Monday, November 2, 2009

nava naveenak kuralkal............

இன்று தமிழ எழுத்தாளர்கள் நடுவே நிகழ்ந்து வரும் சில விவாதங்கள் படிக்கப் படிக்க வேதனை அளிப்பதாக உள்ளன.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சாதி குறிப்பிட்டுத் திட்டிக் கொண்டு இருப்பதுதான் அது.நவீன,நவ நவீன,அதி நவீனக் குரல்களாகத் தமது குரல்களைத் தாங்களே குறிப்பிடுவது இன்னொரு கொடுமை.நமது சமூகத்தின் அழிக்க முடியாத அநீதியாக நீடித்து இருந்து வரும் சாதி சார்ந்த பார்வைகளை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இன்று தூக்கிப் பிடிப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.மிகப் புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளர்கள் கூட இதற்குஅப்பர்ப்பட்டவர்கள்  அல்ல என்பது வேதனை.படைப்புக்களில் எங்கேனும் அவரவர் சாதி அம்சங்கள் அவர்களை அறியாமலேயே பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.அவரவர் குடும்ப,கலாசார,பழக்க வழ்க்கங்கள் இம்மாத்ரிப் பிரதிபலிக்கும் போது அவர்கள் சாதி உணர்வுடன்தான் இந்த இடத்தில இன்ன மாத்ரி எழுதி இருக்கிறார்கள் என்று முத்திரை குத்துவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் இன்று  மிக அதிகம் ஆகி விட்டன.இதன் மூலம் சமூகப் பரப்பில் இருந்தே துடைத்து எறியப் பட வேண்டிய ஒரு அவலத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்து மீண்டும் ஒரு பெரும் அழிவுச் சக்தியாக வளர்க்கிறார்கள்.ஏற்கனவே பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகள் இந்த சாதி வெறிக்கு நீர் ஊற்றி உரம் இட்டுப் பேரு மரமாக வளர்த்து விட்டாயிற்று.மானுட மேன்மைக்குப் பாடுபட வேண்டிய இலக்கியத்திலும் இந்த அவலமா?

No comments:

Post a Comment