Friday, October 16, 2009

அந்நியனும் சில எதிர்வினைகளும்..

நண்பர் மாதவராஜின் ப்ளாக் ஸ்பாட்டில் சற்று முன் பார்த்த போஸ்ட் பற்றி கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது. தமிழரான வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றது பற்றி பெருமிதம் அடைந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான தமிழ மக்கள் அனுப்பி வருகிற மின்னஞ்சல் கடிதங்களால் எரிச்சல் அடைந்து அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒரு விவாதப் புயலையே கிளப்பி விட்டன.ஏராளமான நண்பர்கள் வெட்டியும் ஒட்டியும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். என் கருத்திற் வெங்கியின் எரிச்சல் வேறு விதமாகப் புரிந்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு  இருக்கிறது என்பதே! ஒருவர் தன பிறந்த மண் குறித்துப் பெருமிதம் அடைவது என்பது பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்ட ஒன்று என்று தோன்றுகிறது. வெங்கியின் இந்த வெளிப்பாடிற்குப் பின்னால் அவர் தரப்பு நியாயங்கள் என்ன என்று தெரியவில்லை.

இந்த மண்ணில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேருக்கு அது பற்றிப் பெருமிதம் இருக்கிறது? ஆழமாக யோசிக்கையில் இன்று பலருக்கு இது பற்றி யோசித்து எதிர்வினையற்ற அவ்வளவு வசதியான வாழ்க்கை அமைந்திருக்கிறதா என்ன? வெங்கியின் கருத்து சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்க இதை விடவும் பொறுப்பற்ற முறையில் எழுதிக் கொண்டிருக்கும், ஏற்க்கெனவே எழுதிய பலர் விசயத்தில் இம் மாதிரி எதிர்வினைகள் வந்தனவா? உயரும் விலைவாசி பற்றி எழதும் நம் சக எழுத்தாளர்கள் பற்றி சாறு நிவேதிதா ஒரு முறை மிக மோசமாக நக்கல் செய்த போது எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் அது பற்றிக் கோபப் பட்டார்கள்? நமது மண்ணில் வாழ்ந்து கொண்டு நமது மொழியில் எழுதிக்கொண்டு நமது மக்களின் வாழ்வியலைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஜெயமோகன்கள் பற்றி எத்தனை பேர் கொதித்து எழுந்து எதிர்வினையாற்றினார்கள்? மிகவும் சுலபமாக இது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் எதுவுமுமே நடக்காதது போலத் தானே பலரும் இருந்திருக்கிறார்கள்? எங்கோ வாழ்ந்து கொண்டு தன ஆராய்ச்சியின் வெற்றியால் தலை கனத்துப் போனவரின் கருத்து என்று வெங்கியின் அலுப்பைப் புறம் தள்ளி விட்டு நாம் நமது மண்ணில் நம்மிடையே வாழ்ந்து கொண்டே நம் மக்களின் வாழ்வியல் கூறுகள் பற்றியோ, அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியோ கவலைப் படாமல் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கும் "மாபெரும் எழுத்தாள சிகரங்களின்" தோலை உரிக்க வேண்டிய கடமையின்பால் கவனத்தைத் திருப்புவது நல்லது  

No comments:

Post a Comment