Thursday, November 19, 2009

kalviyin karaikalil......................!

நேற்று என் இடுகையில் கவிஞர் யுகபாரதியும் நானும் உரையாடிய ஒரு அனுபவம் ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். படிக்காத மனிதர்களுக்கு கல்வி போய்ச் சேர வேண்டும் என்று பாடுபடும் பலர் ஒன்றும் பெரும் அதிகாரம் படைத்தவர்கள் ஆகவோ,பெரும் செல்வந்தர்கள் ஆகவோ இருப்பவர்கள் அல்ல என்ற உண்மையை அவர் சொன்ன ஒரு நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.இந்தக் கருத்து என் சொந்த அனுபவத்தில் பல அற்புதமான மனிதர்களைப் பார்த்தும் பழகியும் நேரடியாக உணர்ந்த ஒன்று.இந்தியா விடுதலை பெற்ற பின் நாம் அமைத்த முதல் கல்விக்குழு கோதாரி குழு ஆகும்.அதன் முதல் செயலாளர் ஆக இருந்தவர் திரு.ஜே.பி.நாயக்.உநேச்கோ அமைப்பினால் உலகின் சிறந்த கல்வியாளர்களின் பட்டியலில் குறிப்பிடப் பெற்றவர் இவர்.இவர் எழுதிய "கல்விக்குழுவும்,அதன் பிறகும்"என்ற நூலில் இந்தியக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று கோத்தாரி குழு எதிர்பார்த்ததோ அந்த மாற்றங்கள் நடந்ததா என்று திறந்த மனதுடன் நேர்மையாக ஆராய்கிறார்.தான் தயாரித்ததுதான் என்றாலும் அந்தக் குழு அறிக்கையைக் கூட விமர்சன பூர்வமாக அணுகி,அதன் பலவீனங்களை,விடுபடல்களை,-ஏன்,அதன் போதாமையைக் கூட வெளிப்படையாக எழுதி இருக்கிறார்.அதன் முன்னுரையை எழுதி இருப்பவர் மொல்கம்  எஸ்.அதிசெசய்யா.அவர் தன முன்னுரையில்,"எந்த ஒரு நாட்டிலும் அதனுடைய கல்வி வாழ்க்கை என்பது படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் போன்றது;அது கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்ரைச் செழுமையான உள்ளேடு ஆகக் கொண்டு உயிர்ப்புள்ள நீர்ப் பெருக்காயிப் பாயும்"என்கிறார்.நமது இந்தியக் கல்வித்துறையின் வரலாற்றைத்  திரும்பிப் பார்த்தல் அவசியம்.அவ்வாறு பார்க்கும் பொது அது மேற்க்கண்டவாறு தொடர் நீரோட்டம் ஆக இருப்பதை உணர முடியும்.ஆனால் படிப்படியாக அது மாறிக் கொண்டே வந்திருக்கிறதா,கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்றைச் செழுமையான உள்ளீடாக அது தன்னுள் உள்வாங்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இன்றும் நம் நாட்டுப் பெண்களில் கிட்டத் தட்ட நாற்பது சதவீதம் பேர் படிக்காதவர்கள் என்பதை நினைக்கும் வேளையில் மனம் மிகவும் கனமாகி விடுகிறது.இந்தச் சூழலில்தான் பிறரைப் படிக்க வைக்க பஸ் நிலையத்தில் படுத்துத் தூங்கிக் கூட சேவை செய்யும் அசாதாரணமான சேவையாளர்களை நன்றியுடன் வணங்க வேண்டிஇருக்கிறது................!

No comments:

Post a Comment