Thursday, October 22, 2009

இசையுடன் இசைந்த வாழ்க்கை...

இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மன்னா தே குறித்து இன்று வந்த பிரன்ட் லைன் இதழில் பர்தா சட்டேர்சு எழுதிய கட்டுரையும் அவருடனான நேர்காணலும் வெளி வந்துள்ளன.ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களில் இவர் ஒரு தனி ரகமானவர் ஆகத் தோன்றுகிறது. இப்போது இவர் வயது தொண்ணூறு.இந்த வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதை அடைந்திருக்கிற இவருக்கு அது ஒன்றும் துள்ளிக் குதித்து மகிழ்கிற ஒரு விசயமாகத் தோன்றவில்லை. அந்த மனநிலையை நான் எப்போதோ தண்டி விட்டேன் என்கிறார்.

தான் பாடிய ஏதோ ஒரு மெலோடியை மும்பை ,பெங்களூர் போன்ற ஒரு பெருநகரின் வீதிகளில் யாரேனும் ஒரு மனிதன் ஹும்மிங் செய்வதைக் கேட்பதுதான் பால்கே விருதை விடப் பெரிய விருது என்கிறார் மன்னா.ராக அடிப்படையில் அமைந்த கிளாசிக்கல் பாடல்களுக்குத்தான் இவர் பொருந்தி வருவார் என்று ஒருஎண்ணம் அன்று நிலவி வந்தது இவரின் வளர்ச்சியில் ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது போலும். அவரது மனைவி ஒரு கேரளப் பெண்.அவரின் வார்த்தைகளில் சொன்னால் "மன்னா தன இதயத்தில் இருந்து பாடுகிறார்" என்பதே சரி. மற்றவர்கள் நினைத்து போல தான் ஒன்றும் முற்ற முழுக்க கர்நாடிக் கிளாசிக்கல் பாடகர் அல்ல என்கிறார் இவர்.உஸ்தாத் படே குழாம் அலிகான், ப்ம்சென் ஜோஷி அல்லது அமிர்கான் போலத் தான் முழுமையான கிளாசிகல் பாடகர் அல்ல என்பது இவரின் கணிப்பு."நான் அதில் அப்படி ஆர்வமும் கொண்டிருக்கவில்லை" என்கிறார்.




சங்கர் ஜைகிசன் ,சலீல் சௌதரி ,க.ராமச்சந்திர போன்றவர்களின் இசையமைப்பில் தான் பாடிய பெருவெற்றி பெற்ற பாடல்கள் பற்றி மன்னாவும் கட்டுரையாளர் பர்தாவும் நிறையத் தகவல்களை தந்துள்ளனர். தொண்ணூறு வயதிலும் தான் சவால்களை ,சோதனை முயற்சிகளை தான் விரும்புவதாகவும்,தான்உயிருடன் இருக்கும் வரை பாடுவதைத் தொடரப் போவதாகவும் சொல்கிறார்.என்ன ஒரு மன உறுதி/நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது அல்லவா?

1 comment: