Sunday, November 29, 2009

sol ondru vendum...........!

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்பார் பாரதி.சொல்லாட்சி என்பதன் உச்சத்தை பாரதியிடம் பல வரிகளில் காண முடியும்."கால நடையினிலே நின்றன் காதல் தெரியுதடீ' என்பது ஒரு உதாரணம்.காதலியின் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போது காலம் மெல்ல நகரும் உணர்வு இருக்கும்.அந்த நகர்வை நடை என்று உருவகப் படுத்துகிறார் பாரதி.சொற்களின் வலிமை இலட்சியவாதிகளின் பேச்சுக்களில் ஸ்தூலமாக வெளிப்படுவதைக் காண முடியும்.புகழ் பெற்ற சில பேச்சுக்களில் இந்த வலிமை நம் கண்ணெதிரே  பொருந்தித் தெரிவதைக் காணலாம்."செயல்,அதுவே சிறந்த சொல்" என்கிறார் ஹோசே மார்த்தி.சொல்வதில் இன்பம் காண்கிற பலர் செயல் என்று வரும் போது பதுங்கிக் கொள்வதைக் காண்கிறோம்.                                       சொற்களை பூக்களைத் தொ டுப்பது போலத் தொடுத்து படிப்பவர் நெஞ்சில் நீண்ட காலம் வரை நிலைத்து இருக்கும் படிச் சொன்னவர் தீபம் நா.பா.அவரது ஆழ்ந்த தமிழ்மொழிப் புலமை அதற்கு நல்ல சாதனமாக அமைந்தது.அவரளவுக்கு மென்மையான முறையில் மொழியைக் கையாண்டவர்கள் தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைவு.குறிப்பாக அவரின் 'மணிபல்லவம்","குறிஞ்சி மலர்""தூங்கும் நினைவுகள்","பொன் விளங்கு""ஆத்மாவின் ராகங்கள்","மலைச் சிகரம்", போன்ற நாவல்களிலும் நவநீத கவி என்ற அவரின் கவிஞர் பாத்திரம் ஒன்று எழுதியதாக நா. பா. எழுதிய சில கவிதை வரிகளிலும் இந்தச் சொல்லின்பதைக் காண முடியும்.ஒரு உதாரணம்: அவரின் பொன்விலங்கு நாவலில் நவநீத கவியின் கவிதை வரிகள்............"எண்ணத் தறியில் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய்,முற்றும் கற்பனையா....."என்று வரும் பகுதி.அவரின் எல்லாப் படைப்புகளிலும் கவித்துவமும்,சொல்லாட்சியும் இனிமை நிறைந்த ஒரு இசைக்காவியம் போல் நம் நெஞ்சில் பதியும் வல்லமை padaiத்தவை. வாசிக்க வாசிக்க மனப் பரப்பில் அமுதமழை போல் ப்ய்யக்கூடியவை...!

No comments:

Post a Comment