்பதாகக் கூறுகிறார்.தமிழ எழுத்தாளர் புதுமைப் பித்தன் தன சிறுகதையில் சீதையைத் தீயல் இறங்கச் சொல்லி ராமன் சொன்னதாகக் கேட்டதுமே "ராமனே சொன்னாரா?"என்று திரும்பத் திரும்பக் கேட்ட பின் இறுதியில் "அவனே சொன்னானா?"என்று கேட்டு, சீதை "ஆம்,ராமனே சொன்னதுதான் இது"என்று சொன்ன உடனே அகலிகை மறுபடி   கல் ஆகி விட்டதாக ஒரு கடும் விமர்சனத்தைக் கதை மூலம் வைக்கிறார்.இது போன்ற பல உதாரணங்கள் சீதைக்கே ராமனை விடப் பெரும் புகழ் இருப்பதாக நிரூப்க்கின்றன  என்கிறார் சிவப்பிரகாஷ்.மறுவாசிப்பு என்பது இதுதான்...........!

No comments:

Post a Comment